No menu items!

என்னோட ’எக்ஸ்’ இப்பவும் ஃப்ரெண்ட்தான் – ராஷ்மிகா

என்னோட ’எக்ஸ்’ இப்பவும் ஃப்ரெண்ட்தான் – ராஷ்மிகா

முன்பெல்லாம் நடிகைகள் தங்களது ரிலேஷன்ஷிப், பாய் ஃப்ரெண்ட்ஸ் பற்றி வாயே திறக்க மாட்டார்கள். எதைக் கேட்டாலும் என் அம்மாவிடம் கேட்டு சொல்கிறேன் என்பார்கள்.

இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது.

என்ன கேள்வி கேட்டாலும், சட்டென்று நடிகைகளிடமிருந்து வெளிப்படையாகவே பதில்கள் வருகின்றன. சில நடிகைகள் இந்த விஷயத்தில் முரட்டு ரகம். மனதில் பட்டதை அப்படியே பகிர்ந்து கொள்கிறார்கள். ராஷ்மிகா மந்தானாவும் மேற்படி ரகம்தான்.

தன்னுடைய ரிலேஷன்ஷிப் பற்றி வெளிப்படையாக பகிர்ந்துகொள்வதில் தனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்கிறார் ராஷ்மிகா.

சில ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது ராஷ்மிகா இந்தளவிற்கு பிரபலமாவதற்கு முன்பு.. கன்னட சினிமாவில்தான் நடித்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கும் கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டிக்கும் பற்றிக் கொண்டது. இவர்கள் இருவர் வீட்டிலும் காதலுக்கு சம்மதம் கிடைக்க, நிச்சயதார்த்தமும் நடந்தது.

அதேநேரத்தில் தெலுங்குப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ’கீதா கோவிந்தம்’ படம் ராஷ்மிகாவை சினிமாவின் டார்லிங்காக கொண்டாட வைத்தது. அவ்வளவுதான் என்கேஜ்மெண்ட்டை கேன்சல் செய்தார் ராஷ்மிகா.

அடுத்து ராஷ்மிகாவிற்கு விஜய் தேவரக்கொண்டாவுடன் காதல் என மீடியாவில் பரபரப்பானது. ஆனால் இருவரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
‘எனக்கு யாருடனும் ரிலேஷன்ஷிப் இல்லை. என்னுடைய சினிமா கேரியல்தான் என்னுடைய முழுக்கவனமும் இருக்கிறது.’ என்று மனம் திறந்த ராஷ்மிகா அத்தோடு விடவில்லை.

‘நான் ரொம்ப மாடர்ன் பொண்ணு. என்னுடைய எக்ஸ்-கள் கூட பகையோ விரோதமோ பாராட்டுவது இல்லை. அவர்கள் இன்றும் என்னுடைய நண்பர்கள்தான். அவர்களது குடும்பத்தினர் கூட என்னுடன் இப்பொழுதும் நன்றாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். பழகுகிறார்கள்’ என்று வம்பு இழுக்க நினைத்தவர்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

நயன்தாராவின் லேட்டஸ்ட் சம்பளம்

நடிகைகளுக்கென ஒரு மார்க்கெட் வந்துவிட்டால் அவர்களது நிலைமை கொஞ்சம் கவலைக்கிடமாக இருக்கும்.

தன்னவிட இரு மடங்கு வயதுள்ள ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும். இல்லை மூன்று மடங்கு வயதுள்ள ஹீரோக்களுக்கு ஃப்ளாஷ்பேக்கில் டூயட் பாடவேண்டும். இல்லையென்றால் மார்க்கெட்டில் பெரிய தலைகள் கைவைத்துவிடுவார்கள்.

இதனாலேயே முன்னணி நடிகைகள் வேறு வழியில்லாமல் சீனியர் ஹீரோக்களுடன் ஒரு படத்திலாவது டூயட் ஆடவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிவிடுகிறார்கள்.

