No menu items!

கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் காதல்?

கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் காதல்?

“உன்னைப்போன்ற பெண் எனது வாழ்க்கையில் இணைவதை நான் பெருமையாகக் கருதுகிறேன். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க எனது வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். இதன்மூலம் மஞ்சிமாவுடனான காதலை கவுதம் கார்த்திக் உறுதிப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் லேட்டஸ்டாக கிசுகிசுக்கப்படும் காதல் ஜோடி கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும்தான். ‘தேவராட்டம்’ படத்தில் ஜோடியாக நடித்த இவர்களிடையே நிஜத்திலும் காதல் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.

மலையாள சினிமாவில் 1997-ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்தவர் மஞ்சிமா மோகன். பின்னர் சில ஆண்டுகள் ஒதுங்கியிருந்த அவர், 2015-ம் ஆண்டு நிவின் பாலியுடன் ‘ஒரு வடக்கன் செல்பி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆரம்பத்தில் மலையாளப் படங்களில் மட்டும் நாயகியாக நடித்த மஞ்சிமா, பின்னர் ‘அச்சம் என்பது மடமையடா’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘தேவராட்டம்’ உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மஞ்சிமா மோகன் கவுதம் கார்த்திக்

இந்தச் சூழலில்தான் மஞ்சிமா மோகனும் கவுதம் கார்த்திக்கும் காதலிப்பதாகவும், அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் செய்திகள் வெளிவரத் தொடங்கின. ஆரம்பத்தில் இருவரும் இதுபற்றி ஏதும் சொல்லாமல் இருந்தனர், ஆனால் தற்போது இருவரும் அதைப்பற்றி மனம்திறந்து பேசத் தொடங்கியுள்ளனர்.

மஞ்சிமா மோகனின் பிறந்த நாளையொட்டி சமூக வலைதளத்தில் கவுதம் கார்த்திக் அவரது படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “உன்னைப்போன்ற பெண் எனது வாழ்க்கையில் இணைவதை நான் பெருமையாகக் கருதுகிறேன். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க எனது வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். இதன்மூலம் மஞ்சிமாவுடனான காதலை கவுதம் கார்த்திக் உறுதிப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில் காதல் தொடர்பான செய்திகளை மஞ்சிமா மோகன் மறுத்துள்ளார். “எனக்கும் கவுதம் கார்த்திக்கிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. நாங்கள் சக நடிகர்களே தவிர எங்களுக்குள் பர்சனலாக எந்த விஷயமும் இல்லை” என்று மலையாள சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் மஞ்சிமா மோகன்.

மேலும் “இதுகுறித்து பலமுறை விளக்கம் கொடுத்தும், இதே செய்தி மீண்டும், மீண்டும் வருவது மனவேதனை அளிக்கிறது. என் பெற்றோர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற கேள்வி எனக்கு பெரிய அளவில் வருத்தத்தை தருகிறது. ஆனால் அவர்களும் இந்த செய்தியை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பதில் பெரும் மகிழ்ச்சி.

மூன்று வயதிலிருந்தே நான் சினிமாவில் இருக்கிறேன் மக்களிடம் திருமணம் குறித்து நான் ஏன் மறைக்க வேண்டும். என் திருமணம் குறித்து மக்களுக்கு நானே அறிவிப்பேன் இப்படி தவறான செய்திகளுக்கு இனிமேல் ரியாக்ட் செய்யபோவதும் இல்லை. கண்டுக்கொள்ளப் போவதும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

மஞ்சிமா – கவுதம் கார்த்திக் காதல் விவகாரத்தில் இருவரும் 2 கோணங்களில் குழப்ப தலைமுடியைப் பிய்த்துக்கொள்கிறார்கள் ரசிகர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...