No menu items!

சூடுபிடிக்கும் ’சூர்யா 42’

சூடுபிடிக்கும் ’சூர்யா 42’

சூர்யா – சிறுத்தை சிவா இணையும் பெயரிடப்படாத ‘சூர்யா 42’ பட பிஸினெஸ் கோலிவுட் வட்டாரத்தில் சூட்டைக் கிளப்பி இருக்கிறது.

ப்ரீயட் ஆக்‌ஷன் டிராமா வகையறா படமாக உருவாகி வருகிறது ’சூர்யா 42’.இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் இறக்குமதி இடையழகி திஷா பதானி நடிக்கிறார்.

கோவா, சென்னை என இப்படத்தின் ஷுட்டிங் ஜரூராக போய் கொண்டிருக்கிறது. படம் பற்றி இண்டஸ்ட்ரி டாக் நன்றாக இருப்பதால், இதன் ஓடிடி உரிமையை வாங்க கடும்போட்டி நிலவுகிறதாம்.

இப்போது லேட்டஸ்ட் கிசுகிசு என்னவென்றால் இப்படத்தின் ஒடிடி உரிமையை அமேசான் ப்ரைம் வாங்கி இருப்பதாக சொல்கிறார்கள். பான் – இந்தியா படமாக, 10 மொழிகளில் வெளியாக இருப்பதால் ஒடிடி-யில் ஸ்ட்ரீம் செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என்பதால் இவ்வளவு மவுசு.

ஹிந்தி அல்லாமல் இதர மொழிகளுக்கான ஒடிடி உரிமை சுமார் 80 கோடி விலை போயிருப்பதாகவும் பேச்சு அடிப்படுகிறது. அமேசன் ப்ரைமில் இந்தளவிற்கு விலைப் போன படம் 2-வது படம் என்ற பெருமையை ‘சூர்யா 42’ பெற்றிருக்கிறது.

விஜய் – லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைந்திருக்கும் ’லியோ’ [Leo] படத்தின் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் வாங்கி இருக்கிறது. இதற்கு அடுத்தப்படியாக அதிக விலைக்கு வாங்கப்பட்ட படம் சூர்யா 42.

கேஜிஎஃப், பாகுபலி படங்களின் மேக்கிங்கிற்கு பதில் சொல்லும் வகையில் சூர்யா 42 இருக்கும் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...