சமீபத்தில் சமந்தா இன்ஸ்டாக்ராமில் தனது ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு மிகப் பொறுமையாக பதிலளித்தார்.
அதில் ’உங்களை உணர்கிற மாதிரியான டாட்டூ போட்டுக்கொள்ள விரும்பினால், என்ன டாட்டூ போட்டு கொள்வீர்கள்’ என்று ஒரு ரசிகர் கேட்டார்.
அதற்கு, ‘’இளையதலைமுறைக்கு என்னோட அட்வைஸ் என்னவென்றால், டாட்டூ போட்டுக் கொள்ளாதீர்கள். ஒருபோதும் டாட்டூ போட்டுக்கொள்ளாதீர்கள்’ என்று கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டவராக பதிலளித்தார் சமந்தா.
டாட்டூ போட்டுக் கொள்ளவேண்டாம் என்று சமந்தா சும்மா சொல்லவில்லை. அவருடைய அந்த வார்த்தைகளுக்கு பின்னால் காதல், மோதல், பிரிவு, வலி என எல்லாமும் இருக்கிறது.
சமந்தா மொத்தமாக 3 டாட்டூக்கள் குத்தியிருக்கிறார். இந்த மூன்றுமே அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யா சம்பந்தப்பட்டவை. முதல் டாட்டூ முதுகில் குத்தியிருக்கும் ‘YMC’. சமந்தாவும், நாக சைதன்யாவும் இணைந்து நடித்த முதல் படமான ‘ யே மாய சேசாவே’ [Ye Maaya Chesave] என்பதன் சுருக்கமே இந்த ‘YMC’.
இரண்டாவது டாட்டூவை தனது வலது மார்புக்கு கீழே ‘Chay‘ என்று குத்தியிருக்கிறார். சைதன்யா பெயரைதான் சுருக்கமாக ‘Chay‘ என்று டாட்டூ குத்தியிருக்கிறார்.
மூன்றாவது டாட்டூவை சமந்தாவும், நாக சைந்தன்யாவும் தங்களது கைகளின் முன்பக்கம் ஒரே மாதிரியாக குத்தியிருக்கிறார்கள்.
காதலித்து கசிந்துருகும் போது குத்திய டாட்டூக்கள், இப்போது திருமண முறிவுக்குப் பிறகு, மறைக்க முடியாத, மறக்க முடியாத டாட்டூ வடுக்களாக மாறியிருக்கின்றன. அந்த வலியை நன்றாக உணர்ந்தே இருக்கிறார். அதனால்தான், என்னைப் போல் நீங்களும் காதலில் உணர்ச்சிவசப்பட்டு டாட்டூக்களை குத்திக்கொண்டு பின்னாளில் வருத்தப்படாதீர்கள் என்பதை வெளிப்படையாக சொல்லாமல் பொத்தம்பொதுவாக சொல்லியிருக்கிறார் சமந்தா.
சில வருடங்களுக்கு, முன்பு நயன்தாரா தனது கையில் ‘பிரபு’ என்று டாட்டூ குத்திக்கொண்டு, அதை பின்னாளில் ‘பாஸிட்டிவிட்டி’ என்று மாற்றிய வரலாறு, இன்று சமந்தாவின் வாழ்க்கையிலும் ரிபீட் ஆகியிருக்கிறது.
காதலிக்கும் போது உணர்ச்சி வசப்பட்டு குத்தும் டாட்டூக்கள் பின்னாளில் அழிக்க முடியாத நினைவுகளாக மாறியதே நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் ஏற்பட்டிருக்கும் கொடுமை.
நயன்தாராவுக்கு கிடைத்த மாற்றத்திற்கான ‘பாஸிட்டிவிட்டி’ சமந்தாவுக்கும் கிடைத்து, மீண்டு வருவாராக!
,