No menu items!

விஜய் சேதுபதிக்கு அடுத்த அடி!

விஜய் சேதுபதிக்கு அடுத்த அடி!

விஜய் சேதுபதியின் மார்க்கெட் இப்போது எப்படி இருக்கிறது. அவருக்கு சினிமா வியாபாரத்தில் என்ன இடம் இருக்கிறது என்பது ஒரு குழப்பமான விஷயமாகி இருக்கிறது.

இதற்கு காரணம், அவர் கதாநாயகனாக நடித்தப் படங்கள் எதுவும் சமீபகாலத்தில் ஓடவில்லை. வசூலும் பெறவில்லை. ஆனால் அவர் முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்தப் படங்கள் பெரும் வெற்றி பெற்றிருப்பதோடு வசூலிலும் நன்றாக போயிருக்கின்றன.

இதனால்தான் விஜய் சேதுபதியை எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க வைப்பது என்ற குழப்பம் இப்போது நிலவுகிறதாம்.

இந்த பஞ்சாயத்துகளையெல்லாம் புரிந்து கொண்ட விஜய் சேதுபதி, அப்படியே ஹிந்தி ஒடிடி- பக்கம் தனது ஜாகையை மாற்றிக்கொண்டார். தமிழ் ஒடிடி தொடர்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

தமிழில் விஜய் சேதுபதி நடிக்கும் ஒடிடி தொடரை ‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’ படங்களின் இயக்குநர் எம். மணிகண்டன் இயக்குகிறார். இந்த தொடர் ஹாட் ஸ்டாரில் வெளியாக இருக்கிறதாம்.

விஜய் சேதுபதி என்பதால் ஹாட் ஸ்டார் உற்சாகமாக பட்ஜெட்டை ஒதுக்கியதாம். இதனால் உற்சாகமான எம். மணிகண்டன், இந்த ஒடிடி தொடரின் பூஜையை மதுரைக்கு அருகே ஒரு கிராமத்தில் வைத்து நடத்தியிருக்கிறார்.

விஜய் சேதுபதி மற்ற ஒடிடி தொடர்களிலும் நடித்து வருவதால், தனது கால்ஷீட்டை கொஞ்சம் கொஞ்சம் என மாதத்தில் இவ்வளவு நாட்கள் என பிரித்து பிரித்து கொடுத்திருக்கிறார்.

இதனால் விஜய் சேதுபதி கால்ஷீட் இருக்கும் போதே அவரை வைத்து அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எல்லாம் மளமளவென எடுத்து முடிக்கும் வேகத்தில் ஷூட்டிங் நடந்திருக்கிறது.

இப்போது இதுவே எதிர்பாராத பிரச்சினைக்கு வழிவகுத்துவிட்டதாம்.

ஒடிடி தொடர்கள் என்றால், அதைத் தயாரிக்கும் ஒடிடி தளம் ஒவ்வொரு தவணையில் தயாரிப்புக்கான பட்ஜெட்டை ஒதுக்கும். இதனால் முதலில் எடுக்கப்பட்டிருக்கும் எபிசோட்களை பார்த்து அடுத்த தவணையை வழங்கும்.

இந்த நடைமுறையின் அடிப்படையில், இதுவரை எடுத்தவற்றை வைத்து முதல் இரண்டு எபிசோட்களை பார்க்க வேண்டுமென ஒடிடி தளத்திலிருந்து கேட்டிருக்கிறார்கள்.

ஆனால் அது முடியாமல் போயிருக்கிறது. காரணம் விஜய் சேதுபதியின் கால்ஷீட்டை வைத்து அவரது காட்சிகளை மட்டும் எடுத்துவிட்டால், பிறகு மற்ற நட்சத்திரங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துவிடலாம் என சினிமாவுக்கான பாணியில் மணிகண்டன் ஷூட் செய்திருக்கிறார்.

இதனால் எபிசோட் மாதிரி ஒரே கோர்வையாக காட்சிகள் எடுக்கப்படவில்லை. இதனால் ஒடிடி தளம் கேட்டது  போல் முதல் இரண்டு எபிசோட்கள் ஷூட் செய்யவில்லையாம்.

இதுவரை எடுத்த எபிசோட்களை பார்த்து திருப்தி இருந்தால்தான் மீத பட்ஜெட்டை வழங்குவோம் என ஒடிடி தளம் பிடிவாதம் பிடிக்கிறதாம். மணிகண்டன்  அவர்கள் கேட்பது போல் எபிசோட்டாக காட்ட முடியாது என்கிறாராம்.

இந்த பஞ்சாயத்து அப்படியே இழுத்துக்கொண்டுப் போக, இப்போது மீதமிருக்கும் பட்ஜெட்டை கொடுக்காமல் ஒடிடி தளம் மெளனம் காக்கிறதாம். இதனால் ஷூட்டிங் தடைப்பட்டு விட்டதாகவும் சொல்கிறார்கள்.

இதில் நடிப்பவர்கள் இயக்குநர் மற்றும் ஒடிடி தளம் ஆகிய இருவருக்கும் இடையில் சமாதனம் செய்யும் வேலைகளில் இறங்கி இருக்கிறார்களாம். விஜய் சேதுபதி தலையிட்டால், ஒடிடி தளம் கொஞ்சம் இறங்கி வரலாம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இதுவரையில் விஜய் சேதுபதி இது குறித்து வாயைத் திறக்கவே இல்லை என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.


அட்லீயின் அடுத்த டார்கெட் அல்லு அர்ஜூன்!

ஷாரூக்கானை வைத்து அட்லீ இயக்கிய ‘ஜவான்’. ஆயிரத்திற்கும் அதிகமான கோடிகளை வசூலித்து இந்திய சினிமாவில் பல சாதனைகளைத் தகர்த்து விட்டது.

