No menu items!

அஜித் படத்தை வெளியிட்டது யார்?

அஜித் படத்தை வெளியிட்டது யார்?

AK-யின் அந்த குடும்பப் புகைப்படம் அவரது ரசிகர்களுக்கு வலிமையான உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.

’AK’ என்று ரசிகர்களாலும், நலம்விரும்பிகளாலும் செல்லமாக அழைக்கப்படுவதற்கு தயாராகிவரும் ’தல’யின் அமர்க்களமான, அட்டகாசமான, குடும்ப புகைப்படம்தான் இணையத்தில் லேட்டஸ்டாக வரலான விஷயம்.

சால்ட் & பெப்பர் லுக்கில் பெப்பர் மிஸ் ஆகியிருந்தாலும், #AK61 திரைப்படத்திற்கான ’வில்லாதி வில்லன்’ லுக்கில் கெத்தாக சிரிக்கும் AK, முடிவில்லா புன்னகையுடன் AK -ன் தோளில் சாய்ந்திருக்கும் அவரது ’லக்கி சார்ம்’ ஷாலினி, ’அல்ட்டிமேட் க்யூட்’ அனொஸ்கா, ’சுட்டி’ ஆத்விக் என AK-யின் அந்த குடும்பப் புகைப்படம் அவரது ரசிகர்களுக்கு வலிமையான உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.

குடும்பம் வேறு, தொழில் வேறு. இரண்டையும் ஒன்றாகப் பார்ப்பதில் AK-க்கு விருப்பம் கிடையாது. அவரது ரசிகர்களுக்கு சொல்வதும் அதேதான். ’முதல்ல குடும்பத்தைப் பாருங்க. படம் வந்தா தியேட்டருக்கு வந்து பாருங்க.’ என்ற AK-ன் ஸ்டேட்மெண்ட் தமிழ்நாட்டில் உள்ள அவரது ரசிகர்களுக்கு கொடுக்கப்பட்ட கமிட்மெண்ட்.

அதற்கேற்ற வகையில் மீடியா, நண்பர்கள் வட்டாரம் என எந்த பக்கமும் தலையைக் காட்டவில்லை தல. ஆனால் அதையும் மீறி ’AK’-ன் குடும்ப புகைப்படம் எப்படி..இப்படி? என்பதுதான் இப்போது ஹாட் டாபிக்.

’AK’ ரசிகர்கள் இப்போது சொல்லும் இரண்டே வார்த்தைகள் ‘ தேங்க்ஸ் மச்சான்’. உங்களுக்கும் புரிந்திருக்குமே. அவரேதான்….

ஆத்விக்கின் பிறந்த நாளை கொண்டாடிய உற்சாகத்தோடு, ஹைதராபாத்திற்கு பறக்கிறார் AK. ரமோஜி ராவ் ஸ்டூடியோவில் #AK61 ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது. தல விருந்தாக இப்படம் வெளிவரும் வரை காத்திருக்கும் ரசிகர்களுக்கு, இந்த ஃபேமிலி போட்டோ ஒரு ஸ்டார்ட்டர் பேக்காக இருக்கும் என்பதால் ’AK’ புன்னகையோடு உடற்பயிற்சியில் மும்முரமாகி இருக்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...