No menu items!

சித்தார்த் அதிதிராவ் ஹயாத்ரி ஜோடிக்கு பத்திகிச்சு!

சித்தார்த் அதிதிராவ் ஹயாத்ரி ஜோடிக்கு பத்திகிச்சு!

சினிமாவில் அவ்வப்போது ஏதாவது ஒரு காதல் ஜோடி பற்றிய கிசுகிசுக்கள் கிளம்பும். அவர்களும் இது குறித்து வாயைத் திறக்க மாட்டார்கள். அப்படியே தங்களைப் பற்றிய காதல் கிசுகிசுக்கள் பற்றி பேசினால், நாங்கள் நல்ல நண்பர்கள் என்று நழுவி விடுவார்கள். பின்னொரு நாளில் இவர்களது திருமணம் குறித்த அறிவிப்பை இதுவரை எதுவும் நடக்காதது போல் வெளியிடுவார்கள்.

இந்த மாதிரியான காதல் கிசுகிசுவியில் இப்போது சிக்கி இருப்பது சித்தார்த் – அதிதிராவ் ஹயாத்ரி ஜோடி. இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள். ஒன்றாக ஷாப்பிங் போகிறார்கள். ஒன்றாக சுற்றுலா செல்கிறார்கள் என்று இதுவரையில் ஏகப்பட்ட கிசுகிசுக்கள்.

இதற்கு காரணம் இவர்கள் இருவரும் அஜய் பூபதி இயக்கத்தில் நடித்த ‘மகா சமுத்திரம்’ படம். இதில் இவர்கள் இருவருக்குமிடையில் இருந்த கெமிஸ்ட்ரியை பார்த்து கமெண்ட் அடிக்காதவர்களே இல்லை. அந்தளவிற்கு அசல் கெமிஸ்ட்ரி இருந்தது. அந்தப் படம் சரியாக ஓடவில்லை, ஆனால் இவர்களுக்கு காதல் மீட்டர் விறுவிறுவென ஓட ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள்.

ஆனால் இவர்கள் இருவரும் தங்களுக்கு இடையே இருக்கும் உறவு பற்றியோ, நட்பைப் பற்றியோ எதுவும் கூறாமல் இருந்துவருகின்றனர்.

ஆனால் இந்த புத்தாண்டின் நள்ளிரவில் அவர்கள் செய்த ஒரு காரியம் இப்போது கிசுகிசுக்களுக்கு தீனிப்போடும் வகையில் அமைந்திருக்கிறது. அதிதியும் சித்தார்த்தும் இருக்கும் புகைப்படமொன்றை சமூக ஊடகத்தில் வெளியிட்டு, “Happy blessed grateful ✨🧚‍♂️🦄🌈 To magic happiness love laughter unicorns rainbows and fairy dust #happynewyear to you all 2024” என ஒரு கமெண்ட்டையும் தட்டிவிட்டிருக்கிறார்.

இதனால் இவர்கள் இருவருக்குமிடையில் காதல் பத்திகிச்சு. அதை நாசூக்காக சொல்லவே இந்த புகைப்படத்தை அதிதி வெளியிட்டு இருக்கிறார் என்று ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள் நெட்டிசன்கள்.


ஹீரோவாகும் லோகேஷ் கனகராஜ்!

இன்றைய நிலவரப்படி தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய அளவிலும் அதிகம் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

’லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்’ என இவரது படங்களின் கதாபாத்திரங்களை தனது மற்றப் படங்களிலும் இவர் பயன்படுத்தி வருவது இவர் மீதான ஆர்வத்தை நடிகர்களிடையே உருவாக்கி இருக்கிறது.

இப்படி பல நகாசு வேலைகளை, அடிதடி என அதிரடி ஆக்‌ஷனுடன் பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து படமெடுப்பதால் இவர் மளமளவென உச்சத்திற்கு வந்திருக்கிறார்.

என் வாழ் நாளில் நான் பத்து படங்களை மட்டுமே இயக்குவேன். அதன் பிறகு டைரக்‌ஷன் செய்ய மாட்டேன் என்று முன்னறிவிப்பு செய்திருக்கிறார். ஒரு வகையில் இவரது பட வரிசையைப் பார்த்தால் அடுத்த நாலைந்து வருடங்களுக்கு இவரது கால்ஷீட் நிரம்பி வழிகிறது.

அடுத்து ரஜினியின் படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கி இருக்கும் லோகேஷ் ஏப்ரலில் அப்பட ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டு உள்ளார்.

ரஜினி படத்தை முடித்த உடன் இவர் கார்த்தியை வைத்து ‘கைதி 2’ படத்தை இயக்க திட்டமிட்டு உள்ளார். இதற்கு அடுத்து இவரது பட வரிசை ‘விக்ரம் 2’, ‘லியோ 2’ அடுத்து ‘ரோலெக்ஸ்’ என அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இயக்கும் படங்களை கை வசம் வைத்திருக்கிறார்.

இவைத் தவிர தெலுங்கில் அல்லு அர்ஜூன், ஜூனியர் என்.டி.ஆர் என அங்குள்ள ஹீரோக்களை வைத்து படமெடுக்கும் பேச்சுவார்த்தையும் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் லோகேஷின் கணக்குப்படி அடுத்த 5 படங்களின் பட்டியல் தயாராகி விட்டது.

இப்படியொரு சூழலில் அவர் ’ஜி ஸ்குவாட்’ என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படத்தயாரிப்பிலும் இறங்கியிருக்கிறார். இவரது கூடவே இருக்கும் நண்பர்களுக்கு திரைப்பட வாய்ப்புகளை வழங்குவதற்காகதான் இந்த ஜி ஸ்குவாட் என்றும் வெளிப்படையாக சொல்லிவிட்டார் லோகேஷ்.

இயக்குநர், தயாரிப்பாளர் என இரு அவதாரங்களையும் எடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்து ஒரு நடிகராகவும் களமிறங்க இருக்கிறார் என்ற கிசுகிசு கோலிவுட்டில் மிக வேகமாகப் பரவி வருகிறது.

சூர்யாவை வைத்து ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்குராவின் உதவி இயக்குநர் ஒருவர் இயக்கவிருக்கும் படத்தில் லோகேஷ் கனகராஜை கதாநாயகனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இதில் லோகேஷ் கனகராஜ் ஒரு நடிகராக மட்டுமே அறிமுகமாக இருக்கிறாராம். இது குறித்த அறிவிப்பு வெகுவிரைவிலேயே வெளிவரலாம் என்று கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...