No menu items!

அக்கா பிரியங்காவை எதிர்க்க மாட்டேன் – வருண் காந்தி

அக்கா பிரியங்காவை எதிர்க்க மாட்டேன் – வருண் காந்தி

நாடாளுமன்ற தேர்தலில் இப்போது காங்கிரஸ் மற்றும் பாஜகவின் கவனம் ரேபரேலி தொகுதி மீது திரும்பியிருக்கிறது. அங்கு யார் போட்டியிடப் போகிறார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.

உத்தர பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரை, அங்குள்ள மற்ற தொகுதிகள் கைவிட்டாலும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தன. . இதில் அமேதி தொகுதியை கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியது. ஆனால் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி வெற்றி பெற்றார். அந்த வகையில் பார்த்தால் இப்போதைக்கு உத்தர பிரதேச மாநிலத்தில் ரேபரேலி தொகுதி மட்டுமே காங்கிரஸ் கட்சியின் வசம் இருக்கிறது அந்த தொகுதியையும் எப்படியாவது கைப்பற்றி, உத்தர பிரதேசத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியை மொத்தமாக அகற்றிவிட வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறது பாஜக.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் ரேபரேலி தொகுதியில் இம்முறை பிரியங்கா காந்தி வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று பாஜக கருதுகிறது. அப்படி பிரியங்கா காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்து எம்பியானால், அது அக்கட்சிக்கு சாதகமாகிவிடும் என்றும், நாடெங்கிலும் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அது அளிக்கும் என்றும் பாஜக கருதுகிறது.

ராகுல் காந்தியை பப்பு என்று கிண்டலடித்து, அவரை ஒதுக்கித் தள்ள முயன்றது போல் போல் பிரியங்காவை அத்தனை எளிதாக ஒதுக்கித் தள்ள முடியாது என்று பாஜக தலைமை நினைக்கிறது. அதனால்  பிரியங்கா காந்தி ரேபரேலி தொகுதியில்  காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அவருக்கு எதிராக வலுவாக ஒரு வேட்பாளரை நிறுத்த பாஜக திட்டமிட்டு வருகிறது. அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியை நிறுத்தி, ராகுல் காந்தியை தோற்கடித்தது போல ரேபரேலியில் ஒரு வலுவான வேட்பாளரை நிறுத்த பாஜக திட்டமிட்டு வருகிறது.

அந்த வகையில் பிரியங்கா காந்தியை எதிர்த்து நிற்க பல பெயர்களை பாஜக பரிசீலித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமா பாரதி, உத்தர பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதாக், பஜ்ரங் தள் அமைப்பின் முன்னாள் தலைவர் வினய் கத்தியார், அரச குடும்பத்தைச் சேர்ந்த ராகேஷ் பிரதாப் சிங், சமஜ்வாதி கட்சியின் முன்னாள் கொறடாவான மனோஜ் பாண்டே என பல பெயர்களை இதற்காக பாஜக பரிசீலித்திருக்கிறது. இதற்காக தொகுதிக்குள் ஒரு ரகசிய சர்வேயையும்  நடத்தியுள்ளது. அந்தக் கருத்துக் கேட்பில் பங்கேற்ற பலரும் தற்போது பாஜகவில் இருக்கும் வருண் காந்தியை பிரியங்காவுக்கு எதிராக நிறுத்தலாம் என்று கூறியிருக்கிறார்கள். இருவரும் இந்திரா காந்தியின் குடும்பம் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள். பிரியங்கா காந்தியின் சித்தப்பா சஞ்சய் காந்தியின் மகன்தான் வருண் காந்தி. இவரும் இவரது அம்மாவும் பாஜகவில் இருக்கிறார்கள். இந்திரா காந்தி குடும்பத்திலிருந்து விலகியிருக்கிறார்கள். ராஜீவ் காந்திக்கும் அவரது குடும்பத்துக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை சஞ்சய் காந்தியின் குடும்பத்துக்கு இந்திரா கொடுக்கவில்லை என்ற வருத்தம் சஞ்சய் காந்தியின் மனைவி மேனகாவுக்கு உண்டு.

குடும்பப் பிரச்சினைகள் இருந்தாலும் அக்கா பிரியங்கா காந்தியை எதிர்த்து போட்டியிட வருண் காந்தி மறுத்திருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பிலிபிட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றிருக்கிறார் வருண். இந்தத் தொகுதியில் இவர் அல்லது மேனகா காந்தி  தொடர்ந்து வெற்றிப் பெற்று வருகிறார்கள். ஆனால் இந்த முறை வருணுக்கு இந்தத் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளிக்கவில்ல. கடந்த சில மாதங்களாகவே வருணுக்கும் பாஜக தலைமைக்கும் முரண்கள் இருக்கின்றன.

இந்தப் பின்னணியில் அக்கா பிரியங்காவை எதிர்த்து போட்டியிட மறுத்திருக்கிறார் வருண் காந்தி.   

இந்த தேர்தலில் ரேபரேலியில் போட்டியிட்டு ஜெயித்தாலும், தோற்றாலும் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். ஏற்கெனவே தான் எம்பியாக உள்ள பிலிபிட் தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், இந்த வாய்ப்பை வருண் காந்தி ஏற்றுக்கொள்வார் என்று பாஜகவினர் நம்பியிருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த்தற்கு நேர்மாறாக, இதை ஏற்க வருண் காந்தி மறுத்துள்ளார்.

எந்த நிலையிலும் இந்திரா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை எதிர்த்து போட்டியிடும் மனநிலையில் தான் இல்லை என்று அவர் கூறியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...