No menu items!

கமல் காட்டிய பச்சைக்கொடி – ’இந்தியன் 2’

கமல் காட்டிய பச்சைக்கொடி – ’இந்தியன் 2’

கமல் மற்றும் ஷங்கர் மீண்டும் இணைந்திருக்கும் ‘இந்தியன் 2’ பட ஷூட்டிங் முழுமையாக முடிவடைந்து இருக்கிறது. நீண்ட காலமாக எடுக்கப்பட்ட ஷங்கர் படம் இதுவாகதான் இருக்கும்.

படம் முடிவடைந்துவிட்டதால், வருகிற கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘இந்தியன் 2’ படத்தின் பட்ஜெட்டில் பெரும் தொகை இப்படத்தின் காட்சிகளுக்கான வி.எஃப்.எக்ஸ் பணிகளுக்காகவே ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். பல காட்சிகளில் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் உண்மையாக நிகழும் சண்டைக்காட்சிகளைப் போலவும், காட்சிகளின் பிரம்மாண்டத்தையும் காட்டும் வகையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாம். இதனால் வி.எஃப்.எக்ஸ்-கான வேலைகள்தான் அதிக காலம் எடுத்துகொள்ளும் என்பதால், இப்பணிகள் முடிவடையும் கால அளவைப் பொறுத்து பட வெளியீட்டு தேதியை அறிவிக்க இருக்கிறார்கள்.

இது ஒரு பக்கமிருக்க, ‘இந்தியன் 3’ வேலைகளில் ஷங்கரும் கமலும் தொடர்ந்து இயங்கி வருகிறார்கள். அநேகமாக இப்படமும் 2024-ம் ஆண்டிலேயே வெளியாக இருக்கிறதாம். ஒரே ஆண்டில் ஒரு முன்னணி நடிகரின் படங்கள் வெளியானால், அது வசூலுக்கு பெரும் உதவியாக இருக்கிறது என்கிறார்கள் தமிழ் திரைப்பட வியாபாரப் புள்ளிகள். இதனால் ‘இந்தியன் 2’ வெளியான 3 மாத இடைவெளியில் ‘இந்தியன் 3’ வெளியாகலாம்.

’இந்தியன் 2’ வெளியாகும் அடுத்த 3 மாதங்களில் ‘இந்தியன் 3’ வெளியாவதற்கு கமல் தரப்பிலும் பச்சைக்கொடி காட்டப்பட்டுவிட்டது என்கிறார்கள். அநேகமாக 2024 ஆயுத பூஜை விடுமுறை நாட்களைக் குறிவைத்து ‘இந்தியன் 3’ வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

‘இந்தியன் 2’-ல் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களில் யாராவது ஒருவரது காட்சிகள் ’இந்தியன் 3’ இடம்பெறாது என்றும் கிசுகிசுக்கிறார்கள்.

திரைக்கதையின்படி இதில் ஒருவர் அல்லது இருவரது காட்சிகள் ‘இந்தியன் 3’-ல் இடம்பெறாதாம்.


ஷ்ரத்தா ஸ்ரீராம் டாட்டூக்கு என்ன அர்த்தம்?

சினிமாவில் இப்பொழுது பச்சைக் குத்தி கொள்ளும் டாட்டூ ஒரு கலாச்சாரமாகி வருகிறது. சமந்தா, ஷ்ருதி ஹாஸன், த்ரிஷா என இப்படியொரு பட்டியல் நீள்கிறது. பொதுவாகவே டாட்டூ என்பது காதலை, ஆசையை, ஆளுமையைக் காட்டும் ஒன்றாகவே இருந்து வருகிறது.

இந்த பட்டியலில் இப்போது சேர்ந்திருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அஜித்தின் ‘நேர்க்கொண்ட பார்வை’, ‘இறுகப்பற்று’ ஆகிய படங்களில் நடித்த அதே ஷ்ரத்த ஸ்ரீநாத்தான்.

தனது இடது மார்புக்கு மேல் ஒரு வித்தியாசமான டிசைனில் டாட்டூ குத்தியிருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இதற்கு என்ன அர்த்தம் அல்லது என்ன காரணம் என்று கேட்டால், ‘பல வருஷங்களுக்கு முன்னாடி, இசையுலகுல கொடிக்கட்டிப் பறந்த ஒரு இசைக்குழு ‘பீட்டிள்ஸ்’. அந்த பேண்ட்டோட கவர் அல்பத்தைதான் நான் டாட்டூவாக குத்தியிருக்கிறேன். இது காதலைக் குறிக்கும்.

எனக்கு 18 வயசான போது, ஒரு பையன் மேல எனக்கு க்ரஷ் இருந்துச்சு. அவன்தான் எனக்கு இந்த பீட்டிள்ஸ் இசைக்குழுவைப் பத்தி எனக்கு சொன்னான். அதுல இருந்து பீட்டிள்ஸ் என்றாலே எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. அதன் நினைவாகதான் இந்த டாட்டூவை போட்டுகிட்டேன்.

இந்த டாட்டூ ஒரு பக்கா டாட்டூ. இதை அழிக்க முடியாது.’’ என்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

இந்த பச்சை குத்துகிற விஷயம் ஒரு புறமிருக்க, தமிழ் சினிமா பக்கம் அதிகம் பார்க்க முடியவில்லையே என்று கேட்டால், ‘’பணம் கிடைக்குதுன்னு என்னைத் தேடி வர்ற எல்லா கேரக்டர்களிலும் நான் நடிக்க விரும்பல. பணம்தான் முக்கியம் என்றால், நான் ரொம்ப சுலபமா 10 முதல் 12 படங்கள்ல நடிச்சிருப்பேன்.

ஏகப்பட்ட போராட்டங்களுக்கு அப்புறம்தான் நான் சினிமாவுல நடிக்க வந்தேன். வக்கீல் தொழிலை விட்டேன். அதனால் எனக்குப் பிடிச்ச, எனக்கு முக்கியத்துவமுள்ள கதாபாத்திரங்கள்லதான் நடிக்க விரும்புறேன்.

எனக்கு ஸ்கிர்ப்ட் பிடிக்கல்லைன்னா, நான் அதுல நடிக்க மாட்டேன். என்னோட ஸ்டாண்டர்ட் கொஞ்சம் மேல இருக்கு. அம்மாவாக நடிக்கணும்னா கூட எனக்கு ஓகேதான். ஆனா நடிக்கிறது வாய்ப்பே இல்லாம, முக்கியத்துவம் இல்லாம இருந்தால், அந்த அம்மா கதாபாத்திரத்துல நடிக்கிறதால ஒரு பலனும் இல்ல.’ என்கிற ஷ்ரத்தா ஸ்ரீநாத்விடம் எந்த தலைப்பிலான விஷயங்களையும் பேச முடியும். அந்தளவிற்கு ஒரு புத்திசாலி நடிகையாக இருக்கிறார் என்பது மற்ற நடிகைகளுக்கு புகையைக் கிளப்பியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...