No menu items!

சிவகார்த்திகேயன் மார்க்கெட் சரிந்ததா?

சிவகார்த்திகேயன் மார்க்கெட் சரிந்ததா?

‘நம்ம வீட்டுப்பிள்ளை’ என்ற எல்லோருக்கும் பிடிக்கிற ஒரு இமேஜில் இருந்த சிவகார்த்திகேயனை வெளுத்து வாங்கிவிட்டது இசையமைப்பாளர் இமானின் வார்த்தைகள்.

‘சிவகார்த்திகேயன் செய்தது துரோகம். குழந்தைகள் நலன் கருதி அந்த துரோகம் பற்றி சொல்ல முடியவில்லை’ என்று இமான் சொன்னதுதான் தாமதம், இணையத்தில் சிவகார்த்திகேயன் பற்றி எக்கச்சக்கமான கமெண்ட்கள்.

ஆனாலும் சிவகார்த்திகேயன் இது குறித்து வாயே திறக்கவில்லை.

இதற்குப் பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ திரைப்படம், வருகிற பொங்கல் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தை ‘நேற்று இன்று நாளை’ பட இயக்குநர் ஆர். ரவிகுமார் இயக்கி இருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

பொங்கல் நெருங்கி இருப்பதால், ‘அயலான்’ வியாபாரம் இப்பொழுது தொடங்கி இருக்கிறது. திரையரங்க வெளியீட்டு உரிமை வியாபார பேச்சுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

சென்னை, செங்கல்பட்டு, வடக்கு தெற்கு ஆற்காடு என இந்த மூன்று ஏரியாக்களும் சுமார் 19 கோடி வரை வியாபாரமாகி இருக்கிறதாம். திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஏரியாக்கள் சுமார் 11 கோடியும், கோவை, சேலம் ஏரியாக்கள் சுமார் 10 கோடி வரையும் வியாபாரமாகி இருப்பதாக தமிழ் சினிமா வியாபார வட்டாரத்தில் பேச்சு அடிப்படுகிறது.

முக்கியமாக மினிம ம் கியாரண்டி முறையில் வியாபாரம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. ஒரு சில பகுதிகள் மட்டும் டிஸ்ட்ரிபியூஷன் முறையில் வியாபாரம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

வியாபார எண்ணிக்கையைக் கூட்டி கழித்துப் பார்த்தால் சுமார் 40 கோடி வரை வியாபாரமாகி இருக்கிறதாம். இது சொல்லிக்கொள்கிற மாதிரியான ஒரு நல்ல வியாபாரம் என்கிறார்கள்.

இதை வைத்து சிவகார்த்திகேயனின் இமேஜில் பெரிய டேமேஜ் இருப்பதாக தெரியவில்லையோ என்று கிசுகிசுக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...