No menu items!

நியூஸ் அப்டேட்: இதற்கு மேலும் இந்தியா? – வைரமுத்து

நியூஸ் அப்டேட்: இதற்கு மேலும் இந்தியா? – வைரமுத்து

டெல்லியில் நேற்று நடந்த நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்தியாவில் இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாகக் கவிஞர் வைரமுத்து நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவிதை வருமாறு:

வடக்கே வாழப்போன தமிழர்
இந்தி கற்கலாம்
தெற்கே வாழவரும் வடவர்
தமிழ் கற்கலாம்

மொழி என்பது
தேவை சார்ந்ததே தவிர
திணிப்பு சார்ந்ததல்ல

வடமொழி ஆதிக்கத்தால்
நாங்கள் இழந்த நிலவியலும் வாழ்வியலும் அதிகம்

இதற்கு மேலும் இந்தியா?
தாங்குமா இந்தியா?

சென்னை மாநகராட்சி பட்ஜெட்: கவுன்சிலர்களுக்கு ரூ.35 லட்சம் நிதி

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று காலை தாக்கல் செய்தார். வார்டுகளின் மேம்பாட்டுக்காக கவுன்சிலர்களுக்கு தலா ரூ.35 லட்சம் வீதம் 200 வார்டுகளுக்கும் மொத்தம் ரூ.70 கோடி ஒதுக்கப்படும், பள்ளிகளில் 5.47 கோடியில் கண்காப்பு கேமராக்கள் பொருத்தப்படும் ஆகிய முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன.

மேலும், “70 பள்ளிகளில் இணைய இணைப்பு வழங்க ரூ.1.86 கோடி ஒதுக்கீடூ செய்யப்படும். நகராட்சி பள்ளிகளில் 40 லட்சம் செலவில் கல்விக் கண்காட்சிகள் நடத்தப்படும். நிர்பயா நிதி மூலம் 23.66 கோடியில் சானிட்டரி நாப்கின் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக சொத்துவரி உயர்வு பற்றி பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இலங்கை அதிபருக்கு எதிராக இம்பீச்மெண்ட் தீர்மானம்: எதிர்க்கட்சிகள் முடிவு

இலங்கை அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் அதிபரை விசாரணைக்கு உட்படுத்தும் இம்பீச்மென்ட் தீர்மானத்தையும் கொண்டுவர அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இலங்கையின் அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான எஸ்ஜேபி, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தையும், அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவுக்கு எதிராக இம்பீச்மென்ட் தீர்மானத்தைக் கொண்டு வர தயாராக இருப்பதாக கூறியுள்ளது. மற்ற எதிர்க்கட்சிகளும் இந்த தீர்மானத்தை ஆதரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால், இலங்கை அரசுக்கு நெருக்கடி முற்றி வருகிறது.

விருது விழாக்களில் பங்கேற்க வில் ஸ்மித்துக்கு தடை

ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி விழாக்களில் கலந்துகொள்ள வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் ஆஸ்கர் அகாடமி தடை விதித்துள்ளது.

94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துக்கு வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் பற்றி தொகுப்பாளரும் காமெடி நடிகருமான கிறிஸ் ராக் கமெண்ட் அடித்தார். இதனால் கோபமடைந்த வில் ஸ்மித், கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்தார். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா மற்றும் பிற அகாடமி விழாக்களில் பங்கேற்க வில் ஸ்மித்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வணிக ரீதியிலான விண்வெளிப் பயணம் தொடங்கியது

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வணிக ரீதியிலான பயணம் தொடங்கியுள்ளது. முதல் முறையாக சுமார் 1,250 கோடி செலவு செய்து அமெரிக்காவின் ஓஹியோவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் லாரி கன்னோர், இஸ்ரேல் தொழிலதிபர் எய்டன் ஸ்டிப்பே, கனடாவைச் சேர்ந்த முதலீட்டாளர் மார்க் பதி ஆகியோர் இந்த விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான மைக்கேல் லோபஸ் இதற்கு தலைமை தாங்குகிறார். இந்த பயணத்துக்காக ஒவ்வொரு பணக்காரரும் தலா ரூ.418 கோடி செலவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...