No menu items!

கேஜிஎஃப்-2 Vs பீஸ்ட்

கேஜிஎஃப்-2 Vs பீஸ்ட்

வழக்கமான விஜய் படங்களை விட ‘பீஸ்ட்’ படத்திற்கு சமூக ஊடகங்களில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. #BeastModeOn என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் இடைவிடாமல் வைரல் ஹேஷ்டேக்காக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

மறுபக்கம் மற்றவர்கள் ‘கேஜிஎஃப்-2’ படம் பற்றி #YashBOSS என்ற ஹேஷ்டேக்கை ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

‘கேஜிஎஃப்-2’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு பெங்களூருவில் சமீபத்தில் நடைபெற்றது. அங்கு ஒரு பத்திரிகையாளர், ‘கேஜிஎஃப்-2’ ஹீரோ யாஷிடம், ‘KGF-2 Vs Beast’ அப்படியா என்று ஒரே கேள்விதான் கேட்டார்.

இந்த ஒரு கேள்வி, இந்த இரு படங்களின் ப்ரமோஷன்களை வைரலாக்கி இருக்கிறது.

இந்நிலையில், ‘பீஸ்ட்’ பட சமாச்சாரம் என்னவென்று கோலிவுட்டில் விசாரித்தோம்.

ஆக்‌ஷனில் அடிப்பொளி என்று விஜய் ரசிகர்கள் ட்வீட் செய்யுமளவிற்கு ஒரு பிரம்மாண்டமான ஆக்‌ஷன் ட்ரீட் ஆக விஜய் ரசிகர்களுக்கு இருக்கும் என்கிறார்கள்.

எக்ஸ்க்ளூசிவ்வான தகவல் என்னவென்றால், விஜய் முதல் முறையாக டார்க் காமெடியிலும் களம் காண்கிறார் என்பதுதான். மால் உள்ளே தீவிரவாதிகள் பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அடிக்கும் காமெடி, அவர்களோடு விஜய் அடிக்கும் காமெடியும்தான் இப்படத்தின் ஹைலைட்.

ஆக்‌ஷன் + காமெடி என்ற கலவையில் பீஸ்ட்டை இயக்குநர் நெல்சன் எடுத்திருக்கிறார். அதனால் சர்ச்சைக்குரிய அம்சங்கள் எதுவுமில்லை. அரசியலை சாடும் பஞ்சாயத்தும் இல்லை. ’…தா’ என்று விஜய் சொல்லும் இடங்களில் மட்டும் ம்யூட் போடச் சொல்லி சென்சார் உத்தரவு. ரத்தம் தெரியும் காட்சிகளில் கொடூரம் தெரியாமல் மாஸ்க் பண்ண சொல்லியிருக்கிறார்கள்.

அடுத்து ‘கேஜிஎஃப்-2’

தமிழ்நாட்டில், ‘பீஸ்ட்’ ஏறக்குறைய 900 ஸ்கீரின்களில் வெளியாக இருக்கிறது. பீஸ்ட்டின் தாக்குதலில் கேஜிஎஃப்-2-க்கு குறைந்த ஸ்கிரீன்கள்தான் கிடைத்திருக்கிறது.

‘கேஜிஎஃப்-2’ படத்தை இங்கு ரிலீஸ் செய்யும் பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, ‘’கேஜிஎஃப்-2 படத்திற்கு இங்கே 250 ஸ்கிரீன்கள்தான் கிடைக்கும் என்று நான் முதலில் எதிர்பார்த்தேன். ஆனால், தற்போது 300 ஸ்கிரீன்கள் கிடைத்திருக்கின்றன. இதுவே போதுமானது. ‘கேஜிஎஃப்-2’ படத்தின் கண்டெண்ட்டை நம்பிதான் இங்கு ரிலீஸ் செய்கிறோம். கண்டெண்ட் நிச்சயம் ஜெயிக்கும். அதனால், பாக்ஸ் ஆபீஸிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்’’ என்கிறார்.

‘கேஜிஎஃப்-2’ படத்தில் அட்டகாசமான ஆக்‌ஷன் காட்சிகள், மேக்கிங் இவை இரண்டும் முக்கிய அம்சங்களாக இருந்தாலும், அம்மா-மகன் சென்டிமென்ட் காட்சிகளை மனதைத் தொடும்படி ஷூட் செய்திருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...