No menu items!

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்திற்கு காரணம் இதுதானா?

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்திற்கு காரணம் இதுதானா?

காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும், தனுஷூம், 2021-ல் யாரும் எதிர்பாராத வகையில் விவாகரத்து வாங்கிவிட்டனர்.

இரு மகன்கள் நன்றாக வளர்ந்திருக்கும் இந்த காலக்கட்டத்தில் இவர்கள் இப்படி தங்களது திருமணத்தை முறித்து கொண்டதற்கு என்ன காரணம் என இவர்கள் இருவரும் இதுவரை எதுவும் கூறவில்லை.

இவர்கள் இருவரும் தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தை தங்களது வழியில் தொடங்கிவிட்டனர். இவர்களது இரு மகன்களும் அப்பா, அம்மா என மாறி மாறி இருந்து வருகின்றனர்.

ஆனால் அவர்களது விவாகரத்திற்கு காரணம், தனுஷ் கட்டியிருக்கும் புதுவீடுதான் என்று போயஸ் கார்டன் வட்டாரத்தில் முணுமுணுக்கிறார்கள்.

ரஜினி வீடு இருக்கும் போயஸ் கார்டனில்தான் தனுஷூம் இப்போது பிரம்மாண்டமான வீட்டை கட்டியுள்ளார். இந்த வீட்டைக் கட்டும் நோக்கத்துடன் தனுஷ் போயஸ் கார்டனில் இடத்தை வாங்கினார். போயஸ் கார்டனில் தனுஷ் வீடு கட்டுவது குறித்து ரஜினிக்கு தெரியவந்திருக்கிறது.

அப்போதே ரஜினி தனது மகள் ஐஸ்வர்யாவிடம், போயஸ் கார்டனில் அந்த இடத்தில் வீடு கட்ட வேண்டாம். வாஸ்து சரியில்லை. உங்களுடைய ஜாதகப்படி இங்கே வீடு கட்டினால், குடும்பத்தில் பிரச்சினை வரும் என்று எச்சரித்ததாக சொல்கிறார்கள்.

ஐஸ்வர்யாவும் இது குறித்து தனுஷிடம் விவாதித்தாராம். ஆனால் தனுஷ் அந்த இடத்தில்தான் வீடு கட்டுவேன் என்று தீர்மானமாக கூறினாராம்.

இப்போது இவர்கள் இருவருக்கும் விவாகரத்தாக காரணம் தனுஷ் கட்டிய புதுவீடுதான் என்கிறது போயஸ் வட்டாரம்.


இரண்டு மடங்கு சம்பளம் கேட்கும் அனுஷ்கா!!

பாகுபலிக்குப் பிறகு அனுஷ்கா எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளி விட்டுவிட்டார். இதற்கு மேலும் இடைவெளிவிட்டால் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று இப்போது Miss Shetty Mr Polishetty என்ற தெலுங்குப் படமொன்றில் நடித்து வருகிறார்.

இதையடுத்து அனுஷ்காவை கோலிவுட் வட்டத்தில் இருந்து கால்ஷீட் கேட்டு அணுகியிருக்கிறார்கள்.

கால்ஷீட் எல்லாம் ஓகேதான். எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் நடிக்கத் தயார். ஆனால் சம்பள விஷயத்தில் மட்டும் வியாபாரம் பேசவேண்டாம் என அனுஷ்கா கால்ஷீட் மேலாளர் தரப்பில் சொல்லப்பட்டதாம்.

பாகுபலி நேரத்தில் நடித்த அனுஷ்கா அப்போது ஒரு படத்திற்கு 3 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார். ஆனால் இப்போது அவருடைய சம்பளம் 6 கோடி. இதற்கு சம்மதம் என்றால் மேற்கொண்டு பேசலாம் என்று அனுஷ்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம்.

ஆறு கோடியா என்று ஓட்டம்பிடித்தபடியே திரும்பி வந்துவிட்டது அந்த கோலிவுட் தரப்பு.


தளபதிக்கு வில்லனாக தல??

விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத விஜய்68 படம் பற்றிய பல கிசுகிசுக்கள் உலா வர ஆரம்பித்திருக்கின்றன.

அதில் லேட்டஸ்ட், இப்படத்தில் விஜய்க்கு இரண்டு கதாபாத்திரங்களாம்.

அதேபோல் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். இருந்தாலும் இந்தப் படத்தில் தமனும் இசையில் கைக்கோர்க்க இருக்கிறாராம்.

’பாய்ஸ்’ படத்தில் நடித்த தமன், அதில் ட்ரம்ஸ் வாசிப்பவராக நடித்திருப்பார். உண்மையில் தமன் சிறந்த ட்ரம்ஸ் ப்ளேயர் மட்டுமில்லாமல், ப்ரோக்ராமரும் கூட. அந்தவகையில் யுவன் இசைக்கு தமன் ப்ரோக்ராமராக பணியாற்ற இருக்கிறாராம். இதனால் இரு இசை கில்லாடிகளின் கூட்டு முயற்சியில் விஜய்68 வெளிவர இருக்கிறது என்கிறார்கள்.

விஜய்68 பற்றிய உச்சக்கட்ட கிசுகிசு என்னவென்றால், இப்படத்தில் தளபதிக்கு வில்லனாக தலயை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறதாம். விஜய்க்கு வில்லன் அஜித்தா என்று யோசிப்பவர்களுக்கு, அந்த தல இல்ல. இது தமிழ்நாடு தத்தெடுத்த தல என்கிறார்கள். சென்னை கிங்க்ஸின் தோனியை நடிக்க வைக்கும் யோசனையும் இருக்கிறதாம்.

உண்மை பொய்யோ ஆனால் கேட்பதற்கு இந்த சமாச்சாரங்கள் எல்லாமே அதிரிப்புதிரியாகதான் இருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...