No menu items!

நடிகை வேட்டையில் மணிரத்னம்! – கமல் ஜோடி யார்?

நடிகை வேட்டையில் மணிரத்னம்! – கமல் ஜோடி யார்?

36 ஆண்டுகளுக்குப் பிறகு, கமலும் மணி ரத்னமும் இணைய இருக்கும் படத்தில் கமலுக்கு ஜோடிக்காக நடிகைகள் வேட்டையில் இறங்கி இருக்கிறார்கள்.

’மன்மத அம்பு’ படத்தில் த்ரிஷா ஏற்கனவே கமலுடன் நடித்திருந்ததாலும், இப்போது பொன்னியின் செல்வனில் நடித்திருப்பதாலும், த்ரிஷாவுக்கே மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று ஒரு பேச்சு அடிப்படுகிறது.

இருந்தாலும், சில நடிகைகளின் கால்ஷீட் இருக்கிறதா என்று மணி ரத்னம் கேட்க சொல்லியிருப்பதாகவும் சொல்கிறாரகள். இந்தப் பட்டியலில் நயன்தாரா பெயரும் இருக்கிறதாம்.

ஆனால் மணி ரத்னம், கமலின் தற்போதைய தோற்றத்திற்கு ஏற்ற, ஒரு நடிகை இருந்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக கூறுகிறார்கள். இதனால் இப்போது தமிழில் நடிக்க வந்தும், சரியாக வாய்ப்புகள் கிடைக்காமல் பாலிவுட்டுக்கு போய் பிரபலமான வித்யா பாலனிடம் கால்ஷீட் இருக்கிறதா என கேட்டிருப்பதாகவும் தகவல் கசிந்திருக்கிறது.

கமல் தரப்பிலிருந்து வித்யா பாலன் என்றால் ஓகே என்று சொல்லப்பட்டிருக்கிறதாம்.

’இந்தியன் 2’ ஷூட்டிங் முடிவடைந்ததும் கமல்234 படம் தொடங்கும். அதற்கு முன்பே இப்படம் குறித்த அறிவிப்பை லைகா வெளியிட இருக்கிறது.


அரசியல் சிக்கலில் ஜெயிலர்!

தெலுங்கு சினிமாவில் ஏறக்குறைய கிருஷ்ணராகவே கொண்டாடப்பட்டுவரும் நந்தமூரி தாரக ராமா ராவின் நூற்றாண்டு விழா விஜயவாடாவில் நடைபெற்றது.

இதில் ரஜினிகாந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

ராமாராவ் குறித்து மனம் திறந்து பேசிய ரஜினி, அப்படியே அவரது மகன் பாலகிருஷ்ணாவையும், மருமகனும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவையும் ரொம்பவே பாராட்டிவிட்டார்.

’பாலகிருஷ்ணாவோட கண்கள் சிமிட்டினாலே போதும், கார் 50 அடி உயரத்துக்குப் பறக்கும். இந்த மாதிரி காட்சிகள்ல பாலாகிருஷ்ணாவால மட்டும்தான் நடிக்கமுடியும். நானோ அல்லது அமிதாப் பச்சனோ நடிக்கமுடியாது. மக்கள் அவரை ராமாராவோட மறு உருவமாகதான் பார்க்குறாங்க’ என்று பாலகிருஷ்ணாவைப் புகழ்ந்த ரஜினி அப்படியே சந்திரபாபுவையும் புகழ்ந்து தள்ளினார்.

‘இன்னிக்கு ஐடி இண்டஸ்ட்ரி இந்தளவுக்கு ஹைதராபாத்துல இருக்க காரணம் சந்திரபாபு நாயுடுதான். ஒரு தொலைநோக்குப் பார்வை உள்ளவர்’ என்று புகழ்ந்தது, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களிடையே புகைச்சலை கிளப்பி இருக்கிறது.

இதேபோல் அரசியல் கருத்துகளை சொன்ன பவன் கல்யாணின் ‘வகில் சாப்’, ‘பீம்லா நாயக்’ படங்களுக்கு அரசியல் தரப்பிலிருந்து நெருக்கடிகள் கொடுக்கப்பட்டனவாம். இதே போல் தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கும் ’ஜெயிலர்’ படத்திற்கும் ஆந்திராவில் சிக்கல் ஏற்படலாம் என்று பரபரப்பாகி இருக்கிறது.


ஒரு பாட்டுக்கு ஸ்ரேயா சம்பளம் இவ்வளவா??

சோஷியல் மீடியாவில் கவர்ச்சிப் படங்களையும், நீச்சல் உடையில் இருக்கும் வீடியோக்களையும் போட்டுக்கொண்டே இருந்தால், திருமணம் ஆனபின்பும் கூட சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியுமென நிரூபித்திருக்கிறார் ஷ்ரேயா.

தான் நடிக்கும் படங்களுக்கான ப்ரமோஷன்களிலும் தவறாமல் கலந்து கொள்ளும் ஷ்ரேயா அங்கேயும் கவர்ச்சி தரிசனத்தை கொடுப்பதால், அந்த விழா சம்பந்தப்பட்ட வீடியோக்களும் சில நேரங்களில் வைரல் ஆகிவிடுகின்றன.

திருமணமாகி, குழந்தைப் பெற்றபிறகும் ஸ்லிம்மாக இருப்பதால், இப்போது வாய்ப்புகள் வர ஆரம்பித்திருக்கிறதாம். ஹீரோயினாக நடிக்க அழைக்க மாட்டார்கள் என்பதையும் தெளிவாகவே புரிந்து கொண்டிருப்பதால், வருகிற வாய்ப்புகளை எல்லாம் ஒப்புக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.

’ஊ சொல்றீயா…’ மாதிரி ஒரு கவர்ச்சி ஆட்டமும் ஆட ரெடி என்று சொல்லும் ஷ்ரேயா, தயாரிப்பாளர்களிடம் கேட்கும் சம்பளம்தான் அதிர வைக்கிறதாம்.

ஒரு பாடலுக்கு மட்டும் ஆட, ஐந்து நாள் கால்ஷீட். 75 லட்சம் கேட்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...