No menu items!

2022 – தமிழ்நாட்டில் அதிகம் பேசப்பட்ட 11 வார்த்தைகள்

2022 – தமிழ்நாட்டில் அதிகம் பேசப்பட்ட 11 வார்த்தைகள்

1. பூமர்:

நிறைய பேர் இந்த வார்த்தையை வயசோட சேர்த்துப் பார்ப்பாங்க. ஆனா அப்படி இல்ல. பழைய கதையை பேசிக்கிட்டு – ஒரே விஷயத்தை சொல்லிக்கிட்டு – அப்பலாம்னு ஆரம்பிச்சு போரடிக்கிறவங்க எல்லோருமே பூமர்தான்.


2. க்ரின்ஞ்:

உருகி உருகி காதலிக்கிறதை ஒரு காலத்துல பெருமையா பார்த்தாங்க, தெய்வீகம்னுலாம் பூ சுத்துவாங்க. அதே மாதிரி அம்மா சென்டிமென்ட், ஊரு செண்டிமெண்ட்டையெல்லாம் வச்சு இப்ப கம்பு சுத்துனா…சிம்பிளா க்ரின்ஞ்னு கிண்டலடிச்சுட்டு போறாங்க.


3. வாடகைத் தாய்:

நயன்தாரா – விக்னேஷ் சிவன் கல்யாண மேட்டரே வைரலா போய்ட்டு இருந்தது. அதைவிட அவங்க இரட்டை குழந்தை பெத்துக்கிட்டாங்கன்ற நியூஸ் இன்னும் வேகமா வைரல் ஆனது. ஜூன்ல கல்யாணம் பண்ணி அக்டோபர்ல குழந்தையானு யோசிக்கிறதுக்குள்ள வாடகைத் தாய்னு ஒரு மேட்டர் உள்ள வந்து கலக்கிடுச்சு. வாடகைத் தாய் – சர்ரகேசின்ற இங்கிலீஷ் வார்த்தையெல்லாம் நம்ம வாய்ல சர்வ சாதாரணம வந்துட்டு போச்சு


4. சோழர்கள்:

பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்காக மணிரத்னம் கோஷ்டி பண்ண விளம்பர வெள்ளத்துல தமிழ்நாட்டுல எல்லோருமே ஹிஸ்ட்ரி ப்ரொஃபசர் ஆகிட்டாங்க. சோழர் பரம்பரையை அலசி ஆராய்ஞ்சாங்க. ராஜராஜ சோழன், ஆதித்ய கரிகாலன்னு சொல்லிட்டு படத்துக்குப் போய் ஐஸ்வர்யாராய், த்ரிஷானு ரசிச்சுட்டு வந்தாங்க


5. மாமாகுட்டி:

லவ்டுடே படத்துக்குப் பிறகு பசங்களோட ஜாலி வார்த்தையா மாமாகுட்டி மாறிடுச்சு. பூமர் அங்கிள்களுக்கு இந்த வார்த்தையோட அர்த்தத்தை புரிஞ்சிக்க கஷ்டமா இருக்கும். ஆனால் 2கே கிட்ஸ்க்கு மாமாகுட்டியின் அர்த்தம் நல்லாவே தெரியும்.


6. செஸ்:

சென்னைல சர்வதேச செஸ் ஒலிம்பியாட் நடந்ததுல நம்ம மக்கள் எல்லோரும் செஸ் விரும்பிகளா மாறிட்டாங்க. கறுப்பு வெள்ளை கட்டம் போட்ட சட்டை போடுறது, தம்பி பொம்மை முன்னாடி செல்ஃபி எடுக்கிறதுனு ஒரு ஒரு மாசம் தூள் கிளப்பிட்டாங்க.


7. வாட்ச்:

பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச் என்ன வாட்ச் என்று ஆரம்பித்து ரஃபேல் விமானம் வரை போய்விட்டது. மற்ற பிரபலங்கள் என்ன வாட்ச் கட்டுகிறார்கள் என்ற பட்டியல் எடுக்கப்பட்டு சோஷியல் மீடியாவில் அலசி ஆராயப்பட்டது.


8. வாரிசு:

விஜய்யோட அடுத்தப் படம் பெயர் தொடர்ந்து ட்ரெண்டிங்ல இருக்கு. கூடவே அஜித்தோட துணிவு படப் பேரும். ஆனா உதயநிதி மினிஸ்டரானதும் வாரிசுன்ற வார்த்தை மீண்டும் ட்ரெண்ட் அடிச்சது. உதயநிதி துணிவு மிக்க வாரிசு என்று கவிஞர் வைரமுத்து பஞ்ச் அடித்ததும் நடந்தது.


9. திராவிட மாடல்:

ராம்ப் வாக் மாடல்கள் பத்திதான் அதிகம் கேள்விப் பட்டிருக்கிறோம். இப்ப திராவிட மாடல் தமிழ்நாட்டுல அதிகம் பேசுற விஷயமா மாறிடுச்சு. திமுககாரங்க அந்த மாடலை கொண்டாடுறாங்க. பாஜககாரங்க கிண்டலடிக்கிறாங்க. அதிமுக காரங்க நாங்கதான் உண்மையான் திராவிட மாடல்னு சொல்றாங்க. நமக்கு நல்லா பொழுதுபோகுது.


10. ஆடியோ:

ஆடியோனதும் எதோ மியூசிக்னு நினைக்கக் கூடாது. இது பாஜகவினர் ரெண்டு பேர் அக்கா – தம்பினு சொல்லிக்கிட்டு அசிங்கமா பேசிக்கிட்ட ஆடியோ. ஆடியோ கேட்டியானு தமிழ்நாடு மட்டுமில்ல டெல்லி வரை திருச்சி சூர்யா – டெய்சி ஆடியோ சூட்டைக் கிளப்பிச்சு.


11. கவர்னர்:

பொதுவா கவர்னர்கள் வருவாங்க போவாங்க…விழாக்கள்ல சிரிச்சுக்கிட்டு போஸ் தருவாங்க. ஆனா இந்த கவர்னர் அப்படி இல்லை. அரசியல்ல இல்லனாலும் அரசியல் பேசி தன் பேரை தினம் தினம் பேச வச்சுட்டாரு. கவர்னரே வேணாம்னு டெல்லி புகார் கொடுக்கிற அளவுக்கு ஆளும் கட்சிக்கு டென்ஷன் கொடுத்துட்டாரு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...