வார ராசி பலன் ஏப்ரல் 25 முதல் மே 1 வரை
ஜோதிடர் ந.ஞானரதம் M.A., M.PHIL., PH.D
மீனம் நடிகர் கமல்
சமூக ஆர்வலர்கள் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். உடல் நலத்தில் அக்கறை அவசியம். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. வீட்டில் வேலையாட்களிடம் கோபத்தைக் காட்டாமல் தட்டிக் கொடுப்பது நல்லது. வாங்கிய கடனை வட்டியுடன் அடைத்து விடுவீர்கள்.
அதிர்ஷ்ட தேதிகள் 28, 30
அதிர்ஷ்ட நிறங்கள் மஞ்சள், வெள்ளை
மேஷம் – தேகம் பொலிவு பெறும்
தேகம் பொலிவு பெறும். மாணவர்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். மார்கெட்டிங் பிரிவினர் புதுப் புது ஆர்டர்கள், ஏஜென்சி எடுப்பீர்கள். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். வியாபாரிகள் வியாபாரத்தில் நல்ல லாபம் காண்பர். திருமண பேச்சு வார்த்தை தள்ளிப் போகும்.
அதிர்ஷ்ட தேதிகள் 25, 30
அதிர்ஷ்டம் தரும் நிறங்கள் – மஞ்சள், வெள்ளை
ரிஷபம் – பதவி உயர்வு தேடி வரும்
புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். பிள்ளைகள் பெற்றோர் சொல்வதை கேட்டு நடந்து கொள்வர். வாகனத்திற்கு அதிக செலவு ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்கள் உதவுவர்.
உடல் பலம் பெறும். பழைய நிலை மாறி முன்னேற்றம் தென்படும். நிதானம் தேவை. காதலர்களுக்கு பொறுமை அவசியம்.
அதிர்ஷ்ட தேதிகள்: 27, 1
அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: கருநீலம், கடல்பச்சை
மிதுனம் – புதிய வாய்ப்புகள் வரும்
வேலையில் தங்கள் மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விவசாயிகளுக்கு கேட்ட கடன் தொகை கிடைக்கும். அயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு விசா கிடைக்கும்.
பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் பேசும்போது நிதானம் தேவை. கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். அரசியல்வாதிகள் எதிர்க்கட்சிக்காரர்களிடம் இணக்கமாக செல்வது நல்லது.
அதிர்ஷ்ட தேதிகள் – 25, 30
அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: வெளிர் நீலம், ஆரஞ்ச்
கடகம் – ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்
உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். கணவரிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் கீழ்படிந்து நடப்பர். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். இரவில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட தேதிகள் 29, 1
அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: ஆரஞ்ச், சிவப்பு
சிம்மம் – நட்பு வட்டம் விரிவடையும்
வேலை தேடுபவர்கள் போட்டித் தேர்வுகள் மூலம் நினைத்த உத்யோகம் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது.
அரசு சம்பந்தப்பட்ட டென்டர் போன்றவைகளில் வெற்றி நிச்சயம். கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும். அதிவேகத்துடன் வாகனத்தை இயக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட தேதிகள் 26, 28
அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: மஞ்சள், வெள்ளை
கன்னி – பனவரவு அதிகரிக்கும்
பெண்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து அத்தியாசிய பொருள்களை வாங்குவர். அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும். பிரபலமானவர்களால் நன்மை உண்டு.
உங்களை சார்ந்து இருப்பவர்களின் நிலையினை உணர்ந்து உதவுவீர்கள். இரும்பு வியாபாரத்தில் ஆதாயம் காணலாம்.
பணவரவு அதிகரிக்கும். உடல் நலம் சிறக்கும்.
அதிர்ஷ்ட தேதிகள் 30, 1
அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: மஞ்சள், வெள்ளை
துலாம் – தொழிலில் மாற்றங்கள் செய்வீர்கள்
பங்கு சந்தையில் ஈடுபட்டவர்கள் நிலவரத்தை அறிந்து செயல்படுவர். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவர். உத்யோகஸ்தர்களுக்கு தன் கீழ் உள்ள பணியாளர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கூடும். மனைவிவழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள். மாணவர்கள் விடுமுறையை நன்முறையில் பயன்படுத்துவர்.
அதிர்ஷ்ட தேதிகள் 25, 28
அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: சிவப்பு, நீலம்
விருச்சிகம் – காதல் கைகூடும்
உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். மனைவியிடம் ஆத்திரப்படாதீர்கள். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும்.
விளையாட்டுப் போட்டியில் பரிசு பெறுவீர்கள். காதல் கைகூடும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்யும் வாய்ப்புகள் வரும். உடல் உற்சாகத்துடன் காணப்படும்.
அதிர்ஷ்ட தேதிகள் – 28, 30
அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: வெள்ளை, பச்சை
தனுசு – விபத்துகளை தவிர்க்க கவனம் அவசியம்
உத்யோகஸ்தர்களை சக ஊழியர்கள் பாராட்டுவர். பெற்றோரின் ஆலோசனைக்கு மதிப்புக் கொடுங்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் சில தந்திரங்களை மேற்கொள்வர்.
சில கசப்பான அனுபவங்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். பயணத்தின் போது சிறுசிறு விபத்துகளை தவிர்க்க கவனம் அவசியம்.
அதிர்ஷ்ட தேதிகள் 27, 1
அதிர்ஷ்ட நிறங்கள் மஞ்சள், ரோஸ்
மகரம் -கடன் பிரச்சினை தீரும்
மனைவி உங்களுடைய தவறுகளை சுட்டிக் காட்டினால் கோபப்படாமல் அமைதியை கையாளவும். மாணவர்களுக்கு பெற்றோர்களின் அரவணைப்பு கிடைக்கும். இளைஞர்களுக்கு திருமண முயற்சிகள் தாமதமாகும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறு, நீங்கும். வியாபாரிகளுக்கு கடன் பிரச்சினை தீரும்.
அதிர்ஷ்ட தேதிகள் 26, 28
அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: கருப்பு, ஊதா
கும்பம் – புதிய உத்யோகம் கிடைக்கும்
உத்யோகஸ்தர்களுக்கு தங்களைப் பற்றி தவறான வதந்திகளை மேலிடத்திற்கு சிலர் கொண்டு செல்லக்கூடும். விழிப்புடன் இருங்கள். குல தெய்வ பிரார்த்தனையை செய்து முடிப்பீர்கள்.
தம்பதிகளிடம் ஒற்றுமை கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலை தேடுபர்களுக்கு புதிய உத்யோகம் கிடைக்கும். மளிகைக் கடை மற்றும் சில்லரை வியாபாரம் லாபம் தரும்.
அதிர்ஷ்ட தேதிகள் 25, 1
அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: நீலம், பச்சை