No menu items!

தெலுங்கு சினிமாவின் ட்ரீம்கேர்ள் ஸ்ரீலீலா!

தெலுங்கு சினிமாவின் ட்ரீம்கேர்ள் ஸ்ரீலீலா!

’பெல்லி சண்டாடி’ என்ற ஒரே படம்தான். அப்படத்தின் ஹீரோயினாக அறிமுகமான ஸ்ரீலீலாவை உச்சத்தில் கொண்டு வைத்திருக்கிறார்கள் தெலுங்கு சினிமா ரசிகர்கள்.

அடுத்து மாஸ் மகாராஜா என்றழைக்கப்படும் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்த ‘தமாக்கா’ படத்தில் அவர் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து கிறங்கிப் போனது தெலுங்கு சினிமாவின் படைப்பாளிகள் மற்றும் நடிகர்கள் வட்டாரம்.

இது போதாதா, இப்போது ஸ்ரீலீலாவின் கைவசம் 9 படங்கள். இன்னும் இரண்டு மூன்று படங்கள் கதை விவாத நிலையில் இருக்கின்றன.

மகேஷ் பாபு, பவன் கல்யாண், விஜய் தேவரகொண்டா, ராம் பொத்னேனி என எல்லாருமே டாப் லெவல் ஹீரோக்கள்தான் ஸ்ரீலீலாவின் ஜோடியாக நடிக்கிறார்கள்.

இதனால் ஒய்வே இல்லாமல், டபுள் ஷிஃப்ட்டில் தினமும் ஷூட்டிங்கில் இருக்கும் பிஸியான நடிகை என பெயரெடுத்து இருக்கிறார் இந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க அழகி.

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்.டி. ராமாராவின் நூற்றாண்டு விழாவில் ராம் சரண், வெங்கடேஷ், பாலகிருஷ்ணா என பெரிய தலைகள் கலந்து கொள்ள, அதில் கலந்து கொள்ள ஸ்ரீலீலாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, இதன்மூலம் ஸ்ரீலீலாவின் மீது இருக்கும் மயக்கம் எந்தளவிற்கு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இதனால், தெலுங்கு சினிமாவின் ‘அதிகம் ரசிக்கப்படும்’, ‘அதிகம் நேசிக்கப்படும்’, ‘அதிகம் மவுசு இருக்கும்’, ‘அதிகம் டிமாண்ட் இருக்கும்’ இப்படி பல அதிக அம்சங்களுக்காக குறிப்பிடப்படும் நடிகையாகி இருக்கிறார்.

இப்படி ஸ்ரீலீலாவுக்கு இருக்கும் மவுசை பார்த்து தமிழில் இவரை இறக்குமதி செய்யலாம் என்று ஹைதராபாத்திற்கு ஃப்ளைட்டில் ஏறிய இரண்டு தயாரிப்பாளர்களுக்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் நோ சொல்லிவிட்டாராம் ஸ்ரீலீலா.

தெலுங்கில் நன்றாகப் போய் கொண்டிருக்கும் போது, தேவையில்லாமல் என்னுடைய கவனத்தை சிதறடிக்க விரும்பவில்லை என்று நாசூக்காக சொல்லிவிட்டாராம்.

கொசுறு செய்தி என்னவென்றால் ஸ்ரீலீலா, டாக்டருக்கு படித்து கொண்டிருக்கிறார்.

மருத்துவ படிப்பை முடித்துவிட்டு இவர் க்ளினிக் தொடங்கினால், இவரைப் பார்க்கவே அட்மிட் ஆகும் ஆசாமிகள் எண்ணிக்கை கணிசமாக இருக்கும் போல.


விக்ரம் ரெடி!

’மகான்’, ‘கோப்ரா’ என தொடர்ந்து படங்கள் ஹிட் ஆகவிட்டாலும் கூட தற்போதைய நிலவரப்படி தமிழ் கமர்ஷியல் ஹீரோக்களில் மத்தியில் மவுசு உடன் இருப்பவர் விக்ரம் மட்டுமே.

தொடர் தோல்விகளுக்கு நடுவே ‘பொன்னியின் செல்வன்’ தொடர் படங்களின் மூலம் விக்ரமிற்கு மீண்டும் ஒரு வரவேற்பு உருவாகி இருக்கிறது.

இந்நிலையில்தான், பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படத்தில் நடித்துவருகிறார். கேஜிஎஃப் படங்களுக்குப் பிறகு கோலார் தங்க சுரங்கத்தை பின்னணியாக கொண்டு ‘தங்கலான்’ படம் உருவாகி வருகிறது.

