No menu items!

நியூஸ் அப்டேட்: DUNE படத்திற்கு 6 ஆஸ்கர் விருதுகள்

நியூஸ் அப்டேட்: DUNE படத்திற்கு 6 ஆஸ்கர் விருதுகள்

இந்த ஆண்டிற்கான, 94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

கோடா (CODA ) என்ற திரைப்படம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது.

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை கிங் ரிச்சர்ட்(King Richard) படத்திற்காக வில் ஸ்மித் வென்றார்.

தி ஐய்ஸ் ஆப் டாமி பேய் (The Eyes of Tammy Faye) என்ற திரைப்படத்தில் நடித்த ஜெஸ்சிகா கேஸ்டைன் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.

ஒளிப்பதிவு, இசை, விஷுவல் எஃபெக்ட்ஸ், ஒரிஜினல் ஸ்கோர், படத்தொகுப்பு, புரொடக்ஷன் டிசைன் ஆகிய பிரிவுகளில் ‘DUNE’ திரைப்படத்திற்கு 6 விருதுகள் பெற்றது.

ஒளிப்பதிவு, இசை, விஷுவல் எஃபெக்ட்ஸ், ஒரிஜினல் ஸ்கோர், படத்தொகுப்பு, புரொடக்‌ஷன் டிசைன் ஆகிய பிரிவுகளில் ட்யூன் (DUNE) திரைப்படத்திற்கு 6 விருதுகள் வழங்கப்பட்டது.

பாரத் பந்த்; குறைந்த பேருந்து இயக்கம் – பொதுமக்கள் அவதி

பாரத் பந்த் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தில் இன்று 67% பேருந்துகள் இயங்கவில்லை என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி இயங்க வேண்டிய 15,335 பேருந்துகளில் 5,023 பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பேருந்து நிலையங்களில் நெடுநேரம் காத்திருந்தனர்.

துபாயிலிருந்து அபுதாபி புறப்பட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது துபாய் பயணத்தை முடித்து இன்று அபுதாபி புறப்பட்டார். அபுதாபில் முதலீட்டாளர்களைச் சந்தித்து பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளார். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய லூலூ நிறுவனம் ஆர்வமாக உள்ளதாகவும், அவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகவும், இதையடுத்து அபுதாபி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அங்குள்ள தமிழர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திக்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து சக்கரத்தில் சிக்கி 2ஆம் வகுப்பு மாணவன் பலி: சென்னையில் சோகம்

சென்னை, ஆழ்வார் திருநகர் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியாகியுள்ளார். மாணவன் பேருந்திலிருந்து இறங்கி முன்னால் நடந்து சென்றதை கவனிக்காமல் ஓட்டுநர் பேருந்தை இயக்கியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஓட்டுநர் அஜாக்கிரதையால் நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...