No menu items!

Samantha Health – பிரச்சினைக்கு என்ன காரணம்?

Samantha Health – பிரச்சினைக்கு என்ன காரணம்?

’ஊ சொல்றீயா மாமா’ பாடலுக்கு சமந்தா போட்ட ஆட்டத்தைப் பார்த்து ஊர் கண் முழுவதும் அவர் மேல் பட்டுவிட்டது போல.

கடந்த மூன்று மாதங்களாக சமந்தா மிஸ்ஸிங்.

தூங்க விழிக்க சாப்பிட மறப்பாரோ இல்லையோ ஆனால் தனது சோஷியல் மீடியா அக்கெளண்ட்டில் ரீல்களை சரமாரியாக ஏற்ற சமந்தா இதுவரை மறந்தது இல்லை. ஆனால் அவர் கடந்த இரு மாதங்களாகவே தனது சோஷியல் மீடியா அக்கெளண்ட்டிற்கு வராமல், கட் அடித்த போதே ‘சமந்தாவுக்கு ஏதோ பிரச்சினை’ என்ற கமெண்ட்கள் கிளம்பின.

ரசிகர்களின் யூகம் சரிதான் என்பதை இப்போது சமந்தாவே ஒப்புக்கொண்டிருக்கிறார்.

சருமப் பிரச்சினைக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். அங்கு ஒரு மாதம் சிகிச்சை. சருமப் பிரச்சினை குறைந்ததும் ஷூட். இப்படிதான் சமந்தா வட்டாரம் தெரிவித்ததாக ஆரம்பத்தில் பேச்சு அடிப்பட்டது

ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு சமந்தா போட்ட ஸ்டேட்டஸ் அணுகுண்டு ரகம்.
’யசோதா பட த்தின் ட்ரெய்லருக்கு நீங்கள் காட்டிய வரவேற்பு நான் எதிர்பார்த்ததை விட அதிகம். இந்த அன்பும் உறவும்தான் என்னை உங்களோடு இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள வைத்திருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு எனக்கு ஆட்டோ இம்ப்யூன் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பிரச்சினையை மயோசிடிஸ் என்பார்கள். எனக்கு உண்டான பிரச்சினை ஓரளவுக்கு குறைந்த பின்னரே அதைப் பற்றி இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

‘எனக்கு மயோசிடிஸ் பிரச்சினை இருக்கிறது. சிகிச்சையினால் சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் நினைத்ததைவிட மயோசிடிஸ் பிரச்சினை இழுத்து கொண்டே போகிறது. மீண்டு வர நாட்களாகும். ஆனால் இதிலிருந்து நான் மீண்டு வந்து விடுவேன் என மருத்துவர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். என் வாழ்க்கையில் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் நல்ல நாட்கள் இருந்திருக்கின்றன. அதேபோல் மோசமான நாட்களும் கடந்திருக்கின்றன. இதெல்லாம் கடந்து விட முடியுமா என்று யோசித்த போது அவை கடந்து போயிருக்கின்றன. இப்போது ஆட்டோ இம்ப்யூன் பிரச்சினையிலிருந்து மீண்டுவர நாட்கள் நெருங்கிவிட்டது என நம்புகிறேன். உங்கள் எல்லோரையும் நான் மனமார நேசிக்கிறேன். இதுவும் கடந்து போகும்’ என்று தட்டிவிட்டார்.

அந்த ஸ்டேட்டஸில் பதிவேற்றிய புகைப்படத்திலும் கூட சமந்தா தனது முகத்தைக் காட்டவில்லை. டப்பிங் பேசிக் கொண்டிருப்பவருக்கு சலைன் வேறு ஏறிக்கொண்டிருந்தது.

அந்தளவிற்கு பிரச்சினையா என்று கோலிவுட்டை விட டோலிவுட் பதறிப் போயிருக்கிறது.

சமந்தாவுக்கு மயோசிடிஸ் பிரச்சினை வர என்ன காரணம்?
பொதுவாகவே ஜிம்மில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்பவர்களுக்கு இப்பிரச்சினை வரக்கூடும் என்கிறார்கள். அதாவது தொடர்ந்து வொர்க் அவுட் செய்பவர்கள், அதிலிருந்து மீள்வதற்கு அவசியமான அம்சங்களையும் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மயோசிடிஸ் பிரச்சினை வரலாம்.

அடுத்து அதிகப்படியான மது மற்றும் போதை ஆகியவற்றினாலும் கூட இப்பிரச்சினை வர வாய்ப்புகள் உள்ளன. அதாவது அளவுக்கு அதிகமாக மது குடித்தாலோ, போதை ஏற்றிக்கொண்டாலோ ஆட்டோ இம்ப்யூன் நிலை உண்டாகலாம் என மருத்துவ இதழ்கள் கூறுகின்றன.

