No menu items!

குடிப்பழக்கத்தை விட்ட தனுஷ்!

குடிப்பழக்கத்தை விட்ட தனுஷ்!

’தனுஷூக்கு குடிப்பழக்கம் இருந்தது.’

இப்படியொரு ஸ்டேட்மெண்ட்டை கொஞ்சம் வெளிப்படையாக கூறி இருக்கிறார் ரோபோ சங்கர்.

சமீபத்தில் ரோபோ சங்கர் பேட்டியொன்றில், ‘முன்பெல்லாம் நான் ரொம்ப அதிகம் குடிப்பேன். தனுஷூக்கும் குடிப்பழக்கம் இருந்தது. ஆனால் தனுஷ் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டார். சிலபேருக்கு குடிக்கிற பழக்கம் அதிகமில்லை என்றாலும், ஏதாவது ஒரு பார்ட்டியில் ரிலாக்ஸாக இருப்பதற்காக குடிப்பது வழக்கம். அப்படி குடிப்பதையும் கூட தனுஷ் நிறுத்திவிட்டார்.

என்னைப் பார்த்து ’நீங்களும் குடிப்பழக்கத்தை நிறுத்துங்கள்’ என்று சொன்னார்.

உண்மையில் எனக்கு பட வாய்ப்பு கொடுக்கவில்லை. ஒரு வாழ்க்கையே கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்வேன்’ இப்படியாக தனுஷ் புராணம் பாடுகிறார் ரோபோ சங்கர்.

சில வாரங்களுக்கு முன்பு மிக இளைத்துப் போனதுபோல் தோற்றமளித்த ரோபோ சங்கர் இப்போது நன்றாகவே மாறியிருக்கிறார். மெலிந்த உடலில் இப்போது நல்ல முன்னேற்றம்.

இப்படி வெளிப்படையாக பேசிய ரோபோ சங்கர்தான், இப்போது ஹன்சிகா மோத்வானியின் காலைத் தடவவிட வில்லை என்று மேடையில் கூறி எல்லோரிடத்திலும் வாங்கிக்கட்டி கொண்டிருக்கிறார்.


நயன்தாரா சினிமாவுக்கு குட்பை?

இப்போது பார்க்கிற பக்கமெல்லாம், இணையத்தில் நுழையும் தளங்களில் எல்லாம், விஜய் சினிமாவிலிருந்து ஒரு ப்ரேக் எடுக்கப் போகிறார். அரசியலில் ஈடுப்படுவதற்காக 3 ஆண்டுகள், நடிப்புக்கு டாடா சொல்லப் போகிறார் என்று எக்கச்சக்கமான யூகங்கள்… செய்திகள்..

விஜய் ப்ரேக் எடுக்க போகிறாரோ இல்லையோ..ஆனால் கூடிய சீக்கிரமே நயன்தாரா சினிமாவுக்கு குட்பை சொல்ல விரும்புகிறாராம்.

நயன்தாரா சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும். ஹீரோயினாக தாக்குப்பிடிக்க வேண்டுமென்பதற்காகவே வயிற்றில் அறுவைச்சிகிச்சை செய்து கொண்டார். இதனாலேயே அவருக்கு குழந்தைப் பெறும் பாக்கியம் இல்லாமல் போனது என்று தமிழ் சினிமா இண்ட்ஸ்ட்ரிக்குள் ஒரு பேச்சு உண்டு.

இப்படி சினிமாவிற்காகவே தன்னையே மாற்றிக்கொண்ட நயன்தாராவுக்கு இப்போது நடிப்பதில் பெரிய ஆர்வம் இல்லையாம். இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிடுவார் என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம்.

நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, தனது லிப் பாம் வியாபாரம், ரியல் எஸ்டேட் வர்த்தகம், ரவுடி பிக்சர்ஸ் மூலம் படத்தயாரிப்பு என வாழ்க்கையை எந்தவித டென்ஷனும் இல்லாமல், அமைதியுடன் தொடர விரும்புகிறாராம்.

இதனால் படங்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும் எண்ணத்தில் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.


பஹத்ஃபாசில், கீர்த்திசுரேஷை ஓரங்கட்டிய வடிவேலு!

மீம்ஸ்களின் முடிசூடா மன்னனாக இருக்கும் வடிவேலு, இனியும் மீம்ஸ் நக்கல்களில், நையாண்டிகளில் இருப்பாரா மாட்டாரா என்ற விவாதம் ஆரம்பித்திருக்கிறது. அந்தளவிற்கு அவரது ரீ-எண்ட்ரியில் இரண்டாவதாக வெளியாகி இருக்கும் ‘மாமன்னன்’ படத்தின் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது.

இதனால் மேற்படி தலைப்பை படிக்கும் போது, நடிப்பில் பஹத்ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷை வடிவேலு ஓரங்கட்டியதைதான் சொல்லியிருப்பதாக நினைக்கலாம். ஆனால் இந்த சமாச்சாரமே வேறு.

சம்பள விஷயத்தில் வடிவேலுக்கு கீர்த்தி சுரேஷ், பஹத்ஃபாசில் இவர்கள் இருவரையும் விட அதிகம் என்கிறது ‘மாமன்னன்’ வட்டாரம்.

நகைச்சுவை நடிகராகவே அடையாளம் காணப்படும் வடிவேலுவை ஒரு முழுமையான குணசித்திர நடிகராக ‘மாமன்னன்’ படத்தில் காட்டியிருக்கிறார் இயக்குநர். மேலும் இந்தப்படம் உதயநிதியின் கடைசிப்படம் என்று அறிவித்திருப்பதால், கால்ஷீட்டை அதிகம் கொடுத்திருக்கிறார் வடிவேலு.

இதனால் வடிவேலுக்கு சம்பளமாக 4 கோடி கொடுக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். படத்தில் வில்லனாக நடிப்பில் மிரட்டியிருக்கும் பஹத்ஃபாசிலுக்கு 3 கோடியும், கதாநாயகியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷூக்கு 2 கோடியும் சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

இந்த வகையில், வடிவேலு சம்பள விஷயத்தில் வில்லனையும், ஹீரோயினையும் ஓரங்கட்டி விட்டார் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...