No menu items!

கலக்கும் Lokesh Sister அவந்திகா கனகராஜ்

கலக்கும் Lokesh Sister அவந்திகா கனகராஜ்

இன்டர்நெட்டில் இப்பொழுது அவந்திகா கனகராஜ் என்ற பெயரும், அவருடைய புகைப்படங்களும் வைரலாகி இருக்கிறது.

யார் இந்த அவந்திகா கனகராஜ்?

இன்று தமிழ் சினிமாவில் அதிகம் முணுமுணுக்கப்படுகிற லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜின் உடன் பிறந்த தங்கைதான் அவந்திகா கனகராஜ்.

இப்பொழுது இவரது சமூக ஊடக பக்கங்களில் இவரை விஜய் ரசிகர்கள் பெருவாரியாக பின் தொடர ஆரம்பித்திருக்கிறார்கள்.

பள்ளிப்படிப்பின் போதே 12-ம் வகுப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த இவர்தான் அப்பள்ளியின் மாணவத் தலைவி.

2018 முதல் 2021 வரை, சென்னையைச் சேர்ந்த மகளிர் கல்லூரியில் எலெக்ட்ரானிக் மீடியா கம்யூனிகேஷன் மற்றும் மீடியா ஸ்டடீஸ் படித்திருக்கிறார் அவந்திகா கனகராஜ். கல்லூரி படிப்பை முடித்தவர்.

கல்லூரி படிப்பை முடித்தவர் பிறகு இரண்டாண்டுகள் பிரபல எனர்ஜி ட்ரிங் நிறுவனத்தில் ஸ்டூடண்ட் மார்க்கெட்டராக பணியாற்றினார்.

இதற்குள் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநராக இடம் பிடிக்க, அதே வேகத்தில் அவந்திகா கனகராஜ் சினிமா பக்கம் தனது கவனத்தை திருப்பினார்.

லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து ’மாஸ்டர்’ படத்தை இயக்கினார். இதனால் விஜயின் மேனேஜராக இருக்கும் ஜகதீஷ் உடனான லோகேஷின் நட்பு ரொம்பவே நெருக்கமானது.

இதன் தொடர்ச்சியாக ஜகதீஷ் நடத்திவரும் ‘த ரூட்’ நிறுவனத்தில் டேலண்ட் மேனேஜர் மற்றும் க்ரியேட்டிவ் டைரக்டர் ஆக அவந்திகா கனகராஜ் தனது சினிமா பயணத்தை தொடங்கியிருக்கிறார்.

நடிகைக்கான அழகும், திறமையும் இருந்தாலும் அவந்திகாவுக்கு ஒரு நடிகையாகும் எண்ணமில்லையாம்.

தனது அண்ணன் லோகேஷ் கனகராஜைப் போலவே திரைக்குப் பின்னால் சினிமாவில் பயணிக்கும் ஆசைதான் அவந்திகா கனகராஜூவுக்கு இருக்கிறதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...