No menu items!

விஜய்யின் அரபிக் குத்து

விஜய்யின் அரபிக் குத்து

கோலிவுட் டூ ஹாலிவுட் – ஹாட் நியூஸ்

விஜய்யின் ‘அரபிக் குத்து’

நடிகர் சிவகார்த்திகேயன் வரிகளில் ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘அரபிக் குத்து’ பாடலின் ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாடலின் நடுவில் வரும் வசனங்களைப் பேசியது யார் என்ற கேள்வியும் விஜய் ரசிகர்களிடையே உள்ளது. சிவகார்த்திகேயன் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என்பதால், பாடலை எழுதிய அவரே அந்த வசனத்தையும் பேசியிருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. இந்நிலையில் அந்த வசனத்தை விஜய்தான் பேசியுள்ளார் என்று தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

கார்த்தி

யானையால் தள்ளிப்போன படப்பிடிப்பு

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் தற்போது ஏப்ரல் மாதத்துக்கு படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இப்படம் யானைகளைச் சார்ந்தது என்பதாலும், பொதுவாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் யானைகளுக்கு மதம் பிடிக்கும் என்பதாலும் படப்பிடிப்பை ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.

துருவ் விக்ரம்

பாடகரானார் துருவ்

விக்ரம்‘மகான்’ திரைப்படத்தில் முதல் முறையாக ‘மிஸ்ஸிங் மீ’ என்ற பாடலைப் பாடியுள்ளார் துருவ் விக்ரம். சந்தோஷ் சிவன் இசையமைத்துள்ள இப்பாடலை விவேக்குடன் இணைந்து துருவ் எழுதியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான்

அமெரிக்கா செல்கிறார் ரஹ்மான்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஜுலை மாதம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின்போது லாஸ் ஏஞ்சல்ஸ், வாஷிங்டன், நியூயார்க் , சிகாகோ, அட்லாண்டா, ஆஸ்டின் உள்ளிட்ட நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளார்.

யாஷ்

சம்பளம் 25 கோடி ரூபாய்

கேஜிஎப் படத்தின் வெற்றிக்குப் பிறகு தென்னிந்தியா முழுக்க பிரபலமாகியுள்ளார் யாஷ். ஆரம்பத்தில் சில கோடிகளில் மட்டுமே சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த அவர், தற்போது கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறாராம்.

ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசனின் வெப் தொடர்

ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘பெஸ்ட் செல்லர்’ வெப் தொடரின் டீசரை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படத்தில் ஸ்ருதி ஹாசனுடன் மிதுன் சக்கரபர்த்தி, அர்ஜன் பஜ்வா, குவஹர் கான், சத்யஜீத் துபே, சொனாலி குல்காரினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முகுல் அப்யங்கர் இயக்கியுள்ள இத்தொடர் சைக்கோ த்ரில்லர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பிப்ரவரி 18-ம் தேதி 8 அத்தியாயங்களை கொண்டதாக இந்த தொடர் அமேசான் பிரைமில் வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...