No menu items!

அஜித் சம்பளம் 105 கோடி!

அஜித் சம்பளம் 105 கோடி!

தமிழ் சினிமாவில் இன்று அதிக சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த ரஜினியை ஓரங்கட்டி இருக்கிறார் விஜய்.

‘வாரிசு’ படத்திற்கு விஜய் 125 கோடி சம்பளம் வாங்கியதாக கூறுகிறார்கள். அதாவது 109 கோடி கையிலும், அந்த சம்பளத்திற்கு கட்டவேண்டிய வரியை தயாரிப்பாளரே செலுத்தியதாகவும் இதனால் விஜயின் சம்பளம் 125 கோடியாக உயர்ந்துவிட்டது என்று கூறப்படுகிறது.

இதற்கு அடுத்து ‘லியோ’ படத்திற்கு விஜய் 150 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாகவும் பேச்சு அடிப்படுகிறது.

இந்நிலையில், அஜித் அடுத்து நடிக்கவிருக்கும்  ‘விடாமுயற்சி’ படத்திற்காக வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் தயாராக இருக்கும் இப்படத்தில் நடிக்க லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் அஜித்திற்கு 105 கோடி சம்பளம் கொடுத்திருப்பதாக லைகா வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது.

105 கோடி சம்பளம், இதர வரிகளை அஜித்தே கட்டிவிடுவார் என்றும் சொல்கிறார்கள். பொதுவாகவே அஜித் தனது சம்பளத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை அவரே கட்டிவிடுவது வழக்கம்.

நவம்பரில் தனது பைக் பயணத்தை அஜித் தொடர இருப்பதால், அதற்குள் ‘விடாமுயற்சி’ படத்தை முடிக்கும் வகையில் மகிழ்திருமேனி முழுவீச்சில் இறங்கி இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...