No menu items!

கபிலின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்

கபிலின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மிகக் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த இந்திய வீரர் என்ற கபில்தேவின் சாதனையை முறியடித்துள்ளார் ரிஷப் பந்த். 40 ஆண்டுகளுக்கு முன்பு, 1982-ல் பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சி நகரில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 30 பந்துகளில் கபில்தேவ் அரைசதம் அடித்ததுதான் இதுவரை சாதனையாக இருந்தது.

இந்த சூழலில் இலங்கைக்கு எதிரான பெங்களூரு டெஸ்ட் போட்டியில் நேற்று 28 பந்துகளிலேயே அரை சதம் அடித்து அந்தச் சாதனையை முறியடித்துள்ளார் ரிஷப் பந்த்.

இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு அடுத்து, இந்தியாவின் பேட்டிங் நட்சத்திரமாக தான் உருவெடுத்து வருவதை அடித்துச் சொல்லியுள்ளார் ரிஷப் பந்த். இந்த போட்டியில் மட்டுமின்றி வெளிநாடுகள் உள்ளிட்ட பல இடங்களில் நடந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் இந்தியாவின் வெற்றிக்கு மூலகாரணமாய் விளங்குகிறார் ரிஷப் பந்த்.

குறுகிய காலத்திலேயே புகழின் உச்சத்தை எட்டியுள்ள பந்த், ஒரு காலத்தில் கிரிக்கெட் உலகில் புறக்கணிக்கப்பட்டவர். உத்தரப் பிரதேச மநிலத்தில் பிறந்த ரிஷப் பந்த், சிறுவயதில் கிரிக்கெட் பயிற்சிக்காக டெல்லிக்கு சென்றார். ஷிகர் தவனின் பயிற்சியாளர் தாரக் சின்ஹாதான் ரிஷப் பந்துக்கும் பயிற்சியாளராக இருந்தார். அக்காலகட்டத்தில் டெல்லி அணியில் இடம்பிடிக்க கடும் போட்டி இருந்ததால், ராஜஸ்தானுக்கு குடிபெயரும்படி ரிஷப் பந்த்திடம் ஆலோசனை கூறியுள்ளார் தாரக் சின்ஹா.

இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் சென்ற ரிஷப் பந்த், அம்மாநிலத்தின் 15 வயதுக்கு உட்பட்டோர் அணியில் இடம்பிடித்தார். ஆனால் அதன்பிறகு ரிஷப் பந்த் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், ராஜஸ்தான் அணிக்காக அவர் ஆட எதிர்ப்பு எழுந்தது. இதனால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் மீண்டும் டெல்லி திரும்பிய ரிஷப் பந்த், அந்த அணிக்காக ஆடத் தொடங்கினார்.

96 பந்துகளில் 111 ரன்களை குவித்ததன் மூலம் இளைஞர்களின் ஹீரோ ஆனார்.

உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடிக்கொண்டிருந்த ரிஷப் பந்த், 2016-ம் ஆண்டில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்தார். இதில் ஒரு போட்டியில் 18 பந்துகளில் 50 ரன்களையும், மற்றொரு போட்டியில் 96 பந்துகளில் 111 ரன்களையும் குவித்ததன் மூலம் இளைஞர்களின் ஹீரோ ஆனார். இதுதான் பந்த்தின் தொடக்கமாக இருந்தது.

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இந்திய அணிக்குள் நுழைந்த பந்த், அவரது வெற்றிடத்தை மிகச் சிறப்பாக நிரப்பி வருகிறது. பல போட்டிகளில் தோனியைவிட இன்னும் ஒரு பெடி மேலே சென்று சாதனைகளைப் படைத்து வருகிறார். இப்படியே போனால் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர்களான கில்கிறிஸ்ட், சங்ககரா, தோனி வரிசையில் ரிஷப் பந்த்தும் இடம்பெறும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...