No menu items!

கமலுக்கு ஜோடியா நயன்தாரா?

கமலுக்கு ஜோடியா நயன்தாரா?

கமலும், மணிரத்னமும் மீண்டும் இணைய இருக்கிறார்கள் என்றதுமே ஆஹா ஒஹோ கமெண்ட்கள் கிளம்ப ஆரம்பித்துவிட்டன.

இரண்டுப் பேரும் வித்தைக்காரர்கள். இன்றைக்கு தமிழ் சினிமாவின் மார்க்கெட் பலமடங்கு அதிகமாகி இருக்கிறது. இதனால் மெகா பட்ஜெட்டில் எடுத்தாலும் கூட படம் போணியாகிவிடும். தமிழ் சினிமாவில் ஒரு புதிய ட்ரெண்ட் உருவாகலாம். அப்படி இப்படி என பல பேச்சுக்கள் அடிப்படுகின்றன.

ஆனால் மணிரத்னம் தேவையில்லாமல் பணத்தை இறைக்க விரும்பவில்லையாம். கதைக்கேற்ற, காட்சிக்கு அவசியமான லுக் & ஃபீல் இருந்தால் போதும். அதனால் இந்த இருநூறு கோடி, முன்னூறு கோடி பட்ஜெட் எல்லாம் இல்லை என்று தீர்மானமாக இருக்கிறாராம்.

குறைந்த பட்ஜெட். பெரிய லாபம் என்பதுதான் இலக்கு. காரணம் கமலின் 234-வது பட த்தை தயாரிக்க இருப்பது மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ மற்றும் கமலின் ‘ராஜ் கமல் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷனல்’.

கமலுக்கும், மணிரத்னத்திற்கும் சம்பளம் கிடையாது. அதனால் அந்த பணத்தை பட்ஜெட்டில் இறக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்கிறார்கள்.

இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக முதலில் ஒரு கிசுகிசு எழுந்தாலும், இப்போது நயன் தாராவை இப்படக்குழுவினர் அணுகியிருப்பதாக புதிய கிசிகிசு கிளம்பியிருக்கிறது.

ரஜினி, அஜித், விஜய் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கும் நயன்தாரா இதுவரை கமலுடன் இணைந்து நடித்தது இல்லை. அதனால் இந்த காம்பினேஷனுக்கு இருக்கும் கவர்ச்சி படத்தின் பிஸினெஸ்ஸூக்கு உதவும் என்பது நிச்சயம்.

இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாக நிலையில், இப்படம் குறித்த விவரங்கள் ஜூன் அல்லது ஜூலை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


தென்னிந்தியாவில் ’நம்பர் 1’ இடத்தைப் பிடித்த தமிழ்சினிமா!

தென்னிந்திய சினிமாவில் பட்டையைக் கிளப்பி கொண்டிருக்கிறது தமிழ் சினிமா என்ற தகவல் வெளியாகி இருக்கிறது..

சமீபத்தில் சென்னையில் சிஐஐ அமைப்பு நடத்திய ’சிஐஐ தக்‌ஷின் 2023 – தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு கருத்தரங்கு’ நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் ‘தென்னிந்தியா : இந்தியாவுக்கான புதிய வரையறைகளை உருவாக்கும் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை’ என்ற தலைப்பில் ஒரு ரிப்போர்ட் வெளியிடப்பட்டது.

இந்த ரிப்போர்ட்டில், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட சினிமா உள்ளிட்ட ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவில் மார்க்கெட் சைஸ் அடிப்படையில் தமிழ் சினிமா முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த மதிப்பு 2,950 கோடிகள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமாவிற்கு அடுத்தப்படியாக தெலுங்கு சினிமா இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. தெலுங்கு சினிமாவின் மார்க்கெட் சைஸ் 2,500 கோடிகள் என்கிறது அந்த அறிக்கை.