’தங்கலான்’ ஷூட்டிங் நடக்கும் போதுதான், விக்ரமிற்கு அடிப்பட்டது. விலா எலும்பில் விழுந்த அடி, எலும்பு முறிவு வரை போய்விட்டது. இதனால் திட்டமிட்ட ஷூட்டிங்கை அப்படியே ரத்து செய்யவிட்டு ஒட்டுமொத்த தங்கலான் குழுவும் அங்கிருந்து கிளம்பியது.

விக்ரம் ஒரு மாதம் ஓய்வெடுக்கவேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைத்ததால், இதுநாள் வரை தங்கலான் ஷூட்டிங் நடைபெறவில்லை. இப்பொழுது விக்ரம் உடல்நிலை தேறியிருப்பதால், ஜூன் 15-ம் தேதி அல்லது 17-ம் தேதி மீண்டும் ஷூட்டிங்கை ஆரம்பிக்க பா.ரஞ்சித் திட்டமிட்டு இருக்கிறார்.

விக்ரம் எடுத்த ஓய்வினால், இந்த ஷெட்யூலை தொடர்ந்து நீண்ட நாட்கள் எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தங்கலான் குழு. அதற்கு விக்ரமும் ’நான் ரெடி’ என கூறிவிட்டார். இதனால் இடைவெளி இல்லாமல் இரண்டு வாரங்கள் ஷூட் நடக்கவிருக்கிறதாம்.

ஷூட் முடிந்த உடனேயே போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளையும் தொடர இருக்கிறார் பா.ரஞ்சித்.


தலித்துகளுக்கு திரையரங்குகளில் இடமில்லையா?

பாகுபலி தொடர் படங்களுக்குப் பிறகு மெகா பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிக்க முடியுமென்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும் பிரபாஸ், இப்போது ‘ஆதிபுரூஷ்’ என்ற புராணப்படத்தில் ராமர் வேடத்தில் நடித்திருக்கிறார்.

இப்படம் வெளியாகி இருப்பதால் அதற்கான ப்ரமோஷன் வேலைகள் இறங்கி இருக்கிறது ஆதிபுரூஷ் படக்குழு.

திருப்பதி கோயிலுக்கு அப்பட இயக்குநரும், சீதாவாக நடிக்கும் பாலிவுட்டின் கீர்த்தி சனனும் போயிருந்தார்கள். அங்கே தரிசனத்தை முடித்து விட்டு கிளம்புகையில், இயக்குநர் கீர்த்தியின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுக்க, அது இப்போது ட்ரோல் ஆகி வருகிறது.
இந்த பஞ்சாயத்து போதாதென்று இப்போது புதிய பிரச்சினை ஒன்று சோஷியல் மீடியாவில் கிளம்பியிருக்கிறது.
ஆதிபுரூஷ் வெளியாகும் திரையரங்குகளில் அனுமாருக்கு என ஒரு இருக்கை விடப்படும் என்றெல்லாம் செய்திகள் வெளியான போது கூட யாரும் எதுவும் சொல்லவில்லை.

ஆனால் அதற்கு அடுத்தக்கட்டமாக, ஆதிபுரூஷ் வெளியாகும் திரையரங்குகளில் அப்படம் பார்க்க தலித் மக்களுக்கு அனுமதி இல்லை என்று சோஷியல் மீடியாவில் ஒரு பிரச்சாரத்தை யாரோ கிளப்பிவிட்டு விட்டார்கள்.

இதைப் பார்த்து பதறிப்போன ‘ஆதிபுரூஷ்’ படக்குழுவினர், அந்த மாதிரி வெளியானது போலியானது. தவறானது. மக்களை திசைதிரும்பும் முயற்சி என்பதை புரிய வைக்கும் முயற்சிகளில் இறங்கினர்.

ஃபேக்ட் செக்கிங் எனப்படும் முறை மூலம் பகிரப்பட்ட அந்த விஷயம் தவறு என்று வெளிப்படுத்தியதோடு, சாதி, நிறம், நம்பிக்கை இவற்றில் எந்தவித பாகுப்பாடும் பார்ப்பது இல்லை என ஆதிபுரூஷ் படக்குழு உறுதியாக இருப்பதாகவும், இதுபோன்ற சமூகத்தை சீர்குலைக்கும் சக்திகளுக்கு எதிராக போராடுவதில் உங்கள் உதவி தேவை’ என்று ஆதிபுரூஷ் படம் சார்பாக கேட்டுகொள்ளப்பட்டிருக்கிறது.

அரசியலில் இருந்து வந்த இதே மாதிரியான பிரச்சாரங்கள் இப்போது கலை வடிவமான, வெகுஜன ஊடகமான சினிமாவில் அதிகம் அரங்கேறி வருவது சினிமாவிற்கு நல்லதல்ல என்ற முணுமுணுப்பு இப்போது சினிமா படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், நட்சத்திரங்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...