No menu items!

அஜித்தின் அடுத்த திட்டம்

அஜித்தின் அடுத்த திட்டம்

‘வலிமை’ படத்தை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிக்கும் படத்துக்கே கால்ஷீட் கொடுக்க அஜித் முடிவெடுத்துள்ளார்.

அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம், வரும் 24-ம் தேதி ரிலீஸாகிறது. இப்படத்தை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிக்கும் படத்துக்கே கால்ஷீட் கொடுக்க அஜித் முடிவெடுத்துள்ளார். ‘வலிமை’ படத்தை இயக்கியுள்ள எச்.வினோத் இப்படத்தையும் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 9-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது. இப்படத்தில் நாயகன் – வில்லன் என இரண்டு வேடங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம் அஜித்.

சசிகுமாரின் புதிய ஜோடி

சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. ‘அஞ்சல’ படத்தை இயக்கிய தங்கம் பா.சரவணன் இயக்கும் இந்தப் படத்தை மோகன் தயாரிக்கிறார். சசிகுமாருக்கு ஜோடியாக அனன்யா நாகல்லா நடிக்கிறார். தெலுங்கு நடிகையான இவர், இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். சாம் சி.எஸ். இதன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மீண்டும் மீரா ஜாஸ்மின்

‘ரன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, பல படங்களில் நடித்தவர் மீரா ஜாஸ்மின். பின்னர் துபாயைச் சேர்ந்த அனில் ஜான் என்பவரைத் திருமணம் செய்து திரையுலகில் இருந்து விலகியவர், இப்போது மீண்டும் நடிக்க விரும்புகிறார். தன்னுடைய கவர்ச்சிப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

வடிவேலுவை இயக்கும் கவுதம் மேனன்

நகைச்சுவை நடிகர் வடிவேலுவை வைத்து ஒரு படத்தை இயக்க கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

விவாகரத்து செய்யும் ராக்கி

இந்தி, மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து புகழ்பெற்றவர் கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்த். இவர் ரிதேஷ் என்பவரை 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் மனமொத்துப் பிரிவதாக ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...