No menu items!

நியூஸ் அப்டேட்: இந்திக்கு மாறுங்கள் – அமித் ஷா

நியூஸ் அப்டேட்: இந்திக்கு மாறுங்கள் – அமித் ஷா

டெல்லியில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமை வகித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளும்போது, அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும். 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவைக் கொடுக்க வேண்டியது அவசியம். இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் வழக்கு: விடுப்பில் சென்ற நீதிபதி

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா உரிமை கோரியதை எதிர்த்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க இருந்தது. இந்நிலையில், தீர்ப்பு வழங்க இருந்த 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி விடுப்பில் சென்றதால் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

வன்னியர் உள் இட ஒதுக்கீடு: முதல்வருடன் அன்புமணி சந்திப்பு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, “இன்று முதல்வரை சந்தித்து பேசினேன். மருத்துவர் ராமதாஸ் கொடுத்து அனுப்பிய கோரிக்கை மனு அடங்கிய கடிதத்தையும் கொடுத்தோம். வன்னியர்களுக்கு விரைவில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க சட்டசபையில் மீண்டும் ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.

சாத்தான்குளம் வழக்கு: தந்தை, மகனை போலீசார் கொடூரமாக தாக்கியுள்ளனர் – சிபிஐ

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட தந்தை – மகன் இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தபோது, “சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து தந்தை, மகனை போலீசார் கொடூரமாக தாக்கியுள்ளனர்” என சிபிஐ தெரிவித்தது. மேலும், இந்த வழக்கில் சிறையில் உள்ள காவல் சார்பு – ஆய்வாளருக்கு பிணை வழங்கக்கூடாது எனவும் சிபிஐ தரப்பு வாதம் செய்தது.

முடங்கிய ஜியோ நெட்வொர்க்: வாடிக்கையாளர்கள் புகார்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ 4ஜி நெட்வொர்க் இந்தியா முழுவதும் 42 கோடிக்கு மேல் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்நிலையில், நாட்டின் சில பகுதிகளில் நேற்றிரவு (7-4-2022) 8:06 மணி முதல் ஜியோ நெட்வொர்க் செயலிழந்துள்ளதாக வாடிக்கையாளர்கள் ட்விட்டர், டவுன் டிடெக்டரில் புகார் கூறி வருகின்றனர். இது தொடர்பாக டவுன் டிடெக்டர் இணையதளம், ‘நேற்றிரவு 66 சதவீத பயனர்கள் ஜியோ சிக்னலைப் பெற முடியவில்லை என கூறியுள்ளனர். ஆனால், இந்த சிக்கல் மொபைல் பயனர்களுக்கு மட்டுமே ஏற்பட்டது. நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவை பாதிக்கப்படாமல் இருந்தது’ எனத் தெரிவித்துள்ளது.

மெரினாவில் நடமாடும் மருத்துவமனை: முதல்வர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பை கடைநிலை மக்கள் வரை கொண்டு சேர்க்கும் வகையில் பொதுசுகாதார தரப்பில் இருந்து பல்வேறு புதிய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில், ரூ. 70 கோடி செலவில் சென்னை மெரினாவில் நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டத்தை இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...