No menu items!

சிவகார்த்திகேயன் To தனுஷ் – லண்டனில் ப்ரியங்கா மோகன்

சிவகார்த்திகேயன் To தனுஷ் – லண்டனில் ப்ரியங்கா மோகன்

பூஜா ஹெக்டே, மாளவிகா மோகனன் என்று ஃபேஷன் பரேட் நடிகைகளுக்கு இடையில் கொஞ்சம் மாடர்ன் கொஞ்சம் பாரம்பர்யம் என்ற லுக்கில் இருக்கும் பிரியங்கா மோகன் இன்றைய தமிழ் இளைஞர்களின் இதயத் துடிப்பு.

தொடர்ச்சியாக சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் படங்களில் நடித்து பிறகு சூர்யா ஜோடி என்று உச்சத்துக்கு உயர்ந்தவர் இப்போது தனுஷ்க்கு ஜோடியாக கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தனுஷ் படத்துக்குப் பிறகு அவரது மார்கெட் இன்னும் வேகமெடுக்கும் என்று அவரது கால்ஷிட்டுக்காக காத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

ஷூட்டிங் இன்னும் துவங்காததால் லண்டனுக்கு ஜாலி பயணம் சென்றிருக்கிறார். அங்கு எடுத்துள்ள படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

பொதுவாய் சிவகார்த்திகேயனின் ஹீரோயின்கள் பெரிய ரவுண்ட் வர மாட்டார்கள் என்பது இண்டஸ்ட்ரி பேச்சு. ப்ரியா ஆனந்த், ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா, அனு இம்மானுவேல், கல்யாணி பிரியதர்ஷன் என மார்க்கெட் குறைந்தவர்களின் பட்டியல் நீளம். இதில் தப்பியவர் கீர்த்தி சுரேஷ். இப்போது பிரியங்கா மோகன் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கிறார்கள். ப்ரியங்கா மோகன் பெரிய ரவுண்ட் வருவார் என்பது இவர்கள் கணிப்பு.

அரபிக் குத்து – 100 மில்லியன் பாடல்

விஜய் நடித்து வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தின் அரபிக் குத்து பாடல் சூப்பர் ஹிட் என்பது எல்லோருக்கும் தெரியும். அனிருத் இசையமத்தை இந்தப் பாடல் ஸ்பாட்டிஃபை இணையதளத்தில் 100 மில்லியன் தடவை கேட்கப்பட்ட பாடலாக சாதனை செய்திருக்கிறது. இந்த சாதனையை செய்யும் முதல் தென்னிந்திய பாடல் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 100 மில்லியன் என்றால் பத்து கோடி முறை இந்தப் பாடல் கேட்கப்பட்டிருக்கிறது.

சமந்தாவின் இந்தி கவலை

தமிழில் அறிமுகமாகி தெலுங்கில் சூப்பர் ஹிட் நட்சத்திரமாக இருக்கிற சமந்தாவின் ஆசை இந்திப் படங்களில் நடித்து பான் இந்தியன் நட்சத்திரமாக மாற வேண்டும் என்று. அதற்காக மும்பை சென்று இந்திப் பட முயற்சிகளில் இறங்கினார். வெப் சீரிசில் நடித்தார். கரன் ஜோஹர் தயாரிப்பில் ஒரு படத்தில் ஒப்பந்தமானார். அதனைத் தொடர்ந்து இந்தி திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டார். கரண் ஜோஹரின் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் அக்ஷய் குமாருடன் கலந்துக் கொண்டு மும்பை நட்சத்திரங்களுடன் ஐக்கியமானார். அடுத்து சல்மான் கான் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்ற செய்தி காற்று வாக்கில் பரவியது.

இனியெல்லாம் சுகமே என்றிருந்த போது சல்மான் கானுடன் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டது என்று தகவல் வந்திருக்கிறது.

சமந்தாவுக்கு மும்பை கதவுகள் எப்போது முழுமையாக திறக்கும் என்று தெரியவில்லை.

நடிகைகளின் தீபாவளி பார்ட்டி

தமிழ்நாட்டில் நட்சத்திரங்கள் தீபாவளி பார்ட்டி கொடுப்பதில்லை…ஆனால் பாலிவுட்டில் தீபாவளி விருந்து என்பது மிகப் பிரபலம் எந்த நட்சத்திரத்தின் பார்ட்டி பிரமாண்டமாக பல நட்சத்திரங்கள் கலந்துக் கொண்ட பார்ட்டியாக இருந்தது என்பதில் போட்டி உண்டு. இந்த முறை கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு நடக்கும் தீபாவளியாக இருப்பதால் ஒரு வாரமாக மும்பையில் நட்சத்திரங்களின் தீபாவளி பார்ட்டி களை கட்டுகிறது.

ஐஸ்வர்யா ராய், ரகுல் பிரீத் சிங், ஜெனிலியா, ஸ்ரேயா, காத்ரினா கைஃப், மாதுரி தீக்சிட் என அத்தனை நட்சத்திரங்களும் தீபாவளி பார்ட்டிகளில் கலர்ஃபுல் உடைகளில் கலக்கி வருகிறார்கள்.

யார் பார்ட்டி சிறந்து இருந்தது என்பது தீபாவளி முடிந்ததும் தெரிந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...