No menu items!

அம்மாடியோவ் – ஆலியா பட்டின் ஆசைப் பொருட்கள்

அம்மாடியோவ் – ஆலியா பட்டின் ஆசைப் பொருட்கள்

பாலிவுட்டின் இப்போதைய நம்பர் 1 நடிகை ஆலியா பட். முன்னணி  நாயகர்கள் நடிக்கும் படம் என்றாலும் அதில் ஆலியா பட் நாயகியாக நடித்தால் கொஞ்சம் கூடுதல் கோடிகள் வசூலாகும் என்ற நம்பிக்கை பாலிவுட் தயாரிப்பாளர்களுக்கு உண்டு. அதனாலேயே அவர் கேட்கும் கோடிக்கணக்கான ரூபாயை (இப்போது 20 கோடி ரூபாய் என்கிறது பாலிவுட் வட்டாரங்கள்) சம்பளமாக கொடுத்து தங்கள் படங்களில் நடிக்க வைக்கிறார்கள்.  

கூட்டிக் கழித்துப் பார்த்தால் மாதம் ஒன்றுக்கு சுமார் 5 கோடி ரூபாயை சம்பாதிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.  திரைப்படங்கள் மட்டுமின்றி விளம்பரப் படங்கள் மூலமாகவும் கோடிகளைக் குவிக்கும் இவரது இப்போதைய சொத்து மதிப்பு  299 கோடி ரூபாய். இதன்மூலம் மிகக் குறைந்த (28) வயதில் அதிகம் சம்பாதித்த நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இப்படி பணம் சம்பாதிப்பது மட்டுமின்றி, அதை ஜாலியாக  செலவு செய்வதிலும் நம்பர் 1-ஆக இருக்கிறார் ஆலியா பட். அவர் பயன்படுத்தும் சில விலை உயர்ந்த பொருட்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்…

வீடு:

மும்பை மற்றும் லண்டன் ஆகிய நகரங்களில் 2   வீடுகளை வைத்திருக்கிறார் ஆலியா பட். இதில் மும்பையின் ஜுஹூ பகுதியில் அவர் வசிக்கும் அபார்ட்மெண்டின் பரப்பளவு 2,300 சதுரடி. இந்த அப்பார்ட்மெண்டின் விலை 13.11 கோடி.  இதே அபார்ட்மெண்டின் மற்றொரு தளத்தில் அவரது கணவர் ரன்பீர் கபூரின் அபார்ட்மெண்டும் உள்ளது.

மும்பையில் வீடு இருந்தாலும், படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நேரங்களில் லண்டனில் வசிப்பதையே ஆலியா பட் மிகவும் விரும்புகிறார். இதற்காக அங்கு 16 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு வீட்டை வாங்கி வைத்துள்ளார்.

கைப்பை:

பெண்களுக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று ஹேண்ட் பேக். தாங்கள் வைத்திருக்கும் கைப்பை தங்களின் கலை உணர்ச்சியை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பது பெரும்பாலான பெண்களின் விருப்பம். அதிக வசதி இல்லாத பெண்களே ஹேண்ட் பேக்கில் கவ்சனம் செலுத்தும்போது, கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ஆலியா பட் கவனம் செலுத்த மாட்டாரா என்ன?… இவர் பயன்படுத்தும் ஒவ்வொரு  கைப்பையின் விலையும் 1.5 லட்ச ரூபாய்க்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.  Louis Vuitton, Gucci, Prada  வகை ஹேண்ட் பேகுகளையே அதிகம் பயன்படுத்தி வருகிறார் ஆலியா பட். 

கார்கள்:

  Audi Q7, Audi Q5, Audi A6, BMW 7 வகை கார்களை சொந்தமாக வைத்துள்ளார் ஆலியா பட். இதில் BMW 7 காரின் மதிப்பு 1.37 கோடி ரூபாய். இவற்றுடன் Range Rover Vogue காரும் வைத்திருக்கிறார். இதன் மதிப்பு 1.88 கோடி ரூபாய்.

 சொகுசு வேன்:

இத்தனை கார்கள் இருந்தாலும் படப்பிடிப்புக்கு செல்லும்போது சொகுசு வேனில் செல்வது ஆலியா பட்டின் வழக்கம். படப்பிடிப்பு இடைவேளைகளில் அவர் ஓய்வெடுக்கும் இந்த சொகுசு வேனை, பாலிவுட் நடிகரான ஷாரூக் கானின் மனைவி கவுரி கான் வடிவமைத்து தந்துள்ளார். கலைநயத்துடனும், பல்வேறு சொகுசு வசதிகளுடனும் உள்ள இந்த வாகனத்தை உருவாக்க 5 கோடி ரூபாய் செலவிட்டிருக்கிறார் ஆலியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...