No menu items!

கார்த்திக் வீட்டு love marraige

கார்த்திக் வீட்டு love marraige

2019-ல் ’தேவராட்டம்’ படத்தில் மஞ்சிமா மோகனுக்கு கெளதம் கார்த்திக் மீது அதே காதல் ஆட்கொண்டது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பே காதலுக்கு மரியாதை செய்த கார்த்திக், தனது மகன் விஷயத்தில் கெடுபிடி காட்டுவார் என்பதை கெளதம் கார்த்திக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் கெளதமின் நண்பர்கள்.

இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாகவே தந்தைக்கும் மகனுக்கும் இடையில் கொஞ்சம் மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும், மகன் தனது காதல் விஷயத்தில் உறுதியாகவும் இருந்ததாகவும் தெரிகிறது.

தன்னைத் தேடி வந்த ஒரு சில படங்களையும் கூட கெளதம் கார்த்திக் இப்பிரச்சினையால் ஒப்புக்கொள்ளவில்லை. கெளதம் கார்த்திக் வெளியில் எங்கும் அதிகம் தலைக்காட்டவில்லை. வீட்டில் இருந்தபடியே காதலுக்காக அகிம்சை போராட்டத்தை நடத்தினார் என்றும் முணுமுணுக்கிறார்கள். இதில் கார்த்திக் கொஞ்சம் தனது பிடியை தளர்த்தி இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

பிரச்சினைகள் ஒரு பக்கம் தகதகத்து கொண்டிருந்தாலும் சமீபத்தில் நடைபெற்ற தனது நண்பரின் திருமணத்திற்கு ஜோடியாக சென்று மீண்டும் கோலிவுட்டை பரபரக்க வைத்திருக்கிறார் கெளதம் கார்த்திக்.

அநேகமாக வெகுசீக்கிரமே கார்த்திக் வீட்டில் டும் டும் டும் சத்தம் கேட்கலாம் என்கிறார்கள்.

மேலே உள்ள செய்தி 21.9.2022 அன்று நமது ‘வாவ்தமிழா.காம்’-ல் வெளியானது நினைவில் இருக்கலாம்.

அன்றே ’வாவ் தமிழா’ சொன்னது இன்று நிஜமாகி இருக்கிறது.

கெளதம் கார்த்திக்கின் பிடிவாதத்திற்கு பலன் கிடைத்திருக்கிறது. அவரது அப்பா கார்த்திக், தனது மகன் கெளதம் கார்த்திக்கின் காதலுக்கு ஓகே சொல்லியிருக்கிறார்.
மஞ்சிமா மோகன் தங்களது காதல் திருமணம் வரை வெற்றிகரமாக பயணித்திருக்கிறது என்று தனது சமூக ஊடக கணக்கில் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.

வெகுவிரைவில் கெளதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் இருவரும் காதலர்கள் என்ற ஸ்டேட்டஸில் இருந்து தம்பதியாக ப்ரமோஷன் ஆக இருக்கிறார்கள்.
வாழ்த்துகள்!

விஜயுடன் மோதும் விஷால்?

லோகேஷ் கனகராஜ் காட்டில்தான் இப்போது அடைமழை. கோலிவுட்டில் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவர் தொட்டது எல்லாம் இப்போது சக்சஸ்.

லேட்டஸ்ட் விஷயம், லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் விஜய் படத்தில் வில்லனாக யாரை நடிக்க வைப்பது என்பது அவர்களது கதை விவாதத்தின் போதே அதிகம் பேசப்பட்டது. தனது உதவியாளர்களுடன் டிஸ்கஷனுக்கு சென்ற போது, வில்லன் யார் என்ற கேள்விக்கு பல பதில்கள் பரிமாறப்பட்டன.

’மாஸ்டர்’ படத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக களமிறக்கியதற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு. அதேபோல் ’விக்ரம்’ படத்தில் கமலுடன் சூர்யாவை மோத வைப்பதற்கான களத்தை காட்டிவிட அதற்கும் ஏகோபித்த கொண்டாட்டம். இதைப் போலவே பாப்புலாரிட்டியை அறுவடை செய்ய ஒரு முன்னணி ஹீரோவை வில்லனாக இறக்க வேண்டுமென டிஸ்கஷனின் போதே முடிவு செய்துவிட்டது லோகி அண்ட் டீம்.

இவர்களது முதல் சாய்ஸ் மலையாளத்தில் ஆக்‌ஷன் படங்களை இயக்கி நடிக்கும் ப்ரித்விராஜ். பான் – இந்தியா படமாக களமிறக்க இப்படியொரு இமேஜ் உள்ள மாற்று மொழி ஹீரோவை களமிறக்க வேண்டுமென திட்டமிட்டார்கள்.

முதலில் ப்ரித்விராஜ் தரப்பில் பதில் ஏதுவும் சொல்லப்படவில்லை. இதனால் குழப்பத்தில் இருந்த லோகி அண்ட் டீம் அடுத்தது யார் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டது.

ப்ரித்விராஜ் தற்போது ’பாகுபலி’ புகழ் பிரபாஸ் ’கேஜிஎஃப்’ புகழ் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடித்துவரும் ‘சலார்’ படத்தின் வில்லனாக களத்தில் இருக்கிறார். இதனால் இதை காரணம் காட்டி ப்ரித்விராஜ் நாசூக்காக நோ சொல்லி நழுவி விட்டார் என்கிறார்கள்.

விஷால் நடித்த ’அபிமன்யுடு’ தெலுங்கில் ஹிட். ஆனால் அடுத்து வந்த ‘பந்தேம் கோடி –2’, ‘சமன்யுடு’ இரண்டுப் படங்களும் எதிர்பார்த்த அளவு போகவில்லை. ஆனாலும் விஷாலின் முகம் தெலுங்கு ரசிகர்களுக்கு அதிகம் பரீட்சயம் ஆன முகம். தமிழிலும் விஷாலுக்கென்று ஒரு மார்க்கெட் இருப்பதால், விஷாலை கெட்டியாகப் பிடித்திருக்கிறது லோகி அண்ட் டீம்.

இப்பொழுதெல்லாம் ஒரு கமர்ஷியல் ஹீரோ மற்றொரு ஹீரோவின் படத்தில் வில்லனாக நடிப்பது மைனஸ் என்ற நிலை மாறி, பிஸினெஸ் சமாச்சாரமாகி இருக்கிறது.

இந்நிலையில் விஷாலை சந்தித்து இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதனால் விஜயுடன் விஷால் மோதவிருக்கிறார் என்று கோலிவுட்டில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

டென்ஷனில் விஜய் சேதுபதி!

அடிக்கிற பந்தெல்லாம் சிக்ஸர் ஆனால் எப்படியொரு உற்சாகமாக இருக்குமோ அப்படியொரு மனநிலையில் இருந்தவர் விஜய் சேதுபதி. அடுத்தடுத்து விமர்சனரீதியாக நல்ல படங்கள்.

உடல் எடையைப் பற்றி கவலைப்படாமல், தனக்கு ஒரு தனி இடத்தை பெற்று தந்த கதைக்கள தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பேங்க் அக்கெளண்ட்டில் கோடிக்கணக்கில் சம்பளம் மட்டும் க்ரெடிட் ஆனால் போதும் என்று நினைத்து சமீபத்தில் கமிட்டான படங்கள் எல்லாமே டெபிசிட்டில் தத்தளித்தன.

இந்நிலையில்தான் அவரைத் தேடி வந்தது பாலிவுட் வாய்ப்பு. ஹிந்தியில் ஹிட்டான, பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட ‘அந்தாதூன்’ படத்தின் இயக்குநர் ஸ்ரீராம் ராகவனின் புதிய படத்தின் களம் தமிழ் பின்னணியில் இருப்பது போல் அமைந்திருப்பதால் இங்குள்ள கோலிவுட் ஹீரோவை அறிமுகம் செய்ய விரும்பினார்.’

க்ளிக் ஆனது விஜய் சேதுபதி. படத்தின் பெயர் ‘மெர்ரி கிறிஸ்மஸ்’
படத்தின் பெயரைப் போலவே இப்படம் இந்த 2022 கிறிஸ்மஸூக்கு வெளியாக திட்டமிட்டு இருந்தார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகிறதாம். ரிலீஸ் தாமதத்திற்கு தொழில்நுட்ப காரணங்களை முன்வைத்தாலும், விஜய் சேதுபதியை வைத்து ரிலீஸ் செய்தால் பிஸினெஸ் முடியுமா என தயாரிப்பாளர் தரப்பு தயக்கம் காட்டுகிறதாம்.

டைகர் ஷெராஃப் மற்றும் கீர்த்தி செனான் நடிக்கும் ‘கனபாத்’ படத்தை எதிர்த்து நிற்கும் மார்கெட் விஜய் சேதுபதிக்கு இல்லாததால் 2023-ல் வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களாம்.’

கைவசம் சொல்லிக்கொள்கிற மாதிரி வேறெந்தப் படங்களும் இல்லாததால், விஜய் சேதுபதி ஏக டென்ஷனில் இருப்பதாக அவருக்கு நெருங்கிய நட்பு வட்டம் தெரிவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...