No menu items!

’தளபதி 68’ ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா?

’தளபதி 68’ ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா?

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான ‘லியோ’ வசூலில் புதிய சாதனை உண்மையா அல்லது பொய்யா என்று பரபரப்பு ஒரு பக்கம், ஃப்ளாஷ்பேக் சமாச்சாரம் பொய் என்பது மற்றொரு பக்கம் என திரும்பிய பக்கமெல்லாம் இடிப்பட்டு கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ பட ஷூட்டிங்கில் விஜய் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

இப்படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் தாய்லாந்தில் ஒரு வழியாக முடிந்திருக்கிறது. விஜய்யும் சென்னைக்கு திரும்பிவிட்டார்.

இந்நிலையில் ‘தளபதி 68’ படம், ஒரு ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று ஒரு பேச்சு பரவலாக அடிப்பட ஆரம்பித்திருக்கிறது.

2012-ல் வெளியான ‘லூபர்’ [Looper] படத்தின் ரீமேக் படம்தான் ‘தளபதி 68’ என்று கூறுகிறார்கள். லூபர் படத்தில் ஹாலிவுட் புகழ் ப்ரூஸ் வில்லிஸ், ஜோசப் கார்டன் லெவிட் மற்றும் எமிலி ப்ளண்ட் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

2044-ல் நடக்கும் கதைதான் இந்த லூபர் திரைப்படம். இதில் முக்கிய கதாபாத்திரமான ஜோ, பணத்திற்காக கொலை செய்யும் ஒரு தொல்ரீதியான கொலைக்காரன். இவர் கான்சாஸ் சிட்டி க்ரைம் சிண்டிகேட்டுக்காக வேலைப்பார்க்கிறார். இவர் செய்யும் அட்டகாசமான ஆக்‌ஷன்தான் ‘லூபர்’.

இப்போது இந்த கதையைப் போலவே ’தளபதி 68’ கதை இருப்பதாக ஒரு தகவல் உலா வருகிறது.

இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், ஆக்‌ஷன் காட்சிகளுக்கு தீனிப்போடும். ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என தெரிகிறது. இதற்கேற்ற வகையில் விஜய், வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் சமாச்சாரங்களுக்காக வெளிநாடு சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் – வெங்கட்பிரபு இணையும் இப்படத்தின் கதை இதுதான் என்று அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இன்னும் ஒரு ஷெட்யூல் ஷூட்டிங் நடந்தால், இது குறித்து கூடுதல் தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கலாம்.


தமன்னா – விஜய் வர்மா திருமணமா?

தமன்னா நடிக்க வந்த இத்தனை ஆண்டுகளில் இவ்வளவு நெருக்கமான காட்சிகளில் நடித்தது இல்லை என்று சொல்லுமளவிற்கு வெப் சிரீஸ் ஒன்றில் கவர்ச்சியில் தாராளம் காட்டியிருந்தார். இதற்கு ஒரே காரணம் அவரது காதலர் விஜய் வர்மாதான்.

விஜய் வர்மாவுடன் காதலா இல்லையா என்று பதில் சொல்லாமல் நழுவிக்கொண்டிருந்த தமன்னா, ஒரு கட்டத்தில் விஜய் வர்மா எனது நெருங்கிய ஆண் நண்பர் என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். இவர்கள் இருவருக்கும் இடையில் கடந்த ஓராண்டாகவே ‘நெருங்கிய நட்பு’ இருந்து வருகிறது. இவர்கள் இருவரும் ஒன்றாகவே பார்ட்டிகளிலும், விழாக்களிலும் கலந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

இப்போது தமன்னா திருமணத்திற்கு தயாராகிவிட்டார் என்று மும்பை வட்டாரங்களில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

தமன்னா கைவசம் படங்களும் அதிகமில்லை. தமன்னா வேண்டுமென்றே படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறுகிறார்கள். இதற்கிடையில் தமன்னாவின் பெற்றோர் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வருகிறார்களாம்.

அதேபோல் தமன்னாவும் திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக இருப்பதாக பேட்டிகளில் கூற ஆரம்பித்திருக்கிறார்.

இதையெல்லாம் கூட்டி கழித்து பார்த்த மும்பை வட்டாரம் இவர்கள் இருவரும் வெகுவிரைவிலேயே திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறுகிறது.

இதனால் கூடிய சீக்கிரமே ஏதாவது ஓடிடி-யில் பல கோடிக்கு இவர்களது திருமணத்தை ஸ்ட்ரிமிங் செய்ய பல கோடி கொடுத்திருக்கிறார்கள் என்ற தகவல் வெளியானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


இந்தியன் 2 & 3 பின்னணி!

கமலின் திரைப்பட பயணத்தில் மிக அதிக ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த படமாகி இருக்கிறது ’இந்தியன் 2’.

2017-ல் ஆரம்பித்த இப்பட வேலைகள் இந்த வருடம் டிசம்பர் மாதம்தான் முடிவடைய இருக்கிறதாம்.

உண்மை என்னவென்றால், கிடப்பில் இருந்த ‘இந்தியன் 2’ பட ஷூட்டின் பல மடங்கு நீண்டுகொண்டே போனது. காரணம் இங்கே சினிமாவில் நிகழ்ந்த பல மாற்றங்கள். இதனால் இந்தியனை இன்றைக்குள்ள ட்ரெண்ட்டில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டதை விட அதிகம் ஷூட் செய்திருக்கிறார்.

இப்படி எடுத்த ரஷ் காட்சிகளைப் போட்டு பார்த்ததில், இரண்டுப் படங்களுக்கு தாங்கும் வகையில் நீளம் இருந்தது. இதைப் புரிந்து கொண்டே இப்போது ‘இந்தியன் 2’ மற்றும் ‘இந்தியன் 3’ என இரு பாகங்களாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

’இந்தியன் 2’ படத்திற்கு தேவையான காட்சிகள் இருந்தாலும், ’இந்தியன் 3’ படத்திற்கான முன்னோட்டம், தேவைப்படுகிறதாம். அதேபோல் இந்தியன் 3 படத்திற்கு ஏற்றவகையில் ’இந்தியன் 2’ முடியும் வகையில் க்ளைமாக்ஸூம் அவசியமாக இருக்கிறதாம்.

இந்த காட்சிகளைதான் இப்போது ஷங்கரும் கமலும் எக்ஸ்ட்ராவாக சம்பளம் வாங்கிக்கொண்டு எடுத்து கொண்டிருக்கிறார்கள்.

அதாவது ஒரே படம்தான், ஆனால் இரண்டுப் படங்களுக்கான சம்பளத்தில் இப்போது விஜயவாடா, விசாகப்பட்டினத்தில் ஷூட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பத்துநாட்கள், ஷூட் செய்து இந்த காட்சிகளை எடுக்கும் வகையில், தீபாவளிக்குப் பிறகு திட்டமிட்டு இருக்கிறார்கள். இதனால் வருகிற டிசம்பரிலேயே ‘இந்தியன் 2’ மற்றும் ‘இந்தியன் 3’ ஆகிய இருப்படங்களும் தயாராகிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...