No menu items!

அரசியலில் இன்று: விஜயகாந்த் மகன் vs ராதிகா சரத்குமார்

அரசியலில் இன்று: விஜயகாந்த் மகன் vs ராதிகா சரத்குமார்

2024 நாடாளுமன்ற தேர்தலில் நட்சத்திர தொகுதியாக விருதுநகர் கவனம் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் பாஜக வேட்பாளராக ராதிகா சரத்குமாரை பாஜக நிறுத்தியுள்ளது. இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக, இத்தொகுதியில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

விஜயகாந்த்தின் சொந்த ஊர் விருதுநகர் தொகுதியில் வருவதால் இத்தொகுதியில் நின்று வெற்றி பெறுவதை தேமுதிக கவுரவப் பிரச்சினையாக பார்க்கிறது. அதே நேரத்தில் விருதுநகரில் பெருவாரியாக உள்ள நாடார் மற்றும் நாயுடு சமூக வாக்குகளை குறிவைத்து ராதிகா சரத்குமாரை பாஜக நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளரை அறிவிக்காத நிலையில் இரு பெரும் அரசியல் நட்சத்திரங்களின் மோதலைக் காண விருதுநகர் தயாராகி வருகிறது.

மகளிருக்கு மாதம் ரூ.3,000 – அதிமுக தேர்தல் அறிக்கையில் உறுதி

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். அந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

மகளிர் உரிமைத் தொகையாக குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்க ஒன்றிய அரசை அதிமுக வலியுறுத்தும்.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு மாற்றுத் தேர்வு முறை. நீட்டுக்கு மாற்றாக +2 தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை சென்னையில் நடத்த வலியுறுத்தப்படும்.

மத்திய அரசின் திட்ட நிதி பகிர்வு விகிதத்தை 75:25 சதவீதமாக மாற்றி அமைக்கவும், மத்திய, மாநில அரசு திட்டங்களுக்கான தொகையை அதிகரிக்கவும், மத்திய அரசு வழங்கும் தமிழ் நாட்டிற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்கவும், அனைத்து மாநிலங்களுக்கும் சம நீதியோடு திட்டங்கள் கிடைக்கவும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

வக்ஃப் வாரியம் பாதுகாக்கப்படும். இஸ்லாமிய சமுதாயத்தின் நியாயமான கோரிக்கையின் பக்கம் அரணாக நிற்கும்.

விவசாயத்தை உயிர்நாடியாக காக்கும் வகையில், தென்னை மற்றும் பனை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதல், விவசாயப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, விதை உற்பத்தி மானியம், விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் மானியத் தொகை ரூ. 6,000த்தை ரூ. 12,000ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

போதைப் பொருள் கடத்திய திமுக நிர்வாகிகள் மீது, சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவரவும், கோயம்புத்தூரிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் சின்னமாக கரும்பு விவசாயி சின்னம் இருந்தது. ஆனால் தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படவில்லை. அச்சின்னம் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்திடம் தாமதமாக விண்ணப்பித்ததால் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படவில்லை என்று காரணம் கூறப்பட்டது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சீமான் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் அண்ணாமலை, தென் சென்னையில் தமிழிசை – பாஜக முழு பட்டியல்

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2 பட்டியல்கள் நேற்று மாலை மற்றும் இன்று மதியம் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலின்படி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தென் சென்னை தொகுதியிலும், நடிகை ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

பாஜக வேட்பாளர்களின் முழு பட்டியல்:
தென்சென்னை – தமிழிசை சவுந்தரராஜன்
மத்திய சென்னை – வினோஜ் பி.செல்வம்
கிருஷ்ணகிரி – நரசிம்மன்
நீலகிரி (தனி) – எல்.முருகன்
கோவை – அண்ணாமலை
நெல்லை – நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி – பொன். ராதாகிருஷ்ணன்
வேலூர் – ஏ.சி.சண்முகம்
பெரம்பலூர்-பாரிவேந்தர்
திருவள்ளூர் – பாலகணபதி
வட சென்னை – பால் கனகராஜ்
திருவண்ணாமலை – அஸ்வத்தாமன்
நாமக்கல் – கே.பி.ராமலிங்கம்
திருப்பூர் – முருகானந்தம்
பொள்ளாச்சி – வசந்தராஜன்
கரூர் – செந்தில்நாதன்
சிதம்பரம் – கார்த்தியாயினி
நாகை – எஸ்.ஜி.எம்.ரமேஷ்
தஞ்சை – எம்.முருகானந்தம்
சிவகங்கை – தேவநாதன் யாதவ்
மதுரை – ராம சீனிவாசன்
விருதுநகர் – ராதிகா சரத்குமார்
தென்காசி – ஜான் பாண்டியன்
புதுச்சேரி – நமச்சிவாயம்

பாமக வேட்பாளர் பட்டியல் – கடலூரில் தங்கர் பச்சான் போட்டி

நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியல் வருமாறு:

திண்டுக்கல் – கவிஞர் ம.திலகபாமா
அரக்கோணம் – வழக்கறிஞர் கே.பாலு
ஆரணி – முனைவர் அ.கணேஷ் குமார்
கடலூர் – தங்கர் பச்சான்
மயிலாடுதுறை – ம.க.ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி – இரா. தேவதாஸ் உடையார்
தருமபுரி – அரசாங்கம்
சேலம் – ந. அண்ணாதுரை
விழுப்புரம் – முரளி சங்கர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...