No menu items!

திமுகவுக்கு 21; பாஜகவுக்கு 329 – வெளிவந்த புதிய கருத்துக் கணிப்பு!

திமுகவுக்கு 21; பாஜகவுக்கு 329 – வெளிவந்த புதிய கருத்துக் கணிப்பு!

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்தியுள்ளது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ETG Reserve என்ற நிறுவனத்துடன் இணைந்து டைம்ஸ் நவ் தொலைக்காட்சி இந்த கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. இந்த கருத்துக் கணிப்பின்படி பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சுமார் 370 இடங்களில் வெற்றி பெரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜகவுக்கு 329 முதல் 359 இடங்கள் வரை கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

பாஜகவுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 27 முதல் 47 இடங்கள் வரை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 22 இடங்களும், பிஜு ஜனதா தளத்துக்கு 10 முதல் 12 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 72 முதல் 92 இடங்கள் வரையும் கிடைக்கும் என்று இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு வாய்ப்பு:

தேசிய அளவில் பின்தங்கி இருந்தாலும் தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு மக்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருப்பதாக இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு 21 முதல் 22 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 5 முதல் 7 இடங்களும், பாஜகவுக்கு 2 முதல் 6 வரையிலான இடங்களும், அதிமுகவுக்கு 1 முதல் 4 வரையிலான இடங்களும் நாடாளுமன்ற தேர்தலில் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரியவ்ந்துள்ளது.

மோடிக்கு அதிக ஆதரவு:

நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் நாட்டின் பிரதமராக யார் பதவியேற்பார் என்ற கேள்விக்கு, மோடியின் பெயரை பெருவாரியான மக்கள் கூறியுள்ளனர். இந்த கருத்துக் கணிப்பில் மோடிதான் அடுத்த பிரதமராக வருவார் என்று 64 சதவீதம் பேரும், ராகுல் காந்திதான் பிரதமராக வருவார் என்று 17 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் அல்லாமல் வேறு ஒரு தலைவர் பிரதமராக வருவார் என்று 19 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்று 45 சதவீதம் பேரும், 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்று 14 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...