No menu items!

அனிகா சுரேந்திரன் லிப் லாக்!

அனிகா சுரேந்திரன் லிப் லாக்!

‘என்னை அறிந்தால்’, ‘விஸ்வாசம்’ என இரண்டுப் படங்களில் அஜித்தின் மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன்.

அனிகாவைப் பார்த்தவர்கள் அடித்த கமெண்ட், ’அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் ரஜினி – மீனா நடித்தப் பிறகு ‘எஜமான்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவே நடித்தார். அதைப் போல அடுத்த ரவுண்ட்டில் இவர் அஜித்திற்கு ஜோடியாக நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்பதுதான்.

இப்பொழுது அந்த கட்டத்திற்கு வந்துவிட்டார் அனிகா சுரேந்திரன். குழந்தை நட்சத்திரமாக இருந்தவர் ஹீரோயினாக ப்ரமோஷன் ஆகியிருக்கிறார்.

தமிழில் இவரை நடிக்க வைக்க, பலர் முயன்ற போது கூட, அனிகா ஹீரோயினாக டேக் ஆஃப் ஆனது டோலிவுட்டில்தான். தெலுங்கு மலையாளம் என இரண்டுப் படங்கள் முடித்துவிட்டார்.

’மலையாளப்படமான ஒ மை டார்லிங்’கில் லிப் லாக் காட்சி, நெருக்கமான காட்சி என இளமைத் துள்ளலுடன் நடித்து அதிர வைத்திருக்கிறார் அனிகா சுரேந்திரன்.

லிப் லாக், க்ளாமர் என எதுவாக இருந்தாலும் ஒகே என்று தாராளம் காட்டும் அனிகாவைத் தேடிப்போனால், அவரது அம்மா 5 விரலைக்காட்டி சம்பளம் கேட்கிறாராம்.

liplock #ajith #thala #anika #anikasurendran #tamil #actresslove #viswasam #ennaiarinthaal #ajithdaughter


30 நாட்கள் தொடர் ஷூட்டிங்கில் ’இந்தியன் 2’

1996-ல் வெளிவந்த ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது தயாராகி வருகிறது.

ஆரம்பத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து, பட்ஜெட் பஞ்சாயத்து என முடங்கிய ‘இந்தியன் 2’ ஷூட்டிங் இப்பொழுது விறுவிறுவென போய்க்கொண்டிருக்கிறது.

’விக்ரம்’ படத்தின் இரண்டாம் பாகம் நீண்ட இடைவெளிக்குப் பின் வந்தது ஹிட்டானதால், அதே மேஜிக் ’இந்தியன் 2’ படத்திலும் நடக்கும் என கமல் உற்சாகமாக இருக்கிறாராம். இதுவும் ஷூட்டிங் வேகமெடுக்க காரணம்.

இப்பொழுது கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் 30 நாட்கள் தொடர்ந்து ஷூட்டிங் நடத்த திட்டமிட்டு, ஷூட்டிங்கை தொடங்கியும் விட்டார்கள்.

கமல் தொடர்பான காட்சிகளை ஷங்கர் ஷூட் செய்கிறார். மறுபக்கம் இதர நட்சத்திரங்கள் நடிக்குக் காட்சிகளை இன்று இயக்குநர்களாக இருக்கும் ஷங்கரின் முன்னாள் உதவி இயக்குநர்களான வசந்த பாலன், சிம்புத்தேவன் இருவரும் ஷூட் செய்கிறார்களாம்.

இந்த ஷெட்யூல் முடிந்தப்பிறகு, இந்தியன் 2 டீம் வெளீநாடுக்குப் பறக்க இருக்கிறது. அங்கு இரண்டு வாரம் ஷூட் நடத்தும் திட்டமிருக்கிறதாம்.

indian #india2 #kamal #kamalhaasan #shankar #rahulpreetsing #priyabhavanishankar #bobysimha #lyca #kajalagarwal


ஒடிடி-யில் உலக சாதனைப் படைத்த ’துணிவு’!

பொங்கலுக்கு வெளியான ‘துணிவு’, இப்பொழுது ஒடிடி-யிலும் ஸ்ட்ரீமிங் ஆகிக் கொண்டிருக்கிறது.

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் அஜித்தின் படங்களில் மிக அதிகம் வசூலித்தப் படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் ‘துணிவு’ இப்பொழுது ஒடிடி தளத்திலும் புதிய சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறது.

முன்னணி ஒடிடி தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’ தனது படங்கள் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டு இருக்கிறது. அதில் 2023-ம் ஆண்டில் பிப்ரவரி 6-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையிலான நாட்களில், ஆங்கிலம் அல்லாத இதர மொழிகளைச் சேர்ந்தப் படங்களின் global Top 10 list -ல் 2 இடங்களைப் பிடித்திருக்கும் ஒரே இந்தியப்படம் என்ற பெருமையை தட்டிச்சென்றிருக்கிறது துணிவு.

‘துணிவு’ படத்தின் தமிழ் மற்றும் ஹிந்தி பதிப்பும்தான் இப்பொழுது நெட்ஃப்ளிக்ஸின் க்ளோபல் சார்ட்டில் 3-வது மற்றும் 4-வது இடத்தைப்பிடித்திருக்கின்றன. ஒட்டுமொத்த உலகளவில் தமிழ் துணிவை 4.05 மில்லியன் மணி நேரம் மக்கள் பார்த்திருக்கிறார்கள். அதேபோல் ஹிந்தி துணிவை 3.73 மில்லியன் மணி நேரம் மக்கள் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.

நெட்ஃப்ளிக்ஸில் இப்படியொரு உலகளவிலான ரிக்கார்ட்டை படைத்திருக்கும் முதல் இந்தியப்படம் ’துணிவு’. என்பது குறிப்பிடத்தக்கது.

netflix #netflixindia #rhala #ajith #ak #thunivu #ajith61 #hvinodh #chellachella #manjuwarrier

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...