இப்படி காரணங்கள் சொல்லப்பட, சமந்தா விஷயத்தில் வொர்க் அவுட்டினால் ஆட்டோ இம்ப்யூன் பிரச்சினை உண்டாகியிருக்க கூடும் என்கிறார்கள்.
வொர்க் அவுட்டின் போது பல கிலோ எடையுள்ள டெட்லிஃப்ட்களை அசால்ட்டாக தூக்குவதை வழக்கமாக வைத்திருந்தார் சமந்தா.

அதே நேரம் விவாகரத்து அவரை ரொம்பவே பாதித்து இருந்தது என்கிறது அவருக்கு நெருங்கிய நட்பு வட்டம். இதனால் மன உளைச்சலில் சமந்தா இருந்து வந்ததாகவும் சொல்கிறார்கள்.

மற்றொரு பக்கம், தற்போது வெளியாக உள்ள ‘யசோதா’ படத்திற்காக அட்ரனலினை சுரக்க வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்ததும், வருண் தவானுடன் நடிக்கும் வெப் சிரீஸூக்காக சண்டைக் காட்சிகளில் ரொம்பவே மெனக்கெட்டதும் முக்கிய காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

வொர்க் அவுட், ஆக்‌ஷன் காட்சிகளுக்கான ஷூட் என பிஸியாக இருந்த போது சமந்தாவுக்கு தசை பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள். அதை சரியாக கவனிக்காமல் விட்டிருந்தால் கூட இப்படி தசைகள் செயலிழக்கும் வாய்ப்புகள் அதிகம்.

சமந்தாவுக்கு மட்டும்தான் இந்த ஆட்டோ இம்ப்யூன் பிரச்சினையா என்றால், மருத்துவர்கள் ஒரு பட்டியலை நீட்டுகிறார்கள்.

பிரபல பாடகி செலேனா கோமெஸ், ஜிஜி ஹேடிட், லேடி காகா, நிக் ஜோனாஸ், சல்மான் கான் என இந்த பட்டியல் நீள்கிறது.

பதற வைக்கும் ஆட்டோ இம்ப்யூன் பிரச்சினையான மயோசிடிஸ் என்றால் என்ன?


நம்முடைய உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு சக்தியில் இன்ஃபெக்‌ஷன் ஆனால் உண்டாவதே மயோசிடிஸ்.

சமந்தாவுக்கு பாதிப்பை உண்டாக்கி இருக்கும் மயோசிடிஸ் கீழ்கண்ட இரண்டு வகைகளில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்கிறார்கள்.

முதலாவது வகை பாலிமயோசிடிஸ்.

நம்முடைய உடலில் இருக்கும் பல்வேறு வகையான தசைகள் இந்த பாலிமயோசிடிஸினால் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக தொடை, இடுப்பு, தோல் பகுதியில் இருக்கும் தசைகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. பெண்களுக்கு இந்த பிரச்சினை அதிகம் ஏற்படுகிறது. 30 முதல் 60 வயதுடையவர்களுக்கு இப்பிரச்சினை அதிகம் வர வாய்ப்புகள் இருக்கின்றன.

தசைகளில் வலி, தசை வலுவிழந்து போவது, உட்காருவதில் சிரமம், உணவை முழுங்குவதில் சிக்கல் போன்ற பிரச்சினைகள் எழலாம்.

இரண்டாவதாக டெர்மடோமயோசிடிஸ்.

இந்த பிரச்சினையால் உடலில் தடிப்புகல் உண்டாகலாம். பொதுவாக பெண்களை இப்பிரச்சினை வெகுவாக தாக்கும். சில நேரங்களில் குழந்தைகளையும் கூட இது பாதிக்கக்கூடும்.

இதன் அறிகுறிகள் பாலிமயோசிடிஸ் போன்ற இருந்தாலும், சருமத்தையும் இது பாதிக்கக்கூடும். தசையில் வலி உண்டாவதற்கு முன்பாக, சிவப்பு, பர்ப்புள், கருப்பு நிற தடிப்புகள் வரலாம். கன்னம், மூக்கு, இமைகளில் தடிப்புகள் உருவாகும். அதே போல் முட்டி, மார்பின் மேற்பகுதி, இடுப்பு பகுதிகளில் இவை வரக்கூடும். இந்த தடிப்புகள் பார்ப்பதற்கு உகந்ததாக இருக்காது. கூடவே அரிப்பு இருக்கும்.

இப்படியொரு கடினமான சூழலில் இருக்கும் போது அவருக்கு ஆதரவாக, மீண்டுவர தெலுங்கு நட்சத்திரங்கள் சமூக ஊடகங்களில் தங்களது அக்கறையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ஆனால் அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யாவோ அல்லது முன்னாள் மாமனார் நாகார்ஜூனாவோ இது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆறுதல் கூறவில்லை.

மீண்டு வாருங்கள் சமந்தா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...