சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘கூலி’ பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் வியாபார பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கூலி’.
‘கூலி’ படத்தின் வெளிநாட்டு வியாபார பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. இதன் உரிமையைக் கைப்பற்ற இதுவரை எந்தவொரு தமிழ் சினிமாவுக்கும் கொடுப்படாத விலையைக் கொடுக்க முன்வைத்துள்ளது முன்னணி நிறுவனம்.
இப்படத்தின் உரிமைக்கு சுமார் ரூ.70 கோடி முதல் ரூ.80 கோடி வரை கொடுக்க தயாராக இருப்பதாக கூறியிருக்கிறது. ஆனால், சன் பிக்சர்ஸ் நிறுவனமோ இன்னும் அதிகமாக வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இந்த வியாபாரம் மட்டும் முடிந்துவிட்டால், இதுவரை எந்தவொரு தமிழ் சினிமாவுக்கும் கொடுப்படாத வெளிநாட்டு உரிமம் விலை கொடுக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் ‘கூலி’ படம் புதிய மைல்கல்லை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் ‘கூலி’ படத்தின் பாடல் ஒன்று வெளியாக இருக்கிறது.