ஆண்டுதோறும் ஜூன் 1, உலக பால் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாலைப் பற்றிய சுவாரஸ்யமான 10 விஷயங்களை தெரிந்துகொள்வோம்:
2001-ம் ஆண்டுமுதல் ஜூன் 1-ம் தேதி உலக பால் தினமாக அனுசரிக்கப்படுகிறது
பால் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. உலகின் 23 சதவீத பால் தேவையை இந்தியா பூர்த்தி செய்கிறது.
இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 140 பில்லியன் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 50 பில்லியன் லிட்டர் பாலை, அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளே தங்கள் சொந்த உபயோகத்துக்காக பயன்படுத்துகிறார்கள்.
ஒரு சிட்டிகை உப்பு போட்டால், பால் நீண்ட நேரத்துக்கு கெடாமல் இருக்கும்.
ஒரு கிலோ சீஸைத் தயாரிக்க 10 லிட்டர் பால் தேவைப்படுகிறது.
பாலின் வெள்ளை நிறத்திற்கு அதில் உள்ள கொழுப்பு சத்துகளே காரணம்.
பாலில் கால்ஷியம், பொட்டாசியம், பாஸ்பிரஸ், புரோட்டீன், நியாசின், வைட்டமின் ஏ, வைட்டமின் பி12, ரிபோபிளாவின், வைட்டமின் டி ஆகிய 9 சத்துகள் உள்ளன.
ஒரு மாடு தன் வாழ்நாளில் சராசரியாக 2 லட்சம் கிளாஸ் பாலைக் கொடுக்கும்.
கழுதைப்பாலில் செய்யப்படும் சீசின் விலை, சாதாரன சீஸின் விலையைவிட பல மடங்கு அதிகம்.
10 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்கள் பாலைப் பயன்படுத்தி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.