No menu items!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – மாலை 6 மணி நிலவரப்படி 77.73% வாக்குப் பதிவு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – மாலை 6 மணி நிலவரப்படி 77.73% வாக்குப் பதிவு!

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.  278 வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஜூலை 10) காலை 7 மணிக்கு தொடங்கியது.

வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற தேர்தல் ஆணையம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தி, நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.  திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.

பனையபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் களமிறங்கியுள்ள பாமக வேட்பாளர் சி.அன்புமணி தனது வாக்கினை செலுத்தினார்.  அதேபோல் விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தனது குடும்பத்தினருடன் அன்னியூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள 42வது வாக்குச்சாவடியில், தனது வாக்கினை பதிவு செய்தார்.

மாலை 6 மணி நிலவரப்படி 77.73% வாக்குகள் பதிவாதியுள்ளன. இந்த நிலையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 278 வாக்குச்சாவடிகளிலும் பூத் ஏஜென்ட் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகின்ற 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...