No menu items!

CSK குயின்ஸ்

CSK குயின்ஸ்

தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த வீரர்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் உள்ளனர். இந்த வீரர்களை தெரிந்தவர்களுக்கெல்லாம், அவர்களின் மனைவிகளையும் தெரிந்திருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விளையாடும்போதெல்லாம், பார்வையாளர் வரிசையில் இருந்து அவர்களை ஊக்குவிக்கும் மனைவிகளைத் தெரிந்துகொள்வோம்.

சாக்‌ஷி சிங் ராவத்

தல தோனியின் மனைவியான சாக்‌ஷி சிங் ராவத்தைப் (Sakshi Singh Rawat) பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. தோனியின் உள்ளம் கவர்ந்த காதல் மனைவியான சாக்‌ஷி, 1988-ம் ஆண்டில் டேராடூனில் பிறந்தார். 2007-ம் ஆண்டில் கொல்கத்தாவில் உள்ள தாஜ் பெங்காலில் இவர் இண்டர்ன்ஷிப் செய்துகொண்டு இருந்தபோது தோனியின் பார்வையில் பட்டுள்ளார். சாக்‌ஷியைக் கண்டதும் தோனியின் நெஞ்சில் காதல் தீ பற்றிக் கொண்டது.

2 ஆண்டுகள் காதலர்களாக இருந்த இந்த ஜோடி 2010-ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டது. தற்போது தோனி செல்லும் இடமெல்லாம் உடன் பயணிக்கும் சாக்‌ஷி, தோனிக்கும் அவரது ரசிகர்களுக்கும் இடையிலான இணைப்பு பாலமாக விலங்குகிறார். தோனியின் வாழ்க்கையில் முக்கிய தருணங்களை அவ்வப்போது புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றும் சாக்‌ஷி, தனது கணவரின் பிஸினஸ் விஷயங்களிலும் உதவியாக இருக்கிறார்.

ரிவா சோலங்கி

சாக்‌ஷிக்கு அடுத்ததாக சிஎஸ்கே ரசிகர்களை அதிகம் கவர்ந்திருப்பவர் ஜடேஜாவின் மனைவி ரிவா சோலங்கி (Riva Solanki). ராஜ்கோட் நகரில் மெக்கானிக்கல் இஞ்ஜினீயரிங் படித்தவரான ரிவா, ஒரு அரசியல்வாதியும்கூட. 2019-ம் ஆண்டில் பாஜகவில் இணைந்த ரிவா சோலங்கி, அதன் மகளிர் பிரிவான கர்னி சேனாவின் தலைவியாக இருக்கிறார். 2016-ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடிக்கு நித்யானா என்ற மகள் இருக்கிறார்.

ரெஜினா ராம்ஜித்

தோனியின் நண்பரும் சிஎஸ்கே அணியின் நீண்டநாள் வீரருமான பிராவோவுக்கு 3 மனைவிகள். இந்த மூன்று மனைவிகளும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 3 மனைவிகள் மூலம் பிராவோவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த 3 மனைவிகளில் பிராவோவின் பயணங்களில் அதிகமாக உடன் இருப்பவர் ரெஜினா ராம்ஜித். பார்படாஸில் மாடலாக இருக்கும் ரெஜினா, தனது ஊரில் சொந்தமாக ஒரு பொட்டிக்கை வைத்து நடத்துகிறார். சமீப காலமாக இவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இவர்கள் பிரியப் போவதாகவும் செய்திகள் பரவுகின்றன.

ஜெயா பரத்வாஜ்

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரை விடாமல் பார்த்தவர்களுக்கு ஜெயா பரத்வாஜை நிச்சயம் தெரிந்திருக்கும். ஏனென்றால் கடந்த ஆண்டு சென்னை – பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டிக்கு பிறகு மைதானத்தில் அமர்ந்திருந்த ஜெயாவுக்கு தன் மோதிரத்தை பரிசளித்து காதலிப்பதாக சொன்னார் தீபக் சாஹர். இதைத்தொடர்ந்து இந்த ஜோடி திருமணம் செய்துகொண்டது. டெல்லியில் உள்ள ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரியும் ஜெயா பரத்வாஜ், பிரபல சின்னத்திரை நடிகரான சித்தார்த் பரத்வாஜின் சகோதரி ஆவார்.

பிரோசா ஹுசேன்

பேட்டிங், பந்துவீச்சு என 2 துறைகளிலும் கலக்கும் இங்கிலாந்து வீரரான மொயின் அலியின் மனைவிதான் பிரோசா ஹுசேன் (Firoza Hossain). மொயின் அலிக்கு 21 வயதாகும்போது இங்கிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போதுதான் இருவரும் முதல் முறையாக சந்தித்துள்ளனர். இருவருக்கும் பரஸ்பரம் பிடித்துப் போக வீட்டில் பேசி பெண் கேட்கவைத்து முறையாக திருமணம் செய்துள்ளார் மொயின் அலி. இபோது மொயின் அலி எங்கு சென்றாலும் உடன் செல்லும் பிரோசா ஹுசேன், சிஎஸ்கேவில் மற்ற வீரர்களின் மனைவிகளின் நெருங்கிய தோழியாக உள்ளார்.

ஷீதல் கவுதம்:

ராபின் உத்தப்பாவின் மனைவியான ஷீதல் கவுதம் (Sheethal Goutham) ஒரு முன்னாள் டென்னிஸ் வீரர். தனது 33 வயது வரை இந்தியாவுக்காக பல டென்னிஸ் போட்டிகளில் அவர் பங்கேற்றுள்ளார். சுமார் 6 ஆண்டுகாலம் காதல் ஜோடிகளாக சுற்றித் திரிந்த உத்தப்பாவும் ஷீதல் கவுதமும், உத்தப்பாவின் 30-வது பிறந்த நாளன்று திருமணம் செய்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...