No menu items!

சினிமாவில் சச்சின் மகள்!

சினிமாவில் சச்சின் மகள்!

சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர்தான் பாலிவுட்டில் இப்போதைய ஹாட் டாபிக். சமீபத்தில் எடுக்கப்பட்ட தனது சில புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் சாரா பதிவிட, அவர் சினிமாவுக்கு வரப்போகிறார் என்ற செய்திகள் றெக்கை கட்டிப் பறக்கின்றன.

சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தபோது சஹாரா கோப்பையை ஜெயித்தார். அதன் நினைவாக தன் மகளுக்கு சாரா என்று பெயர் வைத்ததாக கூறப்படுகிறது. 24 வயதைத் தொட்டுள்ள சாரா, மும்பையில் உள்ள திருபாய் அம்பானி பள்ளியில் படித்தார். பின்னர் லண்டனில் மருத்துவம் படித்தார். ஆனால் படிப்பை முடித்து இந்தியா திரும்பியவர் மருத்துவத் துறையை விட மாடலிங் துறையில்தான் ஆர்வம் காட்டினார்.

நடிகைகளுக்கு இணையாக புகைப்படங்களை எடுத்து அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தெறிக்கவிடும் சாரா, தான் உடற்பயிற்சி செய்யும் படங்களை வெளியிட்டும் ஒருமுறை இளைஞர்களை கிறங்கடித்தார்.

இப்படி சினிமாவுக்கு வராமலேயே பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர் குடும்பத்துடன் வெளியில் செல்லும்போதெல்லாம் அவரைவிட அவரது மகளை படம் பிடிக்கவே போட்டோகிராபர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். சாராவும் அவர்களை ஏமாற்றாமல் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பிரத்யேகமான உடைகளை அணிந்து அசத்துவார்.

தோழிகளுடன் இணைந்து மாடலிங்கில் ஈடுபட்ட சாரா ஆக்டிங் ஸ்கூலிலும் சேர, அவர் திரைப்படங்களில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியானது. ஆனால் அந்த செய்திகளை சாரா மறுக்கவில்லை. அவை உண்மையென்றும் சொல்லவில்லை.

தனது அப்பா சச்சினைப் போல் மென்மையாக சிரித்து மழுப்பிவிட்டார். கிரிக்கெட் வீரர் சுப்மான் கில்லை காதலிப்பதாக செய்திகள் வந்தபோதும் இப்படித்தான் சிரித்து மழுப்பினார்.

இந்தச் சூழலில் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கங்களில் சாரா வெளியிட்டுள்ள புகைப்படங்கள், அவர் விரைவில் நடிக்க வருவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர் தரப்பினர், “அப்பாவைப் போலவே சாராவும் மிக அமைதியானவர். அவர் எப்போது எந்த முடிவை எடுப்பார் என்ரு யாருக்கும் தெரியாது. ஆனால் திடீரென்று முடிவுகளை எடுப்பார்” என்கிறார்கள்.

சாராவின் வரவு நல்வரவாகட்டும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...