No menu items!

Ranjithame –வை அடித்து தூக்கிய #Arabikkuthu

Ranjithame –வை அடித்து தூக்கிய #Arabikkuthu

விஜய் நடிக்கும் ’வாரிசு’ படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்கள். இதன் முதல் கட்டமாக ‘ரஞ்சிதமே’ என்ற பாடலையும் வெளியிட்டு உள்ளார்கள்.

விஜய் பாடியதோடு ஆடியிருக்கும் இந்தப் பாடல் வழக்கம் போல் பல ரிக்கார்ட்களை உடைத்தெறிந்து இருக்கிறது.

ஆனால் ‘ரஞ்சிதமே’ பாடலால் ஒரு சில ரிக்கார்ட்களை உடைக்க முடியவில்லை. அந்த ரிக்கார்ட்களை வைத்திருப்பது வேறு யாருமில்லை. அதுவும் விஜய்தான்.

’ரஞ்சிதமே’ பாடல் 18.5 மில்லியன் வியூக்களை பெற்றிருக்கிறது. வெளியான 24 மணி நேரத்தில் 1.3 மில்லியன் லைக்குகளுடன் களத்தில் இருக்கிறது.

ஆனால் விஜயின் பீஸ்ட் பட ‘அரபிக்குத்து’, ‘அதிக பார்க்கப்பட்ட மற்றும் அதிக லைக் செய்யப்பட்ட பாடல்வரிகளுடன் கூடிய வீடியோ’ என்ற ரிக்கார்ட்டை தக்க வைத்திருக்கிறது. பிப்ரவரி 2022-ல் வெளியான அரபிக்குத்து பாடல், வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் 25 மில்லியன் வியூஸ்களையும், 2.2 மில்லியன் லைக்குகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தென்னிந்திய லிரிக்கல் வீடியோக்களில் இன்று வரை அதிக பார்க்கப்பட்ட மற்றும் அதிகம் லைக் செய்யப்பட்ட பாடலாக ‘அரபிக்குத்து’ முன்னணியில் இருக்கிறது.

இரண்டாவது பாடலாக அனிருத் ரவிச்சந்திரன் பாடிய பாடலை வெளியிட்அ இருக்கிறது ‘வாரிசு’ டீம். இதாவது கைக்கொடுக்குமா என தெரியாமல் தயாரிப்பாளர் தரப்பு கொஞ்சம் எதிர்பார்புடன் இருக்கிறதாம்.

இதனால் விஜய் ரசிகர்கள் ’எங்கே தங்களது தலைவனது ‘வாரிசு’ சொதப்பி விடுமோ’ என்று கொஞ்சம் டல்லடித்தப்படி இருக்கிறார்கள்.

ஷங்கரின் மனதை மாற்றிய மணி ரத்னம்

’பாகுபலி’ [BHAGUBALI] தொடர் படங்களின் பிரம்மாண்ட வெற்றியும், பொன்னியின் செல்வனின் [PS1] அசத்தல் வெற்றியும், ஷங்கரை தனது வழக்கமான கமர்ஷியல் ஃபார்மூலாவிலிருந்து மாற்றி யோசிக்க வைத்திருக்கிறது.

ஆரம்பம் முதலே தனது நண்பர்கள் வட்டாரத்தில் எழுத்தாளர் வெங்கடேசன் எழுதிய ‘வேள் பாரி’ நாவலை படியுங்கள் என பரிந்துரை செய்து வந்த ஷங்கர், இப்போது நாமும் ஏன் பாகுபலி, பொன்னியின் செல்வன் மாதிரி ஒரு வரலாற்று கதையை எடுக்க கூடாது என களத்தில் இறங்கி இருக்கிறார்.

வெங்கேடேசனின் ‘வேள் பாரி’தான் அடுத்தப் படத்திற்கான கதை என்பதை ஷங்கர் உறுதிப்படுத்தி விட இப்பொழுது அதற்கான வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன.

வெங்கடேசன் இப்பொழுது எம்.பி. ஆக இருப்பதால், தனக்கு துணையாக பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்களை வைத்து கொண்டு ’வேள் பாரி’யை திரைவடிவத்திற்கு ஏற்றவாறு எழுதிக்கொண்டிருக்கிறார்.

