No menu items!

ரஜினியுடன் மீண்டும் ஜோடிசேரும் ஐஸ்!

ரஜினியுடன் மீண்டும் ஜோடிசேரும் ஐஸ்!

ஐஸ்வர்யா ராய்க்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் அடுத்த படத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யாரை நடிக்கவைப்பது என்பது பற்றிய ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இதில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய்க்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

மீண்டும் மோகன்

மோகன்

80-களில் ரசிகர்களை தன் வசம் வைத்திருந்த நடிகர் மோகன், மீண்டும் திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். விஜய்ஸ்ரீ இயக்கும் படத்தில் அவர் மீண்டும் நாயகனாக களமிறங்குகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக குஷ்பு நடிக்கிறார்.

விஜய் சேதுபதியின் நாயகிகள்

விஜய்சேதுபதி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரவுள்ள ‘விக்ரம்’ படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக 3 நாயகிகள் நடிக்கவுள்ளனர். அவர்கள் தொலைக்காட்சியில் இருந்தவர்கள். வெள்ளித்திரையில் பெரிய நடிகருடன் ஜோடி சேரும் முதல் படம் என்பதால் தனது சந்தோஷத்தை தனது சமூகவளைத்தலங்களில் அவர்கள் பகிர்ந்து வருகின்றனர். தொளிப்பாளினியான மகேஸ்வரி , மைனா நந்தினி மற்றும் சிவானி நாராயணன் ஆகியோர்தான் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகின்றனர்.

தெலுங்கு நாயகர்களின் மாற்றம்

ஓடிடியில் வெளியாகும் தெலுங்குப் படங்கள், தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்தச் சூழலில் தெலுங்குப் பட நாயகர்கள் பலரும் தமிழிலிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். தங்கள் படத்தில் தமிழகத்தை மையப்படுத்தி சில காட்சிகளை வைக்க வேண்டும் என்று இயக்குநர்களிடம் அவர்கள் கேட்டு வருகிறார்களாம்.

பாரீஸில் ‘வலிமை’

லீ கிராண்ட் ரெக்ஸ்

உலகின் மிகப்பெரிய திரையரங்கமான லீ கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் ‘வலிமை’ திரையிடப்பட இருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். 2,800 இருக்கைகள் கொண்ட இந்த திரையரங்கம், பாரீஸில் உள்ளது. இங்கு பிப்ரவரி 25, 26 மற்றும் 28 என 3 நாட்கள் ‘வலிமை’ திரையிடப்பட இருப்பதாகவும், படத்தைக் காண தான் பாரீஸ் நகருக்கு செல்ல இருப்பதாகவும் ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...