No menu items!

காஜல் அகர்வால் Vs சமந்தா..

காஜல் அகர்வால் Vs சமந்தா..

காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

திருமணமான ஒரு வருடத்திலேயே காஜலுக்கு குழந்தை பிறந்திருப்பதை பார்த்து, ‘தங்கம்’ என்று நாக சைதன்யா வாழ்த்தியிருக்கிறார்.

நாக சைதன்யா வாழ்த்தியதைக் குறிப்பிட்டு, சமந்தாவை கிண்டலடிக்கும் வகையில் நாக சைதன்யாவின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கமெண்ட் கலாட்டாவை நிகழ்த்தி கொண்டிருக்கிறார்கள்.

திருமணமானதும் குழந்தை, குடும்பம் என செட்டிலாகாமல், இன்னும் கவர்ச்சியாக நடிப்பதிலேயே சமந்தா கவனம் செலுத்துவதால்தான் கடந்த அக்டோபர் 2021-ல் இருவரும் விவாகரத்து செய்தனர். அதனால் தவறு சமந்தா மீதுதான் என்று கமெண்ட் அடிப்பதுதான் சமந்தாவை உசுப்பேற்றியிருக்கிறது.

பொறுமைக்கும் எல்லையுண்டு, நான் அமைதியாக இருப்பதால் தவறு என் மீதுதான் என்று அர்த்தமில்லை என்று பதிலுக்கு கொதித்து இருக்கிறார் சமந்தா.

ரஜினியை முந்தும் யாஷ்?

தெலுங்கில் அதிக வசூலைக் குவித்த டப்பிங் படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் படம் ரஜினி நடித்த ’எந்திரன் – 2’

‘எந்திரன் – 2’, சுமார் 70 கோடி வசூலை அள்ளிக் குவித்ததே இதுவரையில் அதிக பட்ச வசூல் சாதனையாக இருந்து வருகிறது.

தற்போது ரஜினி வைத்திருக்கும் பாக்ஸ் ஆபீஸ் சாதனையை உடைப்பதில் கடும் போட்டி நிலவுகிறது என்கிறார்கள்.

யாஷ் நடித்திருக்கும் கேஜிஎஃப்-2 படம் இப்பொழுதே 64 கோடி வசூலைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் இப்படத்தின் வசூல் 70 கோடியைத் தாண்டி விடும் என்கிறார்கள்.

இதனால் டப்பிங் பட வசூலில் ரஜினியை யாஷ் முந்திவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒடிடி-க்கு மாறும் மோகன்லால்!

ஹிந்தி, தமிழ்ப்படங்கள் திரையரங்குகளுக்கு செல்லாமல் நேரடியாக ஒடிடி தளங்களில் வெளிவரும் ட்ரெண்ட் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.
இந்த வரிசையில் தற்போது மலையாள சினிமாவும் இணைந்திருக்கிறது.

இதுவரையில் சின்ன சின்ன படங்கள் ஓடிடி-யில் வெளிவந்த நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் படமும் சேர்ந்திருக்கிறது.

மோகன்லால் படங்களுக்கு பெரும் வரவேற்பு இருந்து வரும் சூழ்நிலையில், சூர்யா மற்றும் கார்த்தி வழியில் தனது படத்தை ஒடிடி-யில் வெளியிட பச்சை கொடி காட்டியிருக்கிறார் மோகன்லால்.

ஜித்து ஜோசப் இயக்கி மோகன்லால் நடித்திருக்கும் 12th Man படத்தின் உரிமையை, ஹாட்ஸ்டார் கைப்பற்றி இருக்கிறது.

இதனால் மலையாள திரையரங்கு உரிமையாளர்கள் வருமானம் கார்பொரேட் நிறுவனங்களுக்கு போகிறதே. நம் கதி என்னவாகுமோ என்று அதிர்ச்சியில் திகைத்துப் போயிருக்கிறார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...