No menu items!

குழந்தைகளை பலி வாங்கியதா இந்திய இருமல் மருந்து?

குழந்தைகளை பலி வாங்கியதா இந்திய இருமல் மருந்து?

இந்தியாவில் தயாரிக்கப்படும் 4 இருமல் மருந்துகள் அப்ரிக்கா நாட்டிலுள்ள, காம்பியாவில் 66 குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது உலக சுகாதார அமைப்பு.

ஹரியானா மாநிலத்தில் மெய்டன் பார்மசூட்டிகல்ஸ் (Maiden Pharmaceuticals) என்ற நிறுவனம் 4 வகை இருமல் மருந்துகளைத் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை பயன்படுத்தியதால் ஆப்ரிகாவில் உள்ள காம்பியா (Gambia) நாட்டில் 66 குழந்தைகள் கிட்னி செயலிழந்து இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் உலக சுகாதார அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ப்ரோமெதாசின், கோஃபெக்ஸ்மாலின் (குழந்தை இருமல் சிரப்), மாகோஃப் (பேபி காஃப் சிரப்) மற்றும் மேக்ரிப் என் கோல்ட் சிரப் (Promethazine Oral Solution, Kofexmalin Baby Cough Syrup, Makoff Baby Cough Syrup, Magrip N Cold Syrup) ஆகிய சிரப்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்புகளில் ஒவ்வொன்றின் மாதிரிகளை ஆய்வு செய்ததில், அவை அளவுக்கு அதிகமான டைஎத்திலீன் கிளைகால் மற்றும் எத்திலீன் கிளைகால் (diethylene glycol, ethylene glycol) ஆகியவற்றை கொண்டிருப்பது தெரியவந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இன்றுவரை, இந்த நான்கு தயாரிப்புகளும் காம்பியாவுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது, கருப்பு சந்தைகள் மூலம் இவை பிற நாடுகளுக்கும் இந்த மருந்துகள் விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இந்த மருந்துகளை சாப்பிடுவதால் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சிறுநீர் கழிக்க இயலாமை, தலைவலி, கடுமையான சிறுநீரக காயம் ஆகியவை ஏற்படலாம் என்றும், இது உயிரை கொல்லும் தன்மையுடையது என்றும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

காம்பியாவில் உள்ள மருத்துவர்கள், ஜூலை மாதம் குழந்தைகள் சிறுநீரக பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதை அடுத்து இது குறித்த எச்சரிக்கையைவிடுத்தனர். இது எதனால் என்று அறிந்து கொள்வதற்கு முன்பே குழந்தைகளின் மரணங்கள் அதிகரித்தது மருத்துவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. ஆனால் பிறகு நோய்வாய்பட்ட குழந்தைகளின் ஒற்றுமைகளை ஆரய்ந்ததில் இந்த இருமல் மருந்து ஒரு முக்கியமான ஒற்றுமையாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்து பேசிய காம்பியாவின் சுகாதார துறை இயக்குனர் முஸ்தபா பிட்டயே, “மற்ற மருந்துகளிலும் இதே போன்ற பிரச்சனைகள் கண்டறியப்பட்டுள்ளன, ஆனால் உலக சுகாதார அமைச்சகம் முடிவுகளை உறுதிப்படுத்த காத்திருக்கிறது” என்று கூறினார்.

இதனையடுத்து,உலக சுகாதார அமைப்பு, மெய்டன் பார்ம்பாசூட்டிகல்ஸ் இருமல் மருந்துகளை பயன்பாட்டில் இருந்து அகற்ற உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் மருந்துகளை உபயோகம் செய்ய வேண்டாம் என்று மக்களையும் எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...