இந்தப் படம் நான் பண்ண காரணம் விஜய் அண்ணா என்றவர் அப்படியே ஷாரூக்கானையும், விஜயையும் வைத்தும் படம் பண்ணும் ஆசை இருப்பதாக கூறினார்.

இதற்கு ஷாரூக்கானும், விஜய்யும் ஓகே சொல்ல வாய்ப்பு அதிகம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இவர்கள் இருவரும் நடிக்கும் படம்தான் அட்லீயின் அடுத்த இலக்கு என்று பேச்சு அடிப்பட்ட நிலையில், இப்போது அவர் ’புஷ்பா’ நாயகன் மீது தனது பார்வையைத் திருப்பி இருக்கிறாராம்.

ஆனால் அட்லீ – அல்லு அர்ஜூன் சந்திப்பு ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது. அப்போதே அட்லீயுடன் இணைய அல்லு அர்ஜூன் விருப்பம் இருப்பதாகவும் கூறியதாக தெரிகிறது.

இங்கே விஜய் தனது அடுத்தப்பட வேலைகளில் மும்முரமாக இருக்க, ஷாரூக்கும் அடுத்தப்பட வேலைகளில் இறங்கிவிட்டாராம். இதனால் அவ்வளவு காலம் சும்மா இருக்க முடியாது என்று கணக்குப் போட்ட அட்லீ, அல்லு அர்ஜூனை வைத்து படமெடுக்கும் முடிவுக்கு வந்திருக்கிறாராம்.

’புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம்  இப்போது திட்டமிடப்பட்டபடி ஷூட்டிங்கில் இருக்கிறது. வருகிற ஆகஸ்ட் 15, 2024-ல் வெளியீடு என்றும் அறிவித்துவிட்டார்கள். அதனால் அடுத்த ஆகஸ்ட் ஷூட்டிங் போக அட்லீ மும்முரமாக கதை வேலைகளில் இறங்கி இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.

அல்லு அர்ஜூன் ஏற்கனவே த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ், அனிமல் பட புகழ் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் அவர்கள் பட த்திற்கு பிறகு அட்லீயுடன் இணைவாரா அல்லது அட்லீயின் கணக்குப்படி அடுத்தப்படத்திலேயே இணைவாரா என்பது குறித்து இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும் என்கிறது அட்லீ வட்டாரம்.

அநேகமாக அட்லீ – அல்லு அர்ஜூன் இணையவிருக்கும் படத்திற்கு அனிரூத் ரவிச்சந்திரன் இசையமைக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.


திபீகாவின் ஒன்னேமுக்கால் லட்ச ரூபாய் டிரஸ்!

இன்றைய நிலவரப்படி திருமணத்திற்குப் பின்பும் கூட கவர்ச்சியில் புதிய எல்லைகளைத் தொடும் நடிகையாக முன்னணி வகிக்கிறார் பாலிவுட்டின் திபீகா படுகோன்.

கேட்டால், கல்யாணத்திற்கும் கவர்ச்சிக்கும் என்ன சம்பந்தம். நடிப்பு என்பது என்றைக்கும் ஒரே மாதிரிதான். அதில் திருமணம் தடையாக இருக்காது என்று ஒரு புது தத்துவத்தையும் கூறுகிறார் திபீகா படுகோன்.

இதனால் திபீகா படுகோனை வைத்து எந்தளவிற்கு கவர்ச்சியாக பாடல்களை எடுக்க முடியுமோ அந்தளவிற்கு எடுக்க தீவிரமாகச் சிந்தித்து வருகிறார்கள்.

அதற்கு உதாரணம் சமீபத்தில் வெளியாகி இருக்கும், ஹிர்த்திக் ரோஷனுடன் திபீகா படுகோன் நடித்திருக்கும் ‘ஃபைட்டர்’ படத்தின் இஷ்க் ஜைய்ச்சா குச்’ பாடல்.

இதில் ஷிர்த்திக்கும் திபீகாவும் மிக நெருக்கமாக நடித்திருக்கிறார்கள். இப்பாடல் காட்சியில் கடற்கரையில் ஒரு பளபளக்கும் ஆடையொன்றில் திபீகா கவர்ச்சி ஆட்டம் போட்டிருக்கிறார்.  இந்த ஆடை உலகப் புகழ் பெற்ற ஆடம்பர ப்ராண்டான பேகோ ராபான் [Paco Rabanne]-யினால் வடிவமைக்கப்பட்ட ஆடையாம்.

பேகோ ராபான் [Paco Rabanne]-ன் ஸ்கர்ட் விலை மட்டுமே சுமார் 1,03,169 ரூபாய். அவர் அணிந்திருக்கும் டாப்ஸ் விலை சுமார் 62,751 ரூபாய். இந்த இரண்டுக்குமான விலையைக் கூட்டிப் பார்த்தால் சுமார் 1.7 லட்ச ரூபாய் வருகிறது.

ஒரு பாடல் காட்சியில் ஒரேயொரு முறை வந்து போகும் ஃப்ரேமிற்காக 1.7 லட்ச ரூபாய் ஆடை அணிந்திருப்பது பற்றி இப்போது பாலிவுட்டில் பேச்சாக இருக்கிறது.

இதைப் பார்த்த ரசிகர்கள், தீபிகா சூப்பராக இருக்கிறார். எந்த ஆடை வாங்கலாம் என்று யோசிப்பவர்கள், கதையை நன்றாக யோசித்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

’ஃபைட்டர்’ திரைப்படம் வருகிற ஜனவரி 26, 2024-ல் வெளியாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...