No menu items!

பாதாளத்தில் ரஜினியின் மார்கெட்!

பாதாளத்தில் ரஜினியின் மார்கெட்!

இந்திய அளவில் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுவது ரஜினிகாந்த் மட்டுமே. இவரது படம் வெளியானால், மற்ற நடிகர்கள் தங்களது படங்களின் ரிலீஸை அப்படியே மூன்று வாரங்கள் தள்ளி வைத்துவிடுவது வழக்கம். காரணம் ரஜினியின் மார்கெட் அப்படி.

ஆனால் இன்று ரஜினியின் மார்கெட் ஆட்டம் காண்பதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

அப்படியா என ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆமாம் என்கிறது தெலுங்கு சினிமா வட்டாரம்.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘ஜெயிலர்’ படம் வெளியாக தயாராகி கொண்டிருக்கிறது. இங்கே தமிழில் தலைவர் படம் என்ற கொண்டாட்டம் ஆரம்பமாகி இருக்கிறது.

ஆனால் தெலுங்குப் பக்கம் ‘ஜெயிலர்’ படத்தின் வியாபாரத்தை ஆரம்பிக்க பேச்செடுத்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றமாம்.

’ஜெயிலர்’ பட திரையரங்கு உரிமைக்கு 11 கோடிகள் கேட்கிறார்களாம். ஆனால் இந்த விலை கொடுத்து வாங்க தெலுங்கு சினிமா விநியோகஸ்தர்கள் யாரும் முன்வரவில்லையாம்.

’ரோபோ’, ‘சந்திரமுகி’, ‘அருணாசலம்’ என ரஜினியின் படங்கள் தெலுங்கில் வசூலை அள்ளிக்குவித்தன. இதனால் ரஜினிக்கு தெலுங்கிலும் நல்ல மார்கெட்.

’சந்திரமுகி’ படத்திற்கு தெலுங்கு டப்பிங் உரிமை 22 லட்சத்திற்கு போனது. அடுத்து ‘ரோபோ’ படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை 25 கோடியாக எகிறியது.

இந்நிலையில் ரஜினி நடித்து தெலுங்கில் வெளியான ‘தர்பார்’, ‘பேட்ட’ போன்ற படங்கள் அங்கு எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அதேபோல் ‘காலா’, ‘கபாலி’ போன்ற படங்களும் பெரிதாக எடுப்படவில்லை.

இப்படி அடுத்தடுத்து ரஜினி படங்கள் அங்கே எடுப்படாததால் தெலுங்கு விநியோகஸ்தர்களிடையே இப்போது தயக்கம் இருக்கிறதாம்.

இதனால்தான் ‘ஜெயிலர்’ தெலுங்கு டப்பிங் உரிமையை 5 அல்லது 6 கோடிக்கு மேல் கொடுக்கமுடியாது என்கிறார்களாம்.

ரஜினிக்கே இந்த நிலைமையா என்ற கலவரமாகி இருக்கிறது கோலிவுட் ஹீரோக்கள் வட்டாரம்.


தென்னிந்திய சினிமாவின் டார்லிங் த்ரிஷா!

’பொன்னியின் செல்வன்’ படங்கள் கொடுத்த மவுசு, த்ரிஷாவை மொழிகள் கடந்து நடிக்கத் தூண்டியிருக்கிறது.

இருபது வருடங்களாக கதாநாயகியாகவே நடித்து கொண்டிருக்கும் த்ரிஷாவின் முகம் ரொம்பவே பழக்கப்பட்டு, பழைய முகமாகி இருந்தாலும், கூட இப்பொழுது வாய்ப்புகள் வந்து குவிகிறதாம்.

விஜயுடன் ‘லியோ’ படத்தில் நடிக்கும் த்ரிஷா, அடுத்து மலையாள சினிமா பக்கம் போகிறார். அங்கு டோவினோ தாமஸ் நடிக்கும் ‘இன்ஃபினிட்டி’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ‘லியோ’ ஷூட்டிங் முடிந்ததும், செப்டெம்பரில் இந்த மலையாள பட ஷூட்டிங்கில் த்ரிஷா கலந்து கொள்ள இருக்கிறார்.

இந்தப்படத்தில் த்ரிஷாவுக்கு ஆக்‌ஷன் காட்சிகளும் இருக்கிறது என்கிறார்கள். இதனால் 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

அப்படியே கேரளாவிலிருந்து, ஹைதராபாத்திற்கு பறக்க இருக்கிறார் த்ரிஷா. தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

’ஸ்டாலின்’ படத்திற்கு பிறகு மீண்டும் சிரஞ்சீவியுடன் நீண்ட இடைவெளிக்குப் பின் இணைந்து நடிக்கவிருக்கிறார்.

ஆக தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் அடுத்தடுத்து நடிக்கவிருக்கும் த்ரிஷா தென்னிந்திய சினிமாவில் லேட்டஸ்ட் டார்லிங் ஆக ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.


மும்பையில் குடியேறிய ஆர்யா – சாயிஷா!

சூர்யா – ஜோதிகா ஜோடி தங்களது மகள் மற்றும் மகளுடன் மும்பையில் குடியேறிவிட்டார்கள்.

தங்களது வருமானத்தை மும்பையில் ஜோதிகா பல துறைகளில் முதலீடு செய்து வருகிறார். அதற்காகதான் சென்னையிலிருந்து கிளம்பிவிட்டார்கள் என்று ஒரு பேச்சு அடிப்பட்டது.

ஆனால், சூர்யாவும் ஜோதிகாவும் தங்களது குழந்தைகளின் படிப்பிற்காகவும், அவர்களுக்கு சினிமா நட்சத்திரங்களின் குழந்தைகள் என்ற இமேஜ் வரக்கூடாது, அவர்களுக்கான தனித்துவமும், ப்ரைவசியும் வேண்டுமென்பதற்காக மும்பைக்கு தங்களது ஜாகையை மாற்றிவிட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் இப்போது சூர்யா – ஜோதிகாவை அடுத்து ஆர்யாவும் அவரது மனைவி சாயிஷாவும் மும்பைக்கு மாறிவிட்டார்கள்.

ஆர்யாவுக்கு இப்போது முன்பைப் போல் வாய்ப்புகள் மளமளவென வந்து குவியவில்லை. அடுத்து சாயிஷாவின் குடும்பம் பாலிவுட் பின்னணி உள்ள குடும்பம். மேலும் சாயிஷா குடும்பம் எடுக்கும் முடிவுக்களுக்கு ஆர்யா எந்தவிதமான மறுப்பும் சொல்வது இல்லையாம்.

இதனால் சாயிஷாவின் அம்மாவின் அறிவுரையின் படி மும்பைக்கு ஜோடியாக மாறியிருக்கிறார் ஆர்யா என்கிறார்கள்.

ஷூட்டிங் இருந்தால் மட்டும் மும்பையில் இருந்தது சென்னைக்கு வந்து தங்கி நடிக்க ஆரம்பித்திருக்கிறார் ஆர்யா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...