நயன்தாராவும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

ரஜினியுடன் மூன்று படங்களில் டூயட் பாடி ஆடி நடித்திருக்கிறார். நயன்தாரா பிரபலமான பிறகு ரஜினியைத் தவிர்த்து சீனியர் ஹீரோக்களுடன் அதிகம் நடிக்காமல் தவிர்த்துவிட்டார்.

சமீபத்தில் ஒரு பெரிய ஹீரோவுக்குக் ஜோடியாக நடிக்க நயன்தாராவைக் கேட்டிருக்கிறார்கள்.

இதுபோன்ற சங்கடங்களைத் தவிர்க்க நடிகைகள் கையிலெடுக்கும் ஒரே ஆயுதம் வாயைப் பிளக்க வைக்கும் சம்பளம்.

இதே ஆயுதத்தை கையிலெடுத்த நயன்தாரா கேட்ட தொகை எட்டு கோடி. ஏற்கனவே ஐந்து கோடி வாங்கும் நயன் இப்போது எட்டு கேட்டதும், வாட்டர் ஹீட்டர் இருப்பது தெரியாமல் தண்ணீரில் கைவைத்தவரை போல ஷாக் அடித்து இருக்கிறாராம் அந்த சீனியர் நடிகர்.

பாக்ஸ் ஆபீஸில் தள்ளாடும் ’பொன்னியின் செல்வன்’

’பொன்னியின் செல்வன்’ வெளியானதுமே ’பாகுபலி’யுடன் ஒப்பிட்டு பார்ப்பது தவிர்க்க முடியாத சமாச்சாரமாகி இருக்கிறது.

’பாகுபலி’ தமிழ்நாட்டிலும் வசூலை அள்ளிக்குவித்தது. அதேபோல் ’பொன்னியின் செல்வன்’ ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் வசூலை அள்ளிக் குவித்ததா என்று சோஷியல் மீடியாவில் குடித்தனம் நடத்தும் இன்ஃப்ளுயன்ஸர்கள் ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

தமிழில் இதுவரையில் பாக்ஸ் ஆபீஸில் ’பொன்னியின் செல்வன்’ கலெக்‌ஷன் சொல்லுமளவிற்கு நன்றாக இருக்கிறது என்கிறார்கள். ஆனால் தெலுங்கிலும், ஹிந்தியிலும் எதிர்பார்த்த வசூல் இல்லை என்பதே உண்மை.

தெலுங்கில் இப்படத்தின் உரிமையை வாங்கிய ’வாரிசு’ பட தயாரிப்பாளர் தில் ராஜூ, பொன்னியின் செல்வனுக்கு அவசியமான ப்ரமோஷனில் திவீரமாக இறங்கவில்லை. ஒரு டப்பிங் படத்தை வாங்கி வெளியிடுவதைப் போலவே எந்தவித மெனக்கெடலும் இல்லாமல் ரிலீஸ் செய்திருக்கிறார்.

பிஎஸ் படத்தின் தெலுங்கு பதிப்பை 10 கோடி தில் ராஜூ வாங்கியிருப்பதாக தகவல்கள் அடிப்படுகின்றன. படம் வெளியானது முதல் இதுவரை 7.50 கோடி வசூல் ஆகியிருப்பதாகவும் தெரிகிறது.

படம் வெளியானதும் வந்த விமர்சனங்கள் சொல்லி வைத்தது போல எதிர்மறை விமர்சனங்களாக அமைந்திருப்பதால் வசூல் அடி வாங்கியிருக்கிறது.

அதோடு ’பொன்னியின் செல்வன்’ வெளியான சில நாட்களிலேயே தசரா விடுமுறையைக் கணக்கில் கொண்டு சிரஞ்சீவி நடித்திருக்கும் ‘காட் ஃபாதர்’, நாகார்ஜூனாவின் ‘த கோஸ்ட்’, ‘சுவாதிமுத்தயம்’ போன்ற படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால் பிஎஸ் பாக்ஸ் ஆபீஸில் தள்ளாடி வருகிறது என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...