நான்கு தென்னிந்திய மொழிகளை உள்ளடக்கிய சினிமா, பல்வேறு வருவாய் மூலம் 7,836 கோடிகள் ஈட்டும் என்றும் மதிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஒட்டுமொத்த இந்திய அளவில் சினிமா துறையின் வருவாய் சுமார் 15,000 கோடி இருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டு இருக்கிறது. இதில் தென்னிந்திய சினிமாவின் பங்களிப்பு 52 சதவீதமாக இருக்கும் என தெரிய வந்திருக்கிறது. இதில் தென்னிந்தியாவில் தமிழ் சினிமா மட்டும் 38 சதவீத பங்களிப்பை கொடுத்திருக்கிறது.

தமிழ் சினிமாவிற்கு அடுத்து தெலுங்கு சினிமா 32 சதவீதமும், மலையாள சினிமா 20 சதவீதமும், கன்னட சினிமா 10 சதவீதமும் பங்களிப்பு செய்திருக்கின்றன. இது 2022-ம் ஆண்டுக்கான மதிப்பீடு ஆகும்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இந்திய சினிமாவில் தென்னிந்திய சினிமாவின் பங்களிப்பு எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.


ஷங்கரின் லேட்டஸ்ட் ப்ளான்!

’இந்தியன் 2’ படத்தில் கமல் சம்பந்தப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகளை தென்னாப்பிரிக்காவில் எடுத்து முடித்திருக்கிறார் ஷங்கர்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பியதும் ஒய்வு எதுவும் எடுக்காமலேயே, ஷங்கர் செய்த முதல் வேலை, அவர் இயக்கி வரும் தெலுங்குப் படமான ‘கேம் சேஞ்சர்’ பட வேலைகளில் இறங்கிவிட்டார்.

வழக்கமாக ஷங்கர் படங்களில் பாடல்களுக்கும், சண்டைக்காட்சிகளுக்கும் அதிக நாட்கள் எடுப்பார். குறைந்தது பத்து நாட்களாவது ஷூட் செய்வார். அதிகப்பட்சம் இரண்டு வாரங்கள் கூட பாடல், சண்டைக்காட்சிகளின் ஷூட்டிங் நீண்டுக்கொனே போகும். காரணம் பாடல்களிலும், சரி சண்டைக்காட்சிகளிலும் சரி நிறையவே ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வித்தைகளை வைத்திருப்பார்.
அதேபோல் இந்த முறையும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் ஒரு ட்ரெண்ட்டை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறாராம். பொதுவாக சண்டைக்காட்சிகளில் நாற்பது அல்லது ஐம்பது பேரை வைத்து எடுப்பார்கள். பிறகு அந்த ஐம்பது பேரையும் இமேஜ் க்ளோனிங் செய்து, ஆயிரக்கணக்கில் சண்டையிடுவது போல் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸில் மாற்றிவிடுவார்கள்.

ஆனால் ஷங்கர் இந்த முறை உண்மையிலேயே ஆயிரம் பேருடன் ‘ஆர்.ஆர்.ஆர்’ படப்புகழ் ராம் சரணை மோதும் சண்டைக்காட்சியை எடுக்க திட்டமிட்டு இருக்கிறாராம். க்ளைமாக்ஸ் காட்சி என்பதால் கூடுதல் சுவாரஸ்யம் இருக்கவேண்டுமென இந்த திட்டமாம்.

இதற்காகவே ஒரு பிரத்தியேக செட்டும் போடப்பட்டு இருக்கிறது. ஏப்ரல் மாதம் 24-ம் தேதி தொடங்கும் இந்த சண்டைக்காட்சி மே மாதம் 5-ம் தேதி வரை நடக்கும் வகையில் திட்டமிட்டு இருக்கிறார் ஷங்கர்.

இந்த சண்டைக்காட்சியை கே.ஜி.எஃப்’ படத்தில் நூறு பேருக்கும் மேல் யாஷூடன் சண்டையிடுவது போல் எடுத்த ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவை வைத்து எடுக்க இருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...