No menu items!

நயன்தாராவுக்கும் சமந்தாவுக்கும் ஒரே பிரச்சினைதான்!

நயன்தாராவுக்கும் சமந்தாவுக்கும் ஒரே பிரச்சினைதான்!

நயன்தாராவுக்கும் சமந்தாவுக்கு இடையே சொல்லி வைத்தது போல சில ஒற்றுமைகள் இருக்கின்றன.

இவர்கள் இருவரும் பரபரப்பான காதல் சர்ச்சைகளில் சிக்கியவர்கள். இருவரின் திருமணங்களும் பலவிதமான கிசுகிசுக்களுக்கு மத்தியில் நடைபெற்றன. நயன்தாராவும், சமந்தாவும் பெண்களை மையமாக கொண்ட கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டுபவர்கள். இருவரும் கவர்ச்சியில் கிறங்கடிப்பதில் தேர்ந்தவர்கள். இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்.

இவற்றில் எதுவும் அவர்களுக்கு பெரிய பிரச்சினையாக இருந்தது இல்லை. ஆனால் இவர்கள் இருவரும் காதலித்தப் போது தங்களது காதலன் பெயரை டாட்டூவாக குத்தி கொண்டதுதான் இவர்களால் தீர்க்க முடியாத, அழிக்க முடியாத வடுவாக தொடர்கிறது.

’மையோசிடிஸ்’ பிரச்சினைக்காக மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்ள நடிப்புக்கு ஒரு இடைவெளி விட்டிருக்கும் சமந்தா, எங்கே நம்மை மறந்துவிடுவார்களோ என்ற நோக்கத்துடன் ஒரு போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டார்.

பிங்க் நிற புடவையில் அசரடிக்கும் உடல் நெளிவுகளுடன் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் சமந்தாவை இன்னும் மறக்கவில்லை என்பது போல் கொண்டாடி வருகிறார்கள்.

அந்த போட்டோ ஷூட் புகைப்படங்களில் ஒன்று மற்றும் ரசிகர்களின் கவனத்தை அதிக ஈர்த்திருக்கிறது.

சமந்தா தனது உடலின் மூன்று இடங்களில் டாட்டூ குத்தியிருக்கிறார். அதில் ஒன்று கழுத்துப்பக்கம் ‘ஒய்.எம்.சி’ என்ற டாட்டூ, இது அவர் தெலுங்கில் அறிமுகமான முதல் படத்தின் பெயர் சுருக்கம்.

வலது கையில் போட்டிருக்கும் டாட்டூவில் இருக்கும் இரண்டு அம்புக்கள் இன்றும் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கின்றன.

அடுத்து வலது விலா எலும்பு பக்கம் ‘சைய்’ என்று டாட்டூ குத்தியிருக்கிறார். சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா என்பதன் சுருக்கம்தான் இந்த சைய். இருவரும் உருகி உருகி காதலித்த போது போட்டு கொண்ட டாட்டூ.

இந்த டாட்டூ சமந்தாவின் சமீபத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களில் மிஸ்ஸிங். இதை கண்டுகொண்ட ரசிகர்கள், சைய் டாட்டூவை சமந்தா எப்படி நீக்கினார். ஏதாவது அறுவைச்சிகிச்சை செய்து கொண்டாரா என்று உலகிற்கு மிக அத்தியாவசியமான சந்தேகத்தை கிளப்பிவிட்டார்கள்.

நயன்தாரா பிரபுதேவாவை காதலித்த போது தனது கையில் பிரபு என்று டாட்டூ குத்திக்கொண்டார். பின்னாளில் அந்த டாட்டூ டிஸைனில் சில நெளிவு சுளிவுகளைப் போட்டு பிரபு என்பதை மாற்றிவிட்டார். ஆனாலும் அவர் நினைத்த மாதிரி டாட்டூவை அழிக்கவே முடியவில்லை.

ஆனால் சமந்தாவால் மட்டும் எப்படி டாட்டூவை அழிக்க முடிந்தது என்ற கேள்வி எழ, டாட்டூ போட்டது போட்டதுதான். அதை அழிக்க முடியாது. ஆனால் போட்டோ ஷூட் புகைப்படங்களில் அந்த டாட்டூவை எடிட் செய்திருக்கிறார்கள் என்ற விஷயம் வெளியே தெரிய வர, வழக்கம் போல் சமந்தாவுக்கு கமெண்ட்களை அள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...