’வேள் பாரி’யை தமிழில் எடுக்கும் பட்சத்தில் இங்குள்ள ஹீரோக்களிடையே யார் நடிப்பது என்பதில் போட்டி இருக்கும். அநேகமாக விக்ரமிற்கு அதிக வாய்ப்புகள் என்ற பேச்சுகளெல்லாம் கிளம்பின.

ஆனால் பான் – இந்தியா படமாக எடுக்க விரும்பும் ஷங்கர், பாலிவுட் ஹீரோவை வைத்து படமெடுக்க விரும்புவதாக தெரிகிறது. வரலாற்றுப் படங்களில் மாஸ் காட்டிய ரன்வீர் சிங்கை நடிக்க வைக்கும் வேலைகள் ஆரம்பமாகி இருக்கிறதாம்.

பொன்னியின் செல்வனை வெளியிடுவதற்கு முன்பாகவே இரண்டு பாகங்கள் என மணி ரத்னம் அறிவித்தது போலவே ’வேள் பாரியை’ மூன்றுப் பாகங்களாக எடுக்கும் திட்டம் இருக்கிறதாம்.

தற்போது ஷங்கர் ‘இந்தியன் – 2’ மற்றும் ராம்சரணின் தெலுங்குப் படமான ‘ஆர்சி-15’ பிஸியாக இருக்கிறார். மறுபக்கம் ரன்வீர் சிங் ‘மெட்ராஸ் எக்ஸ்ப்ரஸ்’ புகழ் ரோகித் ஷெட்டியின் ’சர்க்கஸ்’, கரன் ஜோஹரின் ‘ராக்கி அவுர் ராணி கீ ப்ரேம் கஹானி’ மற்றும் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பையூ பாவ்ரா’ படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். மேலும் ’வேள் பாரி’ திரைக்கதையிலும் வேலைகள் அதிகமிருக்கிறது.

இதனால் அடுத்த வருடம் இந்த ப்ராஜெக்ட் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹன்சிகா வருங்கால கணவருக்கு கல்யாணமாயிடுச்சா?

காதல் தோல்விக்குப் பிறகு கொஞ்ச காலம் அமைதியாக இருந்த ஹன்சிகா ஒரு வழியாக தனது மெளனத்தைக் கலைத்திருக்கிறார்.

பிரான்சின் #EiffelTower முன் தனது #LoveProposal பற்றி ஹன்சிகாவிடம் வெளிப்படுத்தி இருக்கிறார் சோஹைல் கதுரியா. இதனால் சோஹைலுடன் திருமணம் என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.

இவர்கள் திருமண வேலைகள் ஒரு பக்கம் நடக்க, திடீரென வைரலாகி இருக்கிறது ஒரு வீடியோ.

அது சோஹைலின் முதல் திருமண வீடியோ என்று பேச்சு அடிப்படுகிறது. என்னது சோஹைலுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதா என ரசிகர்கள் ஷாக்காகி இருப்பது ஒரு பக்கம். ஆனால் அந்த வீடியோவில் ஒரு பகுதியைப் பார்ப்பவர்களுக்கு தங்களது தலையில் லைட்டாக இடி விழுந்தது போல் இருக்கிறதாம். அந்த வீடியோவில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் திரும்பி திரும்பி ரிவைண்ட் செய்து பார்க்கிறார்கள்.

அதில் இருக்கும் காட்சி இதுதான். சோஹைல் கதுரியாவின் முதல் திருமண விழாவில் ஒரு பக்கம் சோஹைல் தனது மனைவி ரிங்கி பஜாஜ் உடன் இருக்கிறார். மறுபக்கம் ஒரு அழகிய இளம் பெண் அசத்தலாக ஆட்டம் போடுகிறார். அந்தப் பெண் வேறு யாருமல்ல. சாட்சாத் புது மணப்பெண் ஹன்சிகாவேதான்.

அப்படியென்றால் சோஹைலின் முதல் மனைவி ரிங்கி பஜாஜ் பத்தி ஏதாவது தெரியுமா என்று கேட்பவர்களுக்கு எறும்புக்கடி போன்ற ஒரு சுர்ரென்ற மேட்டர் இருக்கிறது. அந்த ரிங்கி பஜாஜ் ஹன்சிகாவின் நெருங்கிய தோழியாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...