No menu items!

நெருக்கமான காட்சிகளில் நடிகர்கள் எப்படி? – தமன்னா

நெருக்கமான காட்சிகளில் நடிகர்கள் எப்படி? – தமன்னா

சினிமாவில் சில நேரங்களில் நெருக்கமான காட்சிகளுக்காகவே ரசிகர்கள் மீண்டும் மீண்டும் திரையரங்குகளுக்கு படையெடுப்பது வழக்கம்.

நெருக்கமான காட்சிகளில் இடம்பெறும் முத்தம், கட்டியணைத்தல் உள்பட இதர விஷயங்கள் அனைத்துமே நடிப்புதான் என்றாலும், அதில் நடிக்கும் ஆண் உணர்ச்சி வசப்படாமல் எப்படி இருக்க முடியும் என்ற கமெண்ட்கள் சூடேற்றிவிடும்.

ஒரு ஆணும் பெண்ணும் நெருங்கி நடிக்கும் போது குற்றச்சாட்டுகளும் அவ்வப்போது எழுவதோடு ஹாட் டாபிக்காகி சோஷியம் மீடியாவுக்கு தீனிப்போடும்.

இப்படி நெருக்கமான காட்சிகளுக்கு எதிராக பல கருத்துகள் இருந்தாலும், தமன்னா சொல்லியிருப்பதுதான் ஹைலைட்.

‘எனக்கு தெரிந்து பல நடிகர்கள் நெருக்கமான காட்சிகளில் நடிக்க தயங்குவார்கள். நெருக்கமாக நடிப்பதை படமெடுக்கும் போது அவர்களுக்கு அசெளகரியம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். தயக்கமும் இருக்கும். முதலில் காதல் காட்சிகளில் நடிக்கும் நடிகரும் ஒரு மனிதன்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது ஆண் பெண் என்று இல்லை. சில நேரங்களில் ஆண்கள் ரொம்பவே கூச்ச சுபாவம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். நெருங்கி நடிக்கும் போது உடன் நடிக்கும் நடிகை அதை எப்படி எடுத்து கொள்வார் என்ற கவலை அவர்களிடம் இருக்கும்’ என்று தமன்னா வெளிப்படையாகவே கூறும் தமன்னா ’இந்த’ மாதிரியான விஷயத்தில் நடிகர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்.


செல்வராகவனுக்கு என்னாச்சு?

’இங்கு தடுக்கி விழுந்தால் நம்மை யாரும் தூக்கி விட மாட்டார்கள். நாம்தான் அழுது புரண்டு ,நமக்கு நாமே ஆறுதல் அடைந்து ,எதையாவது பிடித்து கொண்டு ,நொண்டி நிமிர்ந்து நிற்க வேண்டும். யாரையாவது எதிர்பார்த்து விழுந்து கிடந்தால் வாழ்க்கை முழுக்க விழுந்து கிடக்க வேண்டியதுதான்.’

இப்படியொரு விஷயத்தை சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.

அட செல்வராகவனுக்கு என்னாச்சு என ஆளாளுக்கு உச் கொண்டிருக்கும் போதே,

’தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்’ என்று அடுத்த குண்டையும் தூக்கி கடாசியிருக்கிறார் மனிதர்.

இதைப் பார்த்து செல்வராகவனின் இல்லற வாழ்க்கையில் மீண்டும் புயலா என்று கட்டம் கட்டிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள் இணைய விமர்சகர்கள்.

இல்லற வாழ்க்கையில் பிரச்சினையா இல்லையா என்பது ஒரு பக்கம். ஆனால் செல்வராகவன் கொஞ்சம் மனமுடைந்து போயிருக்கிறார் என்கிறார்கள்.

தம்பி தனுஷூடன் இணைந்து எடுத்த ‘நானே வருவேன்’ படம் டேபிள் ஃப்ராஃபிட்டாக 17 கோடியை சம்பாதித்து கொடுத்திருந்தாலும், படம் இயக்குவதற்கு வாய்ப்புகள் பெரிதாக இல்லை.

வருமானத்திற்கு வழி வேண்டுமே என்று நடிக்க ஆரம்பித்திருந்தாலும் நடிக்கவும் அடுத்தடுத்து வாய்ப்புகள் வரவில்லை.

இயக்குநராக மீண்டும் முழுவீச்சில் களமிறங்கலாம் என்றால் முக்கிய நடிகர்கள் கால்ஷூட்டை இழுத்தடிக்கிறார்களாம். இதனால்தான் இப்படி மனம்விட்டு சோஷியல் மீடியாவில் சொல்லியிருக்கிறார் செல்வராகவன் என்கிறார்கள்.


கடுப்பில் கீர்த்தி ஷெட்டி!

’வணங்கான்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடி என்பதால் உற்சாகமாக கமிட் ஆனார் ’புல்லட்’ பாட்டில் அசத்தலாய் ஆட்டம் போட்ட கீர்த்தி ஷெட்டி.

ஆனால் இப்போது சூர்யா இப்படத்தில் இல்லையென்பதால் கொடுத்த கால்ஷூட்டை அப்படியே கொடுப்பதா அல்லது ‘வணங்கான்’ படத்திலிருந்து விலகுவதா என்ற குழப்பத்தில் இருக்கிறாராம்.

இந்நிலையில்தான் அவருக்கு ஹிந்திப்பட வாய்ப்பு ஒன்று வந்திருந்ததாம்.

பாலிவுட்டில் ஒரு ரவுண்ட் அடிக்கலாம் என்று உற்சாகமான கீர்த்தி ஷெட்டி, ஒகே சொல்லலாம் என்று நினைத்த போதுதான் பாலிவுட் பட தயாரிப்பு நிறுவனம் கேட்ட கேள்வி கீர்த்தியை டென்ஷனாக்கி விட்டதாக கிசுகிசுக்கிறார்கள்.

பெரிய ஹீரோக்களுடன் நாலைந்து படங்கள் நடித்தப் பிறகும் கூட கீர்த்தி ஷெட்டி, ஹீரோயினாக நடிக்க தகுதியானவரா இல்லையா என்பதை ஆடிஷன் செய்து பார்க்க வேண்டுமென பாலிவுட் ஆசாமிகள் கேட்டிருக்கிறார்கள்.

ஆடிஷன் வைத்து ஒகேவா இல்லையா என்று முடிவு செய்யும் நிலையெல்லாம் தாண்டி வந்த பிறகு இப்படி கேட்கிறார்களே என்று கொதித்து போய்விட்டாராம் கீர்த்தி ஷெட்டி.

அப்படி ஆடிஷனுக்கு வந்துதான் தேர்வாக வேண்டுமென்றால் அப்படியொரு வாய்ப்பே வேண்டாம் என்று கடுப்பில் இருக்கிறாராம்.

கீர்த்தி ஷெட்டி அழகுதான். ஆனால் அவரிடம் நடிப்பை கேட்டு வாங்குவதில் இயக்குநர்கள் போராட வேண்டியிருக்கிறது என்றும் ஒரு பேச்சு அடிப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...