No menu items!

அசின் கணவரைப் பிரிகிறாரா?

அசின் கணவரைப் பிரிகிறாரா?

‘கஜினி’ படத்தில் வரும் ‘சுட்டும் விழிச்சுடரே’ பாடலைக் கேட்டாலே சூர்யா நம்முடையா ஞாபகத்திற்கு வருகிறாரோ இல்லையோ ஆனால் வடிவேலு நிச்சயம் நம் கண்களுக்குள் வந்து ஆட்டம் போட்டு கொண்டிருப்பார்.

அந்தப் பாடலில் புன்னகையோடு ஆடியிருக்கும் அசினை ஞாபகம் இருக்கிறதா…

தமிழ் சினிமாவில் அஜித், விஜய் என முன்னணி கமர்ஷியல் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர், பிறகு பாலிவுட் ஆசையில் மும்பைக்குப் பறந்தார்.

’கஜினி’ ஹிந்தி ரீமேக்கில் நடித்தார். சல்மான் கானுடன் ஒரு படம் நடித்தார். ஆனால் இங்கே அவருக்கு கிடைத்த வரவேற்பை போல் அங்கே அவருக்கு கிடைக்கவில்லை.

பட்டென்று மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை காதலித்து, கரம் பிடித்தார். 2016-ல் திருமணம். 20187-ல் அரின் என ஒரு அழகான பெண் குழந்தை.

இப்படியாக கழிந்த அசின் வாழ்க்கையில், லேட்டஸ்ட்டாக ஒரு குழப்பம்.

அசினுடைய ஒரு சமூக ஊடக தளத்தில் இருந்த சில புகைப்படங்கள் காணாமல் போயிருந்தன. அதாவது அசினும், அவரது கணவர் ராகுல் சர்மாவும் ஒன்றாக இருக்கும் சில புகைப்படங்கள் திடீரென காணமல் போயின.

அவ்வளவுதான், ராகுல் சர்மாவுக்கும், அசினுக்கும் இடையில் பிரச்சினை. இருவரும் பிரியப் போகிறார்கள். அசின் விவாகரத்து பண்ணப் போகிறார் என சமூக ஊடகங்களில் பற்ற வைத்துவிட்டார்கள்.

இந்த விவாகரத்து விஷயம் பரபரவென பரவிய போதிலும், இரண்டு மூன்று நாட்கள் அசின் தரப்பிலிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை.

இதனால் சமூக ஊடகங்களில் அசின் விவாகரத்து வைரல் ஆனது.

கொஞ்சம் தாமதமாக சுதாரித்து கொண்ட அசின், ‘’நானும் என் குடும்பமும் கோடை விடுமுறை கொண்டாட்டத்தில் இருக்கிறோம். இப்போ கூட நானும் என் கணவரும் நேருக்கு நேர் பார்த்தபடியே, காலை உணவை சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். இப்படியொரு கற்பனை எப்படி வந்தது, யாருக்கு வந்தது என தெரியவில்லை. கொஞ்சம் கூட உண்மையில்லாத வதந்தி இது’ என்று காட்டமாக ஒரு பதிலை தட்டிவிட்டிருக்கிறார்.

ஒருத்தர் புகைப்படத்தை நீக்கினாலே இப்படியொரு பஞ்சாயத்தா என வெறுத்துப் போயிருக்கிறார் அசின்.


அடுத்து ‘இந்தியன் 3’ ரெடி!

கமல் முன்பை போல இப்போது இல்லை.

துறுதுறுவென இருக்கிறார். கமர்ஷியல் படங்களை முடிந்தளவில் அதிகம் பண்ண நினைக்கிறார். முடிந்தவரையில் ஆக்‌ஷன் படங்களாக இருக்கவேண்டுமென நினைக்கிறார். முன்னணி இளம் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறார்.

சோர்ந்து போய் கிடந்த அவருக்கு, ‘விக்ரம்’ படம் கொடுத்த வியாபாரமும் வரவேற்பும் ரொம்பவே யோசிக்க வைத்திருக்கிறதாம்.

இதனால்தான் தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களில் நடிக்க விரும்புகிறாராம். அதனால் ‘இந்தியன் 2’ வெளியானதும், அதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து ‘இந்தியன் 3’ படத்தை எடுத்துவிடலாம் என ஆர்வத்தோடு இருக்கிறார் கமல்.
ஹிட்டான ஒரு படத்தின் தொடர் படங்களை எடுத்தால், அதை வியாபாரம் செய்வதும் எளிது. விளம்பரப்படுத்துவதும் சுலபம். என்பதால் ‘இந்தியன் 3’ படத்தில் ஷங்கரும், கமலும் யோசனையில் இருக்கிறார்கள்.
இந்தியன் படம் என்பது அரசியலையும், லஞ்சத்தையும் போட்டுத்தாக்கும் காட்சிகள், வசனத்துடன் இருப்பதால், தனது அரசியல் வாழ்க்கை இது நன்றாகவே உதவும் என கமல் நினைக்கிறாராம்.
மறுபக்கம், தற்போது ‘இந்தியன் 2’ தயாரிப்பில் கைக்கோர்த்திருக்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ், இதன் அடுத்து பாகத்தை எடுப்பதிலும் மும்முரமாக இருக்கிறது என்கிறார்கள்.

இதனால் ‘இந்தியன் 2’ வெளியானதுமே அதன் மூன்றாவது பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கலாம்.

இப்போது ’இந்தியன் 2’ படத்தின் ஷூட்டிங் இன்னும் 18 நாட்களுக்கு இருக்கிறது. ஷூட்டிங் முடிந்ததும் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் முழுவீச்சில் தொடரும். எல்லாமும் சரியான நேரத்தில் முடிந்தால், அடுத்தவருடம் ஏப்ரலில் ‘இந்தியன் 2’ வெளியாகும்.


ஆஸ்கரில் நுழைந்த மணிரத்னம்!

ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அகாடமி, ஒவ்வொரு வருடமும் புது உறுப்பினர்களை வரவேற்கும்.

சில மாதங்களுக்கு முன்புதான் ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் நடித்த ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் ஆஸ்கர் விருதுகளில் ஒரிஜினல் சாங் பிரிவில் விருதை வென்றது. கீரவாணி இசையமைத்த ‘நாட்டு நாட்டு’ பாடலுக்குதான் இந்த விருது கிடைத்தது.

இந்நிலையில் அகாடமி இந்த வருடம் புதிதாக 398 உறுப்பினர்களை வரவேற்றுள்ளது.
அந்தப் பட்டியலில் உலகப் புகழ்பெற்ற டெய்லர் ஸ்விஃப்ட், ஆஸ்டின் பட்லர், கே ஹூ குவான், த டேனியல் என முக்கியப்புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த பட்டியலில்தான் இப்போது நம்மூர் மணி ரத்னமும் இணைந்திருக்கிறார். மேலும் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடித்த ராம் சரண், ஜூனியர் என்.டி,ஆர். கீரவாணி, சாபு சிரில் என இன்னும் பலர் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...