No menu items!

கட்டாய ஓய்வில் பூஜா ஹெக்டே!

கட்டாய ஓய்வில் பூஜா ஹெக்டே!

‘முகமூடி’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமான பூஜா ஹெக்டேவுக்கு அப்படத்திற்கு பிறகு வாய்ப்புகள் இல்லை.

வேறு வழியில்லாமல் தமிழ் சினிமா மீது வைத்திருந்த நம்பிக்கையோடு, பெட்டி படுக்கையையும் பேக் அப் செய்துகொண்டு சொந்த ஊருக்கே கிளம்பினார். அப்போது போனவர் ‘பீஸ்ட்’ படத்தில் விஜயின் ஜோடியாக நடித்ததன் மூலம், அப்போது கொண்டு போன அதே நம்பிக்கை, பெட்டி படுக்கையுடன் கோலிவுட்டில் வந்திறங்கினார்.

பிரம்மாண்டமான ’பீஸ்ட்’ என்று எதிர்பார்த்த பூஜா ஹெக்டேவுக்கு ஜஸ்ட் லைக் தட் போல போன வேகத்தில் படுத்து கொண்டது.

’பீஸ்ட்’ படத்திற்கு பிறகு சம்பளத்தை ஏற்றலாம் என்று நினைத்து  தன்னை தேடி வந்த வாய்ப்புகளையும் கூட பூஜா ஹெக்டே ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது அது வினையாக மாறியிருக்கிறது.

பூஜா ஹெக்டே கால்ஷீட் டைரியின் அனைத்து பக்கங்களும் ஒரு சொட்டு மை கூட படாமல் ரொம்ப சுத்தமாக, ஃப்ரீயாக இருக்கிறதாம்.

இதனால் பூஜா ஹெக்டே தனது மேனேஜர் மூலம் இங்கே தயாரிப்பாளர்களுக்கு தூது விட்டுக் கொண்டிருக்கிறாராம்.

‘பீஸ்ட்டே ப்ளாஸ்ட் ஆகிடுச்சு. அப்புறம் எப்படி?’ தயாரிப்பாளர்கள் உதட்டைப் பிதுக்குகிறார்கள் என்று பேச்சு அடிப்படுகிறது.

ஜோதிடம் மீது நம்பிக்கையுள்ள பூஜா ஹெக்டே, 2023-ல் மீண்டும் ஒரு ரவுண்ட் வருவேன்/ என் ஜாதகம் அப்படி என்று தனக்கு தானே ஆறுதல் படுத்தி கொண்டிருக்கிறார் என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம்.

தமிழ் சினிமாவில் புதிய ’தல’’?

’தமிழ் பேசினாலும் அவர் தமிழரே, தமிழ் மக்களை நேசித்தாலும் அவர் தமிழரே’ என்ற முழக்கத்திற்கு உதாரணமாக ரஜினிகாந்த், குஷ்பூ என பட்டியல் நீளும்.

இந்த பட்டியலில் பல வருடங்களாக இணைந்திருப்பவர் ‘தல’ தோனி.

சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான பாசத்தில் சென்னை என்றாலே உற்சாகமாகும் தோனி, தமிழ் திரைப்பட தயாரிப்பிலும் கால் பதிக்க இருப்பதாக ஒரு பேச்சு அடிப்படுகிறது.

‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற தனது ப்ரொடக்‌ஷன் பேனருக்கு பெயர் கூட வைத்துவிட்டார் என்கிறார்கள்.

முதல் படமே பெயர் சொல்கிற மாதிரி இருக்கவேண்டுமென தோனி திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

அதற்கு ஒரே வழி,  தல இல்லை தளபதி.  இந்த இருவரில் யாரையாவது வைத்து படமெடுக்க வேண்டும். ரொம்பவே யோசித்த தோனி விஜயை வைத்து தனது திரைப்பட தயாரிப்பை தொடங்குவார் என்ற செய்தி அடிப்பட ஆரம்பித்திருக்கிறது.

தோனியின் ஜெர்ஸியில் இருக்கும் 7, அவருடைய ராசி எண் என்பதால் 7 வருகிற மாதிரியான எண்ணிகையில் படமெடுக்க நினைக்கும் தோனி விஜயின் 70-வது படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாக ஒரு கிசுகிசு அடிப்பட ஆரம்பித்திருக்கிறது.

ஆகமொத்தம் என்னை ’தல’ என்று கூப்பிட வேண்டாம் என்று ஏகே ஒதுங்கி கொள்ள, தமிழ்சினிமாவிற்கு ஒரு புதிய ’தல’ வரப்போகிறார் என எதிர்பார்க்கலாம்.

ஒரே ஸ்டேட்டஸில் சிக்கிய நட்சத்திர ஜோடி

நான்கு நாட்களுக்கு முன்பு பரபரப்பை கிளப்பியது ராஷ்மிகா மந்தானா – விஜய் தேவரக்கொண்டா ஜோடி.

இரண்டு பேரும் தனித்தனியாக மாலத்தீவுக்கு பொழுதைக் கழிக்க சென்றதாக அவர்களது தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் இவர்கள் இருவரும் ஒன்றாக திட்டமிட்டுதான் சென்றிருக்கிறார்கள் என்று நெட்டிசன்கள் பல புகைப்பட ஆதாரங்களுடன் பட்டியலிட்டனர்.

மாலத்தீவில் இருந்தபடியே இளசுகளை உசுப்பேற்றும் படியான கவர்ச்சிகரமான போஸ்களில் தனது புகைப்படங்களை அப்டேட் செய்து கொண்டே இருந்தார் ராஷ்மிகா.

’போஸ் கொடுப்பது எனக்கு பிடிக்கும். மக்களுக்கு பிடிக்கும் போது போஸ் கொடுப்பதில் தவறு இல்லையே’ என்று ராஷ்மிகா தன்னிலை விளக்கம் கொடுத்தாலும், விஜய் தேவரக்கொண்டா மட்டும் ஒரு அப்டேட்டோ அல்லது போட்டோ எதுவும் வெளியிடவில்லை.

5 நாட்கள் கழித்து விடுமுறை கொண்டாட்டத்தை முடித்துவிட்டு இந்தியா வந்த ராஷ்மிகா மும்பை விமானநிலையத்தில் இருந்தபடி ஒரு ஸ்டேட்டஸை தட்டிவிட்டார். ’ஐ அம் பேக்’ என்று சொல்லி முடிக்க, அதே நேரத்தில் விஜய் தேவரக்கொண்டாவும் மும்பை விமான நிலையத்தில் மற்றவர்கள் கண்ணில் பட வகையாக மாட்டிக்கொண்டிருக்கிறது இந்த ஜோடி.

தனித்தனியாக போனது ஓகே. ஆனால் ஒரே நேரத்தில் மும்பைக்கு இரண்டு பேரும் வந்தது எப்படி? என நெட்சன்கள் ஜேம்ஸ்பாண்ட் வேலையைப் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரேயொரு சோஷியல் மீடியா போஸ்ட், இப்போது காதல் கலவரத்தைக் கிளப்பியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...