No menu items!

ரஜினியுடன் இணையும் ஃபகத் பாசில்! ரஜினி170 அப்டேட்!!

ரஜினியுடன் இணையும் ஃபகத் பாசில்! ரஜினி170 அப்டேட்!!

‘ஜெயிலர்’ ஆகஸ்ட் 10-, தேதி வெளியாக இருக்கிறது. திரையரங்குகளில் சென்று பார்ப்பதற்கான டிக்கெட் விற்பனையில் ஒரு லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகியிருப்பதாக பிரபல டிக்கெட் முன்பதிவு செயலி புக் மை ஷோ தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில், ரஜினியின் அடுத்தப்படம் குறித்த சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ’ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் ரஜினியின் அடுத்தப்படத்தை இயக்கவிருக்கிறார். ’ஜெயிலர்’ படத்திற்கு இப்போது கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்து, ரஜினி170 படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் எண்ணத்தில் இருக்கிறது லைகா.

இந்தப்படத்தில் ரஜினிக்கு ஜோடி யார் என்ற கேள்விக்கு இப்பொழுது விடை கிடைத்திருக்கிறது. அஜித்துடன் ‘துணிவு’ படத்தில் நடித்த மலையாள நடிகை மஞ்சு வாரியரை ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

கதாநாயகி யார் என்பது ஒரு பக்கமிருக்க, இப்படத்தில் தெலுங்கு நடிகர் ’நான் ஈ’ புகழ் நானி, பஹத் ஃபாசில் இவர்கள் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. இவர்கள் இருவரும் இப்படத்தில் இணைய இருப்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் ரஜினியுடன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ரஜினி170 படத்திற்கு ரஜினி 50 கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். இந்த நாட்களுக்கு எல்லா காட்சிகளை எடுக்கும்படி இயக்குநர் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். வருகிற அக்டோபர் மாதம் முதல் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


விக்ரமுடன் இணையும் விஜய் சேதுபதி!

மலையாள சினிமா பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனையைப் படைத்த படம் ‘2018’. மலையாள சினிமாவில் அதிகம் வசூல் செய்த, அதாவது 200 கோடிக்கும் அதிகம் வசூலித்தப் படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது 2018.

இப்படத்தின் இயக்குநர் ஜூட் அந்தனி ஜோசப் இப்போது தனது அடுத்தப்பட வேலைகளில் இறங்கி இருக்கிறார். இப்படத்தை தமிழ் சினிமாவில் பெரும் பொருட்செலவில் படங்களை எடுத்து வரும் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருக்கிறதாம்.

இந்தமுறை பான் – இந்தியா படமாக எடுக்கும் திட்டத்தில் இருக்கும் ஜூட் அந்தனி ஜோசப், தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியிடுவதற்கு வசதியாக, மார்கெட் மதிப்புள்ள நட்சத்திரங்களுக்கு வலை வீசி வருகிறாராம்.

அந்தவகையில் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி இவர்கள் இருவரையும் இணைந்து நடிக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்கிறார்கள்.

விக்ரமிற்கு மலையாளத்தில் ஓரளவிற்கு மார்க்கெட் இருக்கிறது. விஜய் சேதுபதி தெலுங்கு, ஹிந்தியிலும் ஓரளவிற்கு பரீட்ச்சயமான முகம் என்பதால்தான் இந்த முயற்சியாம்.

இவர்கள் இருவருடன் ராஷ்மிகா மந்தானாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பெரும் தொகை சம்பளமாக கொடுக்கவும் லைகா தயாராக இருக்கிறது. ராஷ்மிகா கால்ஷீட் கொடுப்பாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.


சிவகார்த்திகேயனின் அடுத்த ஜோடி யார்?

’ப்ரின்ஸ்’ படம் சரியாக ஓடாததால், கொஞ்சம் மனவருத்தத்தில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு ‘மாவீரன்’ ஓரளவிற்கு தெம்பைக் கொடுத்திருக்கிறது.

இதே வேகத்தில் அடுத்து ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுத்துவிட வேண்டுமென முனைப்பில் இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

அடுத்து சிவகார்த்திகேயன், விஜய்யை வைத்து ஹிட் படங்கள் கொடுத்த ஏ.ஆர், முருகதாஸூடன் இணையவிருக்கிறார். இப்படத்திற்கான திரைக்கதை வேலைகள் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டன.

இதனால் நட்சத்திர தேர்வுக்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி தேடும் வேலைகள் கடும் சவாலாக இருக்கிறதாம். யாராவது ஒரு பெரிய தலையை ஜோடியாக்கி விடவேண்டுமென இருக்கிறார்கள்.

சமீபத்திய தகவலின் படி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ஹிட்டடித்த ‘சீதாராமம்’ படத்தின் நாயகி மிருணாள் தாகூரிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள்.

தமிழில் நல்ல வாய்ப்பு என்பதால் உற்சாகமான மிருணாள் தாகூர் உடனே நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும், சம்பளமாக 3 கோடி கேட்பதாகவும் இப்போது தகவல் கசிந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...