No menu items!

’ஜெயிலர் 2’ – நெல்சன் சினிமாட்டிக் யுனிவர்ஸ் ரெடியா?

’ஜெயிலர் 2’ – நெல்சன் சினிமாட்டிக் யுனிவர்ஸ் ரெடியா?

’டைரக்டர் தோற்கிறது இல்ல. அவங்க படம் வேண்டுமானால் தோற்கலாம்’ என்கிற ரீதியில் ரஜினி ‘ஜெயிலர்’ பட விழாவில் பேசியிருந்தார்.

அது உண்மைதான் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குநர் நெல்சன். ஜெயிலர் இன்று வசூல்ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதனால் வழக்கம் போல் பிரம்மாண்டமான யூகங்களை அதிரடியாக கிளப்பி விட்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

அடுத்து ’ஜெயிலர் – 2’ ரெடி. நெல்சன் தன்னுடைய ’பீஸ்ட்’, ’கோலமாவு கோகிலா’, ’டாக்டர்’ படங்களுடைய கதாபாத்திரங்களை ’ஜெயிலர் 2’ படத்தில் நுழைக்க இருக்கிறார்.

இந்த நெல்சன் சினிமாட்டிக் யுனிவர்ஸில் விஜய் ரஜினியுடன் இணைந்து நடிக்கப் போகிறார்.

இப்படி ஏகப்பட்ட கமெண்ட்களும், கிசுகிசுக்களும் அடிப்பட ஆரம்பித்திருக்கின்றன. இதெல்லாம் உண்மையோ இல்லையோ ஆனால் சும்மா இருக்கும் நெல்சனை இந்த கமெண்ட்கள் உசுப்பேத்திவிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஜெயிலரின் வெற்றியும், இதை சாத்தியப்படுத்தினால் அது தமிழ் சினிமாவின் வியாபாரம் பல மடங்கு அதிகரிக்க ஒரு வாய்ப்பாக அமையும்.


டிமாண்ட் செய்த ராஷ்மிகா மந்தனா!

ராஷ்மிகா மந்தானாவை கூகுள் நேஷனல் க்ரஷ் என்று தூக்கிவைத்து கொண்டாடினாலும், ‘புஷ்பா’ படத்திற்குப்பிறகு அவருக்கு ஹிட் எதுவும் அமையவில்லை.

அவர் அதிகம் எதிர்பார்த்த ‘வாரிசு’ படமும் அவருக்கான மார்க்கெட்டை உயர்த்த உதவவில்லை.

இதனால் சரியான வாய்ப்புகளுக்காக தனது மேனேஜரை பெரிய இயக்குநர்கள், ஹீரோக்கள் பக்கம் தூதுவிட்டிருந்தார். அப்போது சிக்கியதுதான் தனுஷ் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத டி51 படம்.

தனுஷ் படத்தை சேகர் கமுலா இயக்குகிறார். இவர் தெலுங்கு சினிமாவில் பிரபலமான இயக்குநர்.

தனுஷ் படம் என்பதால் தானாகவே வலிய வந்து வாய்ப்பை பெற்றிருக்கிறார் என்கிறார்கள். தேடிப் போய் பிடித்த வாய்ப்பு என்றாலும் தனுஷூம் ராஷ்மிகாதான் வேண்டுமென கூறியதாகவும் அப்படக்குழுவினர் கிசுகிசுக்கிறார்கள்.

இதை புரிந்து கொண்ட ராஷ்மிகா பட்டென்று தனது சம்பளத்தை உயர்த்திவிட்டாராம். ஹீரோவே சிபாரிசு செய்திருப்பதால் வேறு வழியில்லாமல் ராஷ்மிகா கேட்ட சம்பளத்தைக் கொடுத்து அவரை கமிட் செய்திருக்கிறார்கள். எங்கே அடித்தால் மாங்காய் விழும் என்பதை இன்றை தலைமுறை நட்சத்திரங்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்.


கோபத்தில் சூர்யா

சூர்யா குடும்பத்தோடு மும்பையில் செட்டிலாகிவிட்டார் இப்படியொரு செய்தி வெளிவந்தது.

அதை உறுதி செய்வது போல் சூர்யா – ஜோதிகா தங்களுடைய குழந்தைகளுடன் மும்பையில் வலம் வரும் புகைப்படங்களும் வெளியாகின.

ஆரம்பத்தில் இந்த விஷயத்தை சூர்யாவோ அல்லது ஜோதிகாவோ தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் சமீபத்தில் சூர்யா கொஞ்ச கோபத்தில் சூடாகிவிட்டார்.

காரணம், சூர்யாவை ஜோதிகா அவரது பெற்றோர்களிடமிருந்து பிரித்து அழைத்து சென்றுவிட்டார். அப்பா – அம்மாவுக்கு அருகில் இருந்த சூர்யா இப்போது பல நூறு மைல்களுக்கு அப்பால் தனியாக போய்விட்டார் என்று பேச்சு கிளப்பியதுதான்.

சூர்யா – ஜோதிகா ஜோடியின் குழந்தைகளான தியாவும் தேவ்வும் இப்போது மும்பையில் படிக்கிறார்கள். அவர்கள் இங்கே படித்தால், அவர்களுக்கான சுதந்திரம் இல்லை. மற்ற மாணவர்கள் மாணவிகளைப் போல படிக்க முடியவில்லை. எங்கு சென்றாலும் நட்சத்திர ஜோடியின் குழந்தைகளாக இருப்பதால் அவர்களுக்கு தேவையற்ற அழுத்தம் உருவாகிறது. இதனால் அவர்கள் அவர்களாக இருக்க முடியவில்லை என்பதால்தான் மும்பை பள்ளியில் இவர்கள் இருவரையும் சூர்யா – ஜோதிகா சேர்ந்திருந்தார்கள்.

ஆனால் தங்கள் மீது பழியைச் சுமத்துவது போல் பேச்சு எழ ஆரம்பித்த பிறகுதான் சூர்யா இப்போது மெளனம் கலைத்திருக்கிறாராம்.

நாங்கள் மும்பையில் செட்டிலாகவில்லை. குழந்தைகள் அங்கு படிப்பதால், அடிக்கடி அங்கு சென்று அவர்களைப் பார்த்து வருகிறேன்’ என்று சற்று சூடாகவே சூர்யா கூறியதாக அவர